வாய்ப்பை தவற விட்டது மட்டுமல்ல,தன் கடமையிலிருந்தும் தவறி விட்டது பாஜக!

February 25, 2018

ஆறு.தர்மபூபதி

image

கம்யூனிஸ்ட் தலைவர் ராஜா உச்ச நீதி மன்ற நீதிபதி செல்லமேஸ்வருடன் ரகசிய சந்திப்பு நடத்தியது அவருக்கும் செல்லமேஸ்வருக்கும் உள்ள தொடர்பு அம்பலமானது.
000
ஒரு அரசியல்வாதி பதவியில் இருக்கும் ஒரு நீதிபதியை தனது இல்லத்தில் சந்தித்தது முன்பின் நடந்திராதது நாட்டில் பிரிவினை வாதம் நக்சல் ஆதரவு வாதம் பேசும் ஒரு அரசியல் வாதி உச்ச நீதி மன்ற நீதிபதியுடன் தொடர்பு கொண்டு தங்கள் திட்டத்தை நீதித்துறையின் மூலம் நிறைவேற்றுவது இந்திய அரசியலைமப்பு சட்டத்திற்கு விடப்பட்டுள்ள சவால்.
000
ஆனால் இதை வெறுமனே கண்டித்துவிட்டு காணமல் இருப்பது போல நடந்து கொண்ட அரசியல் கட்சிகளின் நிலை கண்டு வெட்கப்படுகிறேன்.
000
இதுவே ஒரு ஆளும் கட்சி தலைவர் சந்தித்திருந்தால் இந்த எதிர்கட்சிகள் என்ன குதி குதித்திருக்கும்?
பாராளுமன்றத்தில் இது குறித்து குரல் எழுப்பியிருக்க மாட்டார்களா?
அந்த நீதிபதியை பதவியிறக்கம் செய்திருக்க மாட்டார்களா?
இந்த ராஜா தேசதுரோகி.பிரிவினை வாதத்திற்கும் கிருத்துவ மெசினரிகளுக்கும் பிரதிநிதியாக இயங்கி வருபவர்.
000
கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர்.இவரது பதவிக்காலம் முடிந்தால் மீண்டும் காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்பி பதவியை பெறுவதில் முனைப்புடன் இருக்கும் தேசதுரோகி.ஆளும் கட்சி எம்பி உச்ச நீதிமன்ற ணிதிபதியை இப்படி ரகசியமாக சந்தித்திருந்தால் இதே ராஜா எப்படி அதை எதிர்த்து குரல் கொடுத்திருப்பார்.
எண்ணிப்பாருங்கள்
000
ஒரு அரசியல் கட்சி தன் எண்ணத்ததை நிறைவேற்ற அரசியல் சார்பற்று இருக்க வேண்டிய நீதிபதி துணை போனால் நீதியின் நிலைமை என்ன?
000
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் (ஒரு சில அரசியல் கட்சியின் ஆசைக்கேற்ப) நாடத்தை அரங்கேற்றுகிறார்கள்.நாடகம் முடிந்ததும் (இயக்குனர்) ராஜா( நல்லபடியாக நாங்கள் சொன்னபடி நடித்தீர்கள் என்று பாராட்டி ) கைகுலுக்குகிறார். (தயாரிப்பாளர்) ராகுல் நாடகம் பற்றிய விமர்சனத்தை திட்டமிட்டபடி பத்திரிக்கையாளர்களைக் கூட்டி படிக்கிறார்.
000
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை எதிர்கட்சிகள் சில நீதிபதிகள் சிலரின் துணை கொண்டு வீழ்த்த முயற்சிப்பது எவ்வளவு பெரிய ஜன நாயகப் படுகொலை?
000
அந்த நீதிபதியும் அரசியல்வாதியும். பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டாமா?
000
இந்த வாய்ப்பை தவற விட்டதுமட்டுமல்ல,தன் கடமையிலிருந்தும் தவறி விட்டது பாஜக.

Advertisements

மணிமேகலையும் ஊழ்வினையும்…..

July 11, 2017

தர்மபூபதி ஆறுமுகம்

சங்க கால இலக்கியங்களில் மறுபிறவி குறித்தும் ஊழ்வினைகளால் மறுபிறவியில் எவ்வாறு பிறப்பெடுக்கிறார்கள் என்பதும் இலக்கியங்களின் மைய கருத்தாக இருந்து வந்திருக்கிறது.அந்த வகையில் சிலப்பதிகாரமும்,மணிமேகலையும் முக்கியமானவையாகும்.சிலப்பதிகாரத்தை தொடர்ந்து உருவான  இலக்கியம் மணிமேகலையாகும்.சிலப்பதிகார காவிய நாயகிகள் இருவர்.கண்ணகி,மாதவி.அந்த மாதவியின் மகள் தான் மணிமேகலை – இலக்கியத்தின் நாயகி. இந்த மணிமேகலை என்ற காவிய பாத்திரத்தைச் சுற்றி ஆதிரை,காய கண்டிகை,உதயணன் என்ற பாத்திரங்கள் உலாவருகிறது.அந்த அற்புதமான கதாபாத்திரங்களின் காவிய வரலாற்றையும் ஊழ்வினையின் செயல்பாட்டினையும் அற்புதமாக தந்திருக்கிறார் சீத்தலை சாத்தனார்.

சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவன் கோவலனின் மனைவி கண்ணகி. கோவலனின் காதலி கணிகையர் குலத்தைச் சார்ந்த மாதவி. கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவள் “மணி மேகலை”. மரக்கலம் உடைந்து, தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த தன் முன்னோர்களில் ஒருவனைக் காப்பாற்றிக் கரைசேர்த்தது “மணி மேகலா தெய்வம்”, அந்த தெய்வத்தின் மீது உள்ள பக்தியின் காரணமாகத் தனக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு “மணிமேகலை” எனப் பெயர் சூட்டினான் கோவலன். கடலில் பயணம் மேற்கொள்ளும் நல்லோருக்கு இடுக்கண் வருமாயின் அவர்களின் துயரைத் தீர்க்கும் கடற்காவல் தெய்வத்தாய் “மணிமேகலா தெய்வம்” ஆகும்.

பொருள் ஈட்டுவதற்காக மதுரை சென்ற கோவலன்,  பாண்டிய அரசியின் சிலம்பு ஒன்றினைத் திருடிய கள்வன் என்று பழி சுமத்தப்பட்டுக் கொல்லப்படுகிறான். அதனை அறிந்த மாதவி தன் பொருட்களை எல்லாம் போதி மரத்தின் கீழ் அறவண அடிகள் முன்னர்த் தானம் செய்து துறவறம் ஏற்கிறாள்.கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள். தன் பெண்ணான மணிமேகலையையும் துறவறத்தில் ஈடுபடுத்துகிறாள்.

வழக்கம்போல பூம்புகாரில் இந்திராவிழா நடைபெறுகிறது.இந்திரவிழாவில் நாடக மடந்தையரின் ஆடலும் பாடலும் முதன்மையானவை.ஆனால் அந்த ஆண்டு மாதவியும் மணிமேகலையும் பங்கேற்காத விழாவாக இந்திர விழா நடைபெறுகிறது. இதனால் ஊர் மக்கள் அவர்களைப் பற்றிப் பழி பேசுகின்றனர்.  ஊர் பழிக்கவே,  மாதவியின் தாயான சித்ராபதி,மாதவியின் தோழி வயந்தமாலையை அழைத்து ஊர்ப் பழியைக் கூறி மாதவியை அழைத்து வருமாறு கூறுகிறாள். ஊர்பழியைத் தீர்க்க வயந்தமாலை மாதவி மணிமேகலை இருவரையும் இந்திர விழாவிற்கு வருமாறு வேண்டுகிறாள்.ஆனால் மாதவி தான் கொண்ட ஒழுக்கத்தையும் மணிமேகலையின் உறுதியையும் விளக்கிக் கூறுகிறாள்.இனிமேற்கொண்டு எந்த ஆடல்பாடல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கப் போவதில்லை என்றும், இனி தங்களது வாழ்வு புதிய பாதையில் செல்லப் போவதையும் மாதவி உறுதிபடக் கூறுகிறாள்

காவலன் பேரூர் கனையெரி ஊட்டிய
மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை …
(ஊர் அலர் உரைத்த காதை, 54-57)

என்றும் உரைக்கிறாள். மணிமேகலையை ‘மாபெரும் பத்தினி கண்ணகியின் மகள்’ என்று சொல்வதன் மூலம் மணிமேகலையின் வாழ்வுப் போக்கின் திசையைத் தெளிவாக உணர்த்திவிடுகிறாள்.

கோவலன்,  கண்ணகி,  மாதவி ஆகிய மூவருக்கும் ஏற்பட்ட துன்பங்களை மாதவி வயந்தமாலையிடம் கூறியதைக் கேட்டு, துறவறத்தில் மூழ்கி புதுப் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்ட மணிமேகலையின் கண்களில் ஆறாகப் பெருக்கெடுக்கிறது.புத்தபெருமானுக்கு பூமாலை கட்டிக்கொண்டிருந்த மணிமேகலையின் கண்கள் ஆறாகப் பெருக்கெடுத்து கட்டிய பூமாலைகள் மீது விழுந்து நனைக்கிறது.இதைக் கண்ணுற்ற மாதவி,வேறு பூக்களை பறித்து மாலை தொடுக்குமாறு கூறுகிறாள். மணிமேகலையும் அவள் தோழி சுதமதியும் உவவனம் என்னும் சோலைக்குச் செல்கின்றனர்.

மணிமேகலையின் மீது காதல் கொண்டிருந்த அந்நாட்டு இளவரசன் உதயகுமரன் அவளைத்தேடி உவவனத்திற்கு வருகிறான். அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ள எண்ணிய மணிமேகலை அங்கிருந்த பளிங்கினால் அமைக்கப்பட்ட பளிக்கறை மண்டபத்தில் புகுந்துவிடுகிறாள். உதயகுமரன் பளிக்கறைக்குள்ளே செல்ல வழி தெரியாமையால் மணிமேகலையைப் பலவாறு இழித்துக் கூறிவிட்டுத் திரும்பிச் சென்றுவிடுகிறான்.   உதயகுமரன் சென்றபின் மணிமேகலை வெளியே வருகிறாள். சுதமதியிடம் தன் நெஞ்சமும் உதயகுமரனை நாடுவதை எடுத்து உரைக்கிறாள்.தனது நெஞ்சம் ஏன் இப்படித் தடுமாறுகிறது என்பதை தோழியிடம் கூறுகிறாள்.அதை மாற்ற வேண்டும் என்ற உறுதியும் கொள்கிறாள். அப்போது இந்திர விழாவினைக் காண வந்த மணிமேகலா தெய்வம் மணிமேகலையின் நிலையை அறிந்துகொள்கிறது.    எனவே மணிமேகலையையும் சுதமதியையும் உதயகுமரனிடமிருந்து தப்புவிக்க அவர்களைச் சக்கரவாளக் கோட்டத்திற்குச் செல்லுமாறு கூறுகிறது. மேலும் சக்கரவாளக் கோட்டத்தின் வரலாற்றையும் கூறுகிறது. இதற்குள் இரவுப் பொழுதாகிறது. சுதமதி அங்கேயே உறங்கிவிடுகிறாள். உறங்க ஆரம்பித்த மணிமேகலையை மணிமேகலா தெய்வம் உவவனத்திலிருந்து முப்பது யோசனைத் தூரம் வான் வழியாக எடுத்துச் சென்று மணிபல்லவம் என்னும் தீவில் சேர்ப்பித்துவிட்டுச் செல்கிறது.

மணிபல்லவத் தீவிலே தனியாக விடப்பட்ட மணிமேகலை விழித்தெழுந்து தனிமையால் துன்புற்று அழத் தொடங்குகிறாள். அப்போது அவள் முன் புத்தர் அமர்ந்து அறம் உரைத்த ஆசனமான புத்த தரும பீடிகை தோன்றுகிறது. அதைக் காண்போருக்கு அவர்களுடைய பழம்பிறப்புகள் விளங்கும். மணிமேகலை அதனை வணங்குகிறாள்.  அதன் மூலம் தன் பழம்பிறப்பை உணர்கிறாள்.

முற்பிறப்பில் அசோதர நாட்டு மன்னன் இரவிவன்மன் என்பவனுக்கும் அரசி அமுதபதி என்பவளுக்கும் இலக்குமி என்னும் மகளாகப் பிறந்தாள் மணிமேகலை. செல்வச்செழிப்புடனும் வனப்புடனும் வளர்ந்த லக்குமி தனது மனதுக்குப் பிடித்த ராகுலனை திருமணம் செய்து கொள்கிறாள்.இனிமையான இல்லறம் தொடர்கிறது.ஆனால் காலன் பாம்புருவில் வந்து ராகுலனை தீண்டி,எம உலகிற்கு அழைத்து செல்கிறான்.தனது பாசக் கணவனின் உடல் தீயிட்டு கொளுத்தப்படும்போது அந்த சிதையில் தானும் புகுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறாள் லக்குமி.இவ்வாறு தனது முற்பிறவியின் ரகசியங்களை அறிந்து கொள்கிறாள் மாதவி.அந்த ராகுலன் தான் இந்த பிறவியில் உதயணன் என்பதையும் அதனாலேயே தன் நெஞ்சம் அவனை நாடுகிறது என்பதையும் புரிந்து கொள்கிறாள் மணிமேகலை. இவைகளையெல்லாம் மணிமேகலைக்கு புரியவைத்த மணிமேகலா தெய்வம்,  மணிமேகலைக்கு அவள் விரும்பும் வேற்று உருவத்தை அடைவதற்குரிய மந்திரத்தையும்,  வான்வழியாகச் சென்று வர உதவும் மந்திரத்தையும்,  பசியைப் போக்கும் மற்றொரு பெரிய மந்திரத்தையும் உரைத்துவிட்டுச் செல்கிறது.

மணிமேகலை அங்குள்ள கோமுகிப் பொய்கையை வலம் வருகிறாள். அப்போது பொய்கையில் தோன்றிய அமுதசுரபி மணிமேகலையின் கையில் வந்து சேர்கிறது. அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலை வான்வழியே புகார் நகரை அடைகிறாள். அறவண அடிகளையும் மாதவியையும் சந்தித்து நடந்தவற்றைக் கூறுகிறாள். மணிமேகலை அறவண அடிகளை வணங்கி, அமுதசுரபியை ஏந்தியவாறு புகார் நகர வீதிக்கு வருகிறாள். அவளைப் புகார் நகர மக்கள் சூழ்ந்துகொள்கின்றனர்.  அவர்களில் வித்தியாதர மங்கையாகிய காயசண்டிகை என்பவள், கற்பில் சிறந்தவளான ஆதிரையிடம் முதல் பிச்சை பெறுமாறு கூறுகிறாள்.

புகார் நகரம் வணிகர்களுக்கும் வணிகத்திற்கும் பெயர் போனது.செல்வ செழிப்போடு வாழ்ந்த வணிகர்கள் சிலர் அவ்வப்போது கணிகையர்களோடு சிலகாலம் வாழ்வதும்,பிறகு ஈட்டிய பொருட்களை தொலைத்து மீள்வதும் வாடிக்கையான ஒன்று.அப்படிப்பட்ட வணிகர்களில் சாதுவான் என்பவரும் ஒருவர்.

ஆதிரையின் கணவன் சாதுவன். அவன் தீய ஒழுக்கம் கொண்டு கணிகை ஒருத்தியுடன் வாழ்ந்து வந்தான். அவனுடைய பொருட்கள் தீர்ந்தபின் கணிகை அவனை வீட்டை விட்டு வெளியேற்றினாள். சாதுவன் பொருள் ஈட்டுவதற்காக வணிகர்களுடன் கப்பலில் சென்றான். கடும் காற்றால் கப்பல் கவிழ்ந்தது.  சாதுவன் தப்பி நாகர்கள் வாழும் மலைப்பக்கம் சேர்ந்தான். கப்பலில் தப்பிய சிலர் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர்.  சாதுவன் உயிரோடு இருப்பதை அறியாத அவர்கள் அவன் இறந்து விட்டதாகக் கூறினர்.  அதனைக் கேட்ட ஆதிரை தீயில் பாய்ந்து உயிர்விடத் துணிந்தாள்.  தீயில் குதித்தாள்.  ஆனால் தீ அவளைச் சுடவில்லை.  ஆதிரை ‘தீயும் சுடாத பாவியானேன்’  என்று வருந்தினாள். அப்போது ‘உன் கணவன் இறக்கவில்லை. விரைவில் திரும்புவான்’ என அசரீரி கேட்டது. ஆதிரை மகிழ்ச்சியோடு வீடு திரும்பி நல்ல அறங்களைச் செய்து வந்தாள்.

கடல் கொந்தளிப்பிலிருந்து உயிர்தப்பி நாகர்மலையைச் சென்றடைந்த சாதுவனை நாகர்கள் பிடித்து அவனை உண்ண முயன்றனர்.  சாதுவன் நாகர்மொழியை அறிந்திருந்ததால் நாகர்களின் தலைவனோடு பேசி அவர்களுக்குக் கொல்லாமை அறத்தை அறிவுறுத்தினான். நல்வினை, தீவினை ஆகியன பற்றி விளக்கமாக எடுத்துரைத்தான்.  நல்லறிவு பெற்ற நாகர் தலைவன்,  சாதுவனுக்குப் பொன்னும் பொருளும் அள்ளித் தந்தான்.  அவற்றைப் பெற்று அங்கு வந்த சந்திரதத்தன் கப்பலில் சாதுவன் மீண்டான்.  ஆதிரை கணவனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள்.

ஆதிரையின் வரலாற்றைக் கூறி கற்பில் சிறந்தவளான ஆதிரையிடம் முதல் பிச்சை பெறுமாறு காயசண்டிகை கூற,  மணிமேகலை ஆதிரை வீட்டினுள் நுழைகிறாள்.  ஆதிரை பிச்சையிட்டதும் அமுதசுரபியில் உணவு எடுக்க எடுக்கக் குறையாது வந்து கொண்டே இருந்தது. காயசண்டிகை மணிமேகலையிடம் ‘‘தாயே!  என் தீராப்பசியைத் தீர்த்தருள வேண்டும்’’ என வேண்டுகிறாள். மணிமேகலை ஒரு பிடி உணவு அள்ளியிட அவள் பசி தீர்ந்தது. பின் காயசண்டிகை தனக்கு தீராப்பசி ஏற்படக்காரணமான சாபத்தை மணிமேகலையிடம் கூறுகிறாள்.

“வடதிசையில் காஞ்சனபுரம் என்பது என் ஊர். காவிரிப் பூம்பட்டினத்தில் நடைபெறும் இந்திர விழாவைக் காண நானும் என் கணவனும் வான் வழியே பறந்து வந்தோம். இடையே ஓர் ஆற்றங்கரையில் தங்கினோம். அங்கு விருச்சிகன் என்ற முனிவன் நீராடிவிட்டு வந்து உண்பதற்காக ஒரு பெரிய நாவல் கனியைத் தேக்கு இலையில் வைத்துவிட்டுச் சென்றிருந்தான். நான் என் தீவினையால் அக்கனியை என் காலால் சிதைத்துவிட்டேன். நீராடிவிட்டுத் திரும்பிய முனிவன் சினந்து, ‘இக்கனி பன்னிரண்டாண்டுக்கு ஒருமுறை ஒரு கனியைத் தரும் நாவல் மரத்தில் உண்டானது. இதை உண்பவர்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பசியில்லாமல் இருப்பர்.   நான் பன்னிரண்டாண்டு நோன்பிருந்து இதை உண்ணும் வழக்கமுடையவன்.  இதை நீ சிதைத்தாய்.  ஆகவே இனி நீ வான் வழியே செல்லும் சக்தியை இழப்பாய். யானைத் தீ என்னும் தீராப்பசி நோயால் துன்பப்படுவாய். பன்னிரண்டு ஆண்டுக்குப்பின் கிடைக்கும் நாவல் கனியை நான் உண்ணும் நாளில் உன் பசி தீர்வதாக’ எனச் சபித்தான்.  முனிவன் சொன்ன பன்னிரண்டு ஆண்டுகள் முடியும் நாள் இதுபோலும், உன்கையால் உணவு பெற்றுப் பசி தீர்ந்தேன்” என்று கூறிய காயசண்டிகை தன் நாட்டிற்குத் திரும்பிச் செல்கிறாள்.

மணிமேகலை,உதயகுமரன் தன்னை அடையாளம் கண்டு கொள்ளாத வகையில் காயசண்டிகையின் வடிவம் கொண்டு பசிப்பிணி தீர்க்கும் நல்லறத்தைப் புரிந்து வருகிறாள். காயசண்டிகையின் வடிவில் இருப்பவள் மணிமேகலையே என்று அறிந்த உதயகுமரன் அவளை அடைய முற்படுகிறான்.

காயசண்டிகையை சந்திக்க வந்த அவள் கணவன் காஞ்சனன், மாற்று உருவில் இருக்கும் மணிமேகலையை தனது மனைவி எனத் தவறாக எண்ணி,தகாது நடக்கும் உதயணனை தனது வாளால் வெட்டிக் கொல்கிறான்.அங்கே இருந்த கந்திற்பாவை காஞ்சனனுக்கு,நடந்த உண்மைகளை சொல்கிறது. அதுமட்டுமல்லாது காயசண்டிகை ஊர் திரும்பும்போது யாரும் மேலே பறக்கக் கூடாத விந்திய மலை மீது பறந்து சென்றதையும் அதனால் மலையைக் காக்கும் விந்தாகடிகை அவளை இழுத்துத் தன் வயிற்றுக்குள் அடக்கிக் கொண்டதையும் கூறுகிறது. காஞ்சனன் வருந்தி ஊர் திரும்புகிறான்.

உதயகுமரன் இறப்பிற்கு மணிமேகலையே காரணம் என எண்ணிய அரசன் அவளைச் சிறையில் இடுகிறான். அரசமாதேவி தன் மகன் மேல் கொண்ட பாசத்தினால் மணிமேகலையை வஞ்சித்து வருத்திட முயல்கிறாள்.  ஆனால் மணிமேகலை இக்கொடுஞ் செயல்களால் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு அஞ்சித் தன் பிழையினை உணர்கிறாள்.  மணிமேகலை அவளுக்கு நல்லறங்களைப் போதிக்கிறாள்.  காமத்தின் கொடுமை, கொலையின் கொடுமை, கள்ளின் கொடுமை, பொய்யின் தீமை, களவின் துன்பம் எனத் தீய குற்றங்களின் தன்மையை உணர்த்துகிறாள்.  பசிபோக்குவதும் உயிர்களிடத்து அன்பு செலுத்துவதுமே அறம் என்கிறாள்.  அப்போது அங்கு வந்த அறவண அடிகள் அரசிக்கு மேலும் பல அறநெறிகளை அருளுகின்றார். மணிமேகலை அனைவரையும் வணங்கிச் சாவக நாட்டிற்குச் செல்கிறாள்.

சாவக நாட்டில் புண்ணியராசனாகப் பிறந்திருந்த ஆபுத்திரனைச் சந்திக்கிறாள்.  அவன் தன் பழம் பிறப்பை உணர்ந்து கொள்ள மணிபல்லவத் தீவிற்குச் செல்லுமாறு தூண்டுகிறாள். தானும் மணிபல்லவத் தீவை அடைகிறாள்.  அங்குப் புண்ணியராசன் தன் பிறப்பை உணர்ந்து கொள்கிறான்.  அப்போது காவல்தெய்வமான தீவதிலகை மணிமேகலையிடம்,  கோவலனின் முன்னோன் ஒருவன் கடலில் விழுந்து தவித்தபோது,  மணிமேகலா தெய்வம் அவனைக் காப்பாற்றிக் கரை சேர்த்தது.  உயிர்தப்பிய அவன் தான தருமங்கள் பல செய்தான். அவன் செய்த நற்செயல்களை அறிந்து கொள்ள வஞ்சி நகருக்குச் செல்லுமாறு கூறுகிறது.  மணிமேகலை புண்ணியராசனுக்கு அறம் உரைத்துப் பின் வஞ்சி நகருக்குப் புறப்படுகிறாள்.

மணிமேகலை வஞ்சி மாநகரை அடைந்து,   அங்கிருந்த சமயக் கணக்கராகிய அளவைவாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி,  பூதவாதி ஆகிய பலரும் தம்தம் சமயத்தின் நுண் பொருட்களை உரைக்கக் கேட்டு அறிகிறாள்.  அவள் மனம் அமைதி பெறவில்லை.  அங்கிருந்து காஞ்சி மாநகரம் செல்கிறாள்.  அங்கு அறவண அடிகளைச் சந்தித்து மெய்ப்பொருள் உரைத்தருளுமாறு வேண்டுகிறாள்.  அறவண அடிகள் மணிமேகலைக்குப் பிறர் மதமும் தம்மதமும் எடுத்துரைத்து மெய்ப்பொருளாகிய தரும நெறியின் நுண்மையான பொருட்களை விளக்குகிறார். மணிமேகலை அவர் உணர்த்திய ஞான விளக்கின் துணையால் தெளிவு பெறுகிறாள்.

முடிவில் ‘என் பிறப்புக்குக் காரணமாகிய குற்றங்கள் நீங்குக’  என வேண்டி நோன்பு நோற்கத் தொடங்குகிறாள்.மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.

நாராய்,நாராய்,செங்கால் நாராய்!

June 26, 2017

ஆறு.தர்மபூபதி

இன்றைக்கு தினமணியில்(26.6.2017) செய்தி,தலைப்பு:

image

இந்த தலைப்பை பார்த்ததும் அன்றைய புலவர்களும் இன்றைய கவிஞர்களுமே நினைவிற்கு வந்தனர். அந்த நினவிலேயே இந்த சங்ககால தனிப்பாடல் சுவையை சிறிய வயதில் படிக்கும் காலத்தில் சுவைத்திருந்தாலும் இப்போதும் அதே சுவை.

அந்தக்காலத்திலெல்லாம் இன்றைய கவிஞர்கள் போன்று அன்றைய புலவர்கள் இல்லை.அன்றைய புலவர்கள் வசதியற்று வாழவழியில்லாமல் ஒவ்வொரு ஊராக அலைந்து மன்னர்களைப் பார்த்துப் பாடி பரிசுகள் பெற்று வாழ்ந்த காலம்.இன்று போல பைஜாமா மாட்டி ஒப்பனை செய்து வாயாலே ஜாலங்கள் செய்ததைப் போன்று அன்றைய புலவர்கள் இல்லை வறுமை வாட்டினாலும் புலமை வாடாத பண்டிதர்கள் அவர்கள்.பல மொழிகளைக் கரைத்துக் குடித்து பாண்டித்யம் பெற்றவர்கள்.அப்படி இருந்தால் தான் அந்தக்காலத்தில் அவர்கள் புலவர்களாக இருக்க முடியும்.இன்றைக்கு போல் ஒரு மொழியை அரை குறையாக தெரிந்து கொண்டு பைஜாமாவைப் போட்டுக் கொண்டு தனது குரல் வளத்தால் மூக்கிலே மூச்சை மாற்றி ஏற்ற இறக்கத்தினுடன் பேசி விட்டால் கவிஞன் என்கிறோம்.ஆனால் புலவர்கள் அன்று அப்படியில்லை.அவர்களது வாழ்விலே லட்சுமி இல்லையென்றாலும் நாவிலே சரஸ்வதி இருப்பாள்.அவ்வளவு புலமை உடையவர்கள்.பல மொழிகளை கற்றரிந்தவர்கள்.அதனால்தானே மஹாபாரதத்தையும் வால்மீகி ராமாயணத்தையும் தமிழிலே வில்லிபாரதமாகவும் கம்பராமாயணமாகவும் நமக்கு தந்தார்கள். ஆக அவர்களெல்லாம் புலவர்கள் என்று போற்றப்பட்டார்கள்.

இன்றைக்கு இவர்கள் இவர்களாகவே தங்களுக்கு கவிஞர் பட்டம் சூட்டிக்கொள்ளுகிறார்கள். கவிப்பேரரசு என்று தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்கள். சுருக்கமாக சொன்னால் இண்ட்றைய கவிஞர்கள் மொத்த வியாபாரிகள்.அன்றைய புலவர்கள் தன்னை அடகு வைத்தாலும் தன் புலமையை அடகு வைக்காதவர்கள். அப்படிப்பட்ட ஒரு புலவர்தான் சத்திமுத்தப் புலவர். பாருங்களேன் இந்த புலவரது உண்மையான இயற்பெயர் முட தெரியவில்லை. இவரது உண்மையான பெயர் தெரியாததால் அவர் வசித்த ஊரின் பெயரிலேயே (சத்திமுற்றம்) இந்தப் புலவர் அறியப்படுகிறார். இன்றைய கவிஞர்கள் இப்படி இருப்பார்களா என்று யோசித்துப் பாருங்கள்.
தூது அனுப்புதல் என்பது நடைமுறையின் பாற்பட்டது அல்ல. சொல்ல விரும்பும் ஒரு விசயத்தைக் கவிநயத்துடன் சொல்வதற்கான ஒரு கற்பனை வடிவமே இது. தலைவன் தலைவி என்ற பாத்திரங்களும் உருவகங்களாகவே அமைவதும் உண்டு. தூதுக்களில் தலைவன் தலைவியரிடையே பிரிவு ஏற்படும்போது ஒருவர் தனது பிரிவுத்துயரை மற்றவருக்கு அறிவிக்கும்படி அஃறிணைப்பொருட்களைத் தூது செல்ல ஏவுவது போல அமைகின்றன. தூது செல்ல ஏவப்படுகின்றவையும் பலவாறாக இருக்கின்றன. அன்னம், கிளி, மான், வண்டு போன்ற உயிரினங்கள் மட்டுமன்றி, காற்று, முகில், தமிழ் என்பனவும் தூது இலக்கியங்களிலே தூது செல்ல ஏவப்படுகின்றன. அதுமட்டுமல்ல விறலியைக் கூட தூது விட்டிருக்கிறார்கள்.விறலி என்றால் இளங்குமரி.

அந்த வரிசையில் சத்திமுத்த புலவர் தனது மனைவிக்கு தூது அனுப்பினார் நாரை மூலம்.இது அனைவருமே அறிந்த பாடல் தான்.அதன் சுவையும் கற்பனையும் அலாதி.

வறுமையில் வாடிய இந்த புலவர் பாண்டிய மன்னனைப்பார்த்து, அவனை வாழ்த்திப் பாடினால் ஏதாவது பரிசு கிடைக்கும் என்று நினைத்தார். இன்று போல போக்குவர்த்து இல்லாத காலம். சக்திமுற்றம் என்ற தன் ஊரில் இருந்து நடந்தே மதுரைக்கு வந்தார். ஆனால் பாண்டிய மன்னனைப் பார்க்க முயன்றும் முடியவில்லை.தனது நிலைமையை சொல்லியும் அரண்மனை வாயில்காப்போரிடம் இவரது புலமை செல்லுபடியாகவில்லை. மனம் சோர்ந்து வருத்தத்துடன் திரும்பிய புலவர் ஒரு சத்திரத்தில் தங்குகிறார். வானத்தைப் பார்த்து பெறு மூச்சு விடுகிறார். அப்போது வானத்தில் நாரைகள் பறந்து செல்கின்றன. வானத்தில் பறந்து செல்லும் நாரைகளைப் பார்த்து இப்படிப் பாடுகிறார்:

‘’நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக்கு மரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே’’
(தனிப்பாடல்)

நாரையே, நாரையே,
சிவந்த கால்களைக் கொண்ட நாரையே,
நன்கு முற்றிய பனங்கிழங்கைப் போல் வாய் பிளந்த நாரையே,
கூர்மையான, பவளத்தைப் போல் சிவந்த அலகைக் கொண்ட நாரையே,
நீயும், உன் மனைவியும் தெற்கே உள்ள கன்னியாகுமரியில்
விளையாடி விட்டு வடக்கே சென்றால், என்னுடைய சத்திமுற்றத்துக்
குளத்தில் தங்குங்கள். அங்கே என் மனைவியைப் பார்த்து ஒரு செய்தி
சொல்லுங்கள்.
எங்கள் கூரை வீட்டின் சுவர் மழையில் நனைந்து சிதைந்திருக்கும்.
அங்கே ஓர் ஏழைப் பெண் சுவற்றுப் பல்லி ஏதாவது (சகுனம்) சொல்கிறதா
என்று (எதிர்பார்த்துக்கொண்டு ஏக்கத்துடன்) காத்திருப்பாள்.
(அவள்தான் என் மனைவி. அவளை நீங்கள் பார்த்தவுடன்)
‘எங்கள் தலைவனாகிய பாண்டியனின் ஊரில் கடுமையான வாடைக்காற்று,
குளிர், அதில் சரியான ஆடைகூட இல்லாமல் நடுநடுங்கியபடி கை கால்களால்
உடம்பைப் பொத்திக்கொண்டு, பெட்டியினுள் அடைக்கப்பட்ட பாம்பைப்போல்
மூச்சுவிடும் ஏழை ஒருவனைப் பார்த்தோம்’ என்று சேதி சொல்லிவிடுங்கள்.

இப்படி வானில் பறந்து செல்லும் நாரையைப் பார்த்து தன்னுடைய நிலைமையையும் குடும்பத்தின் நிலைமையையும் எடுத்துக் கூறியதை, நகரசோதனைக்காக மாறு வேடத்தில் அவ்வழியே சென்ற பாண்டிய மன்னன் கேட்கிறான். இவர் மீது இரக்கம் கொண்டுதான்அணிந்திருந்த சால்வையை அவர் மீது போர்த்தி விட்டு சென்று விடுகிறான்.புலவனும் யாரோ தன் மீது பரிவு கொண்டு சால்வையை போர்த்தியதாக நினைத்து உறங்கி விடுகிறார். மறு நாள் அரண்மனை காவலாளிகள் தன்னை நோக்கி வருவதைக் கண்டு அதிசியக்கிறார்.தானோ ஒரு ஏழைப்புலவன்.எம்மை நோக்கி ஏன் வருகிறார்கள் என யோசித்த வேளை,காவலர் தலைவன், புலவரை வணங்கி,மன்னன் தங்களை (புலவரைத்) தேடிக் கண்டு பிடித்து, வருத்தாது கொண்டுவரும்படி ஆணையிட்டுள்ளார் எனக் கூறி அழைத்து சென்றனர். அவைக்குவந்த புலவரை அரசன் வெகுமதி பல அளித்துக் கௌரவித்தான் புலவர் அரசனை வணங்கி தன் வறுமையை போக்கியமைக்கு நன்றி தெரிவித்து விடை பெற்றார்.

சில காலம் கழித்துப் புலவர் இன்னொரு கவிதையின் மூலம் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்:

‘’’வெறும்புற் கையும்அரி தாம்கிள்ளை சோருமென் வீட்டில் வரும்
எறும்புக்கும் ஆர்ப்பத மில்லை,முன் னாளென் இருங் கவியாம்
குறும்பைத் தவிர்த்தகுடி தாங்கியைச் சென்றுகூடியபின்
தெறும்புற் கொள்யானை கவனம் கொள்ளாமல் தெவிட்டியதே!!’’’

(பாண்டியமன்னன் பரிசு கொடுத்து ஆதரிப்பதற்கு முன், என் வீட்டில்வெறுஞ்சோறு பெறுவது கூட அரிதாகும். – கிளியும் பசிப்பிணியால்வாடி மிகவும் தளர்வினை அடையும்; வருகின்ற எறும்புகளுக்கும் ஆகாரம் கிடையாது – எனது பெரிய வறுமையாகிய சிறுமையினைப் போக்கிய மன்னனிடம் போய்ச் சேர்ந்த பின்னர், கொல்லும் செயலினை உடைத்தான புலியயையும் மிதித்துக் கொல்லா நின்ற யானையானது வாய் கொள்ளாமல் கரும்புக் கழிகளை உமிழ்ந்து சிதறியது என்பதாகும்.

என்னே அந்தக் கால புலவர்கள்! வறுமையில் வாடினாலும் வாடாத பாடல்களை வார்த்தவர்கள். அவர்கள் பாடல்கள் என்றென்றும் உயிர்த்திருக்கும்.

ரெயின் கோட்டும்,காங்கிரசும்!

February 10, 2017

ஆறு.தர்மபூபதி

நேற்றிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்த கருத்துக்கு அவையின் கண்ணியத்தை குறைக்கும் செயல் என்று. கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர்.கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் மாண்பு மிகு பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய போது,தனது அரசாங்கம் நாட்டின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு, நிறைவேற்றியுள்ள திட்டங்கள் குறித்து வரிசைப்படுத்திப் பேசினார். அப்படி பேசும்போது, காங்கிரஸ் கட்சியின் ஊழல்கள் பற்றியும், தனக்கு எதிராக அவதூறுகளையும் தனிப்பட்ட தாக்குதல்களையும் மேற்கொண்ட பல காங்கிரஸ் தலைவர்கள் குறித்து காங்கிரஸ் மவுனம் சாதிப்பது ஏன் என்று வினவினார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பண மதிப்பிழப்பு விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் அண்மையில் பேசிய போது இந்த பண மதிப்பிழப்பு விவகாரம் “அரசின் மறக்கமுடியாத நிர்வாகத் தோல்வி, சட்டரீதியான திருட்டு, திட்டமிடப்பட்ட கொள்ளை, மோடி மோசடிக்காரர்” என்று வசை பாடியிருந்தார்.
பணமதிப்பிழப்பு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தன்னைப் பற்றி இப்படி விமர்சித்தற்கு நேரம் பார்த்து பிரதமர் தனக்கே உரிய பாணியில் சரியான பதிலடியை திருப்பித் தந்தார்.  மன்மோகன் சிங் அவர்கள் கிட்டத்தட்ட 35 வருடங்களாக இந்த நாட்டின் நிதிக் கொள்கையில் தன்னை ஈடுபடுத்தி imageவந்துள்ளார். அதே சமயம் இந்த கால கட்டத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, அவர் கண் முன்னே பல ஊழல்கள் நடந்தாலும் அவர் மட்டும் கரை படியாதவராக இருந்து உள்ளார். “மழைக்கோட்டு அணிந்து கொண்டு குளிப்பது எப்படி என்கிற கலை அவருக்கு மட்டுமே நன்கு தெரியும்”, என்று மோடி பதிலடி தந்தார். இப்படியொரு தாக்குதலை எதிர்பார்க்காத காங்கிரசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த தாக்குதலில் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் குறிப்பாக ஆனந்த சர்மா, திக்விஜய் சிங், கபில் சிபல் ஆகியோர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது மன்மோகன் சிங் அவையிலேயே உட்கார்ந்திருந்தார். பிறகு ஆனந்த் சர்மா திரும்ப மன்மோகன் இருக்கைக்கு வந்து அவரை அழைத்து சென்றார். இந்த வெளிநடப்பு குறித்து பேசிய மோடி,” அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுக்கும் திறன் எங்களுக்கும் உள்ளது. இது போன்று யாராவது பேசினால் அதற்க்கான எதிர்விளைவுகளை சந்திக்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.
பாராளுமன்றத்தில் பல அரசியல் கட்சிகள் இது போன்று மற்ற அரசியல் கட்சிகளை தாக்குவதும் அதற்கு வேடிக்கையாக நையாண்டி பேசுவது ஒன்றும் புதிதல்ல.. இது போன்ற நையாண்டிகளையும் வேடிக்கையான விமர்சனங்களையும் விளையாட்டாக எடுத்துக் கொண்டு அதோடு விட்டு விடுவது வழக்கம். ஆனால் சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியினர் ஒன்றுமில்லாத பிரச்சனைகளை பூதாகரமாக்குவதும் அதை வைத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் கோஷம் எழுப்புவதும், மையப் பகுதிக்கு சென்று கோஷம் போடுவதும், சபையை ஸ்தம்பிக்க வைப்பதும், சபையை நடத்த விடாமல் செய்வதையும் தனது வாடிக்கையாக கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தாங்கள் சபையில் உள்ள மற்றவர்களை விட உயர்ந்தவர்கள், ஒரு குடும்பத்தின் விசுவாசிகள், ஆகவே சட்டத்திற்கு மேம்பட்டவர்கள், அரசியல் சாசன விதிகளுக்கு கட்டுப்படாதாவர்கள் என்று தங்களை தாங்களே உயர்வாக கருதிக் கொள்வதன் விளைவே சபையை நடத்த விடாமல் செய்வதன் பின்னணியாகும்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேச்சை வைத்துக் கொண்டு பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் அவையின் கண்ணியத்தைக் குலைப்பதாக அவர் பேச்சு உள்ளது. ஆகவே பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டனக் குரல் எழுப்பினார்கள்..அப்படி இது போன்ற  பேச்சுக்களுக்கு மன்னிப்பு கேட்பதென்றால் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டியர்வர்கள் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் தான். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தியும் துணைத்தலைவரான ராகுல் காந்தியும் மோடி அவர்களை எப்படியெல்லாம் தனிப்பட்ட முறையில் விமர்சித்ததை அவர்கள் மறந்து விட்டார்கள் போலும்!
imageகாங்கிரஸ்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் மோடி அவர்களை மரண வியாபாரி என்று மிக மோசமாக வர்ணித்தார். அதுமட்டுமல்ல விஷ விதைகளை விதைப்பவர் என்றும் கூறியிருந்தார். இப்படிப்பட்ட கண்ணியமற்ற அநாகரிகமான வார்த்தைகளை முதன் முதலாக உபயோகித்து இந்த கலாச்சாரத்தை துவக்கியவர் சோனியா காந்தியாகும். தாயின் பாதையில் பயணித்த காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி இந்திய ராணுவ வீரர்களுக்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த உத்தரவு போட்டமைக்கு ரத்த வியாபாரி என்று மோடியை ஒரு கூட்டத்தில் விமர்சித்திருந்தார்.
தங்களுடைய தலைவர்களின் பாணியில் காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் மோடியை அநாகரிகமாக, அசிங்கமாக, கண்ணியக் குறைவாக பிரதமர் மோடியை விமர்சிக்க துவங்கினார்கள். காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் மோடியை வசை பாட பயன்படுத்திய அனாகரீகமான கண்ணியக்குறைவான வார்த்தைகளின் பட்டியல்:
பிரதமர் மோடி, முன்னாள் பிரதமரைப் பற்றி வேடிக்கையாக பயன் படுத்திய ரெயின் கோட் என்ற வார்த்தை கண்ணியக் குறைவான ஒன்றாம். அப்படியென்றால் கண்ணியம் மிக்க காங்கிரஸ் தலைவர்கள் இப்போதைய பிரதமரை தாக்க பயன் படுத்திய கண்ணியம் மிக்க வார்த்தைகளைப் பாருங்கள்:
திக் விஜய் சிங் : ராவணன்
மணிசங்கர் ஐயர்: எலும்பும் கூடுகளை தன் அலமாரியில் ( “Astya Ka Saudagar” -Merchant of skeletons) அடுக்கி வைத்திருக்கும் வியாபாரி
காங்கிரஸ் எம்பி ஹூசேன் தல்வால்: மோடி ஒரு எலி (“Modi is mouse”)
குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோதவாடியா: குரங்கு,வெறி நாய், மன நிலை சரியில்லாதவர் (“Monkey, Victim of rabies”, mentally retard,”)
காங்கிரஸ் தலைவர் ரிஸ்வான்: அப்பன் பெயர் தெரியாதவன், மோசமான நடத்தை கொண்டவன் என்ற பொருள் படும் ஆபாச வார்த்தை, உதவாக்கரை (Man with no father, Badtamiz, Nalayak”)
காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி: விஷக் கிருமி (Virus)
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்: ஆண்மை இல்லாதவன் (Impotent)
முன்னாள் அமைச்சர் பேனி பிரசாத் வர்மா: பைத்தியம் பிடித்த நாய், ரவுடி, மனிதனை சாப்பிடும் மிருகம் (Mad Dog”, goon, animal, man eater.)
காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்: (மோடி அவர்களின் ஜாதியை குறிப்பிடும்படியாக): ஆயில் மசாஜ் செய்பவர்(Gangu Teli” mocking Modi’s caste)
காங்கிரஸ் எம்பி சுரேந்திர சோம காந்த் பட்டேல்: காஞ்ச்சி என்று ஜாதியைக் கூறி இகழ்ந்தது (Ghanchi”casteist remark)
காங்கிரஸ் தலைவர் சசி தரூர்:  ரத்தம் கக்குபவர் (bleeder)
காங்கிரஸ் தலைவர் எம்பி ஷாந்தாராம் நாயக்: ஹிட்லர், (கம்போடியன் கம்யூனிஸ்ட் தலைவர் போல்போட் ) அடாவடித்தனமான ரவுடி) Hitler”, Pol pot
காங்கிரஸ் தலைவர் மனிஷ் திவாரி: தாவுது இப்ரஹீம்
காங்கிரஸ் தலைவர் பி கே ஹரிபிரசாத்: அழுக்கடைந்த மூட்டைப் பூச்சி (Gandi Nali Ka Kida” (dirty insect)
(நினைவிருக்கட்டும் இந்த வார்த்தைகள் காங்கிரஸ் தலைவர்களால் உதிரப்பட்டவை. இதைத் தவிர  சமஜ்வாடி, பி எஸ் பி ,கம்யூனிஸ்ட் போன்ற மிகப் பெரிய தலைவர்களும் இதே பாணியில் மோடியை “மரியாதையான” கண்ணியமான வார்த்தைகளால் புகழ்ந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
காங்கிரசின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உபயோகித்துள்ள மரியாதையான கண்ணியமான நாகரிகமான வார்த்தைகளை படித்த பின்னர் மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள் யார் என்பதை முடிவு செய்யுங்கள். யார் கண்ணியக் குறைவானவர்கள், அநாகரீகமானவர்கள்,  தரம் தாழ்ந்தவர்கள், பாராளுமன்றத்திலிருந்து  தூக்கி எறியப்பட வேண்டியவர்கள்  யார் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
இது மட்டுமல்ல, மன்மோகன் சிங்கை அவருடைய கட்சியின் தலைவர் சோனியா காந்தி இழிவு படுத்தியது போன்று இன்னொருவர் இழிவு படுத்தி விட முடியாது. அடிமை போன்று நடத்தப்பட்டார். சோனியா காந்தி அவரை அடிமையாகவும், தரக்குறைவாக நடத்தியதற்கு பல விடீயோ ஆதரங்கள் உள்ளன.
imageராகுல் காந்தி தனது கட்சியின் ஆட்சியின் தலைவரான இந்த நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங் போட்ட ஒரு சட்ட முன்வரைவை, தான் யோக்கியன் என்று காண்பிப்பதற்காக பிரஸ் மீட்டில் நான்சென்ஸ் என்று கூறி கிழித்துப் போட்டு அவமானப்படுத்தியது கண்ணியக் குறைவான செயலல்ல போலும்.
பரவாயில்லை, இது இந்தியர்கள் அவமானப்படுத்தியது என்று வைத்துக் கொள்ளலாம். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப், மன்மோகன் சிங் அவர்களை கிராமத்துக்கார பொம்பளை (village woman) என்று வர்ணித்த போது இந்த காங்கிரஸ் பொறுக்கிகள் எங்கு போனார்கள்? அப்போதும் நாட்டின் பிரதமருக்கு ஆதரவாக கோஷம் போட்டது பாஜாகா தானே. ஆனால் இந்த வெட்கங்கெட்ட காங்கிரஸ் தலைவர்கள் அதன் பிறகு நவாஸ் செரிப்பிடம் கெஞ்சியதும்,அந்த நவாஸ் செரீப்புடன் சிக்கன் பிரியானி தின்னதும் மறக்க முடியுமா?
ஏன், ராகுல் காந்திக்கு இந்த சம்பவம் நாட்டிற்கு செய்யப்பட்ட அவமானம் என்று தோன்றவில்லை? இல்லை வெளிநாட்டு சுற்றுலாவில் மூழ்கியிருந்ததால் தெ(ளி)ரியவில்லையா?
இப்பொழுது காங்கிரஸ் தலைவர்கள் பாராளுமன்றத்தின் கண்ணியம் பற்றி பேசுகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் இவர்களுடைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பாஜாக தலைவர்களை நாய்கள் என்று பாராளுமன்றத்திற்குள் பேசினாரே, அப்போது அவையின் கண்ணியம் எங்கு போனது?
ராகுல் காந்தியும் அவருடைய அடிவருடிகளும் பிறரை தாக்கும் முன்னர், மன்னிப்பு கோரும் முன்னர் தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்வது நலம். காங்கிரசின் கலாச்சாரமும் கண்ணியமும் அனைவரும் அறிந்த ஒன்று!
ஆதாரம்:postcard,news

கோழைத்தனமான ஆண்மையில்லாத காங்கிரஸ் அரசு.

June 12, 2016

ஆறு.தர்மபூபதிimage

30 ஆண்டுகளாக சீனா……  இந்தியாவிற்கு எதிராக எடுக்காத நிலையை நரேந்திர மோடி வந்த பிறகே அந்த நாடு எடுக்க ஆரம்பித்துள்ளது!  -மணீஷ் திவாரி,  காங். செய்தி தொடர்பாளர்
உண்மை, இதில்ச ந்தேகமில்லை. காங்கிரஸ் என்ன சொல்ல வருகிறது?சீனாவிற்கு பயந்து கொண்டு இருந்திருக்க வேண்டுமென்று சொல்கிறதா? குட்ட குட்ட குனிந்து கொண்டு இருப்பதற்கு மோடி ஒன்றும் மன்மோகன் சிங் அல்ல. இப்போது சீனா ஏன் இந்தியாவைக் கண்டு பயப்படுகிறது?
சீனா காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவை அடக்கி வைத்திருந்தது. அருணாச்சல பிரதேசத்தில் அடிக்கடி ஊடுருவல்களை மேற்கொண்டு வந்தது. நமது எல்லை அருகில் ஆயிரக்கணக்கனக்கான கிமீக்கு பாதை அமைத்து விட்டது. அதை தடுத்து நிறுத்த அன்று காங்கிரஸ் அரசால் எதுவும் செய்ய இயலவில்லை. சீனா இந்தியாவின் நாற்புரமும் உள்ள நாடுகளை திட்டமிட்டு நமக்கு எதிரி நாடுகளாக  உருவாக்கி விட்டது.
இலங்கையில் ராஜபக்சே ஆட்சியில் இருந்த போது இந்தியாவின் தவறான காங்கிரசின் அணுகு முறையால் சீனாவிடம் நட்பு கொண்டது மட்டுமல்ல இலங்கைத் துறைமுகத்தை சீனாவின் கட்டுப்பாட்டிற்கு கொடுத்தது. பாஜாக ஆட்சிக்கு வந்தவுடன் இலங்கையை மீண்டும் நட்பு நாடாக முயற்சி எடுத்து சீனாவின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்தார்.
“வியட்னாமில் செயற்கைக்கோள் மையத்தை அமைத்தது இந்தியா – கலக்கத்தில் சீனா!
நியுஸ் 7 சானல் (http://ns7.tv/ta/india-build-satellite-tracking-station-vietnam-offers-eye-china.html)
புவி கண்காணிப்புத் தகவல்களை அறிவதற்காக, வியட்னாம் நாட்டில் செயற்கைக்கோள் மையத்தை இந்தியா அமைக்கவுள்ளது. 

இந்தியாவின் இந்த நடவடிக்கை சீனாவை கலக்கமடைய வைத்துள்ளது.

 இஸ்ரோ மூலம் ஏவப்படும் செயற்கைக் கோள்களை கண்காணிக்க, அந்தமான்-நிகோபார், புருனே, இந்தோனேஷியாவின் பியாக் மற்றும் மொரீஷீயசில் தரைக் கண்காணிப்பு மையங்களை இந்தியா அமைத்துள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, வியட்னாமின் ஆதரவுடன் அந்நாட்டின் ஹோசிமின் நகரில், புதிதாக கண்காணிப்பு மையம் அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. சுமார் 138 கோடி ரூபாய் செலவில் இதற்கான கட்டுமானப் பணிகளை இந்தியா மேற்கொள்ளவுள்ளது. 

இந்திய பெருங்கடல் பகுதியில் இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பெறவே, இந்த மையம் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் மூலம், சீனாவையும், சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியையும் இந்தியாவால் கண்காணிக்க முடியும் என பாதுகாப்புத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, இந்தியா மற்றும் வியட்னாமுடன் சீனா எல்லைப் பிரச்னை கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கை சீனாவை கலக்கமடைய வைத்துள்ளது.”
சீனாவிற்கும் வியட்னாமிற்கும் எல்லைத் தகராறு உண்டு. வியட்னாமின் கடலில் உரிமை கொண்டாடுகிறது சீனா. அதை தடுக்க வியட்நாம் இந்தியாவை அதன் கடல் எல்லையில் இந்தியாவின் ஓ.என்.ஜி.சி. விதேஷ் நிறுவனமும், வியட்னாமின் பெட்ரோ வியட்னாம் நிறுவனமும் தென் சீனக் கடல் பகுதியில் எண்ணெய் தூர்ப்பண பணிகளை கூட்டாக இணைந்து மேற்கொள்வது. கடல்வழிப் பாதையில் பாதுகாப்பு, கடற்கொள்ளையர்களை விரட்டியடித்தல், கடலில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உதவுதல் போன்ற முக்கிய அம்சங்கள் அடங்கிய ஒப்பந்தத்தில் இந்தியாவும் வியட்னாமும் கையொப்பமிட்டுள்ளன. இதனால் சீனா கலக்கம் அடைந்துள்ளது.
இந்தியாவை சுற்றி வளைக்க சீனா பின்னிய முத்துமாலைத்திட்டம்:
பங்களாதேசில் சீனா மேற்கொண்டிருந்த காக்ஸ் பஸாரில் உள்ள ”சொனடியா” துறைமுக அபிவிருத்தி திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது பங்களாதேசின் ‘பெய்ரா’ ஆழ் கடல் துறைமுகத்தினை மேம்படுத்தும் ஒப்பந்தத்தினை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது பங்காள தேச அரசு. மோடியின் ராஜதந்திரத்திற்கு  மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது
இதன் மூலம் இந்தியாவை சுற்றி முத்துமாலை என்ற பெயரில் சீனா உருவாக்கி வைத்த மாயவலையை மோடி முற்றிலுமாக அறுத்து விட்டார் என்றே சொல்லலாம். சீனா இந்தியாவை சுற்றி உருவாக்கி வைத்திருந்த திட்டம்தான் முத்து மாலை திட்டம், இந்த திட்டத்தின் படி இந்தியாவின் கிழக்கே பங்காள தேசத்தில் உள்ள வங்காள விரிகுடாவில் சிட்ட காங்கில் உள்ள சொனடியா துறைமுக அபிவிருத்தி திட்டம், அடுத்து தெற்கே இலங்கையில் இந்தியப் பெருங்கடலில் ராஜபக்சேயின் பெயரால் புதிதாக உருவாக்கபட்ட “ஹம்பாந் தோட்டை” துறைமுகம். அடுத்து அரபிக்கடலில் பாகிஸ்தானில் “குவாடர்” துறைமுக விரிவாக்கம் என்று இந்தியாவின் மூன்று திசையிலும் உள்ள நாடுகளில் உள்ள துறை முகங்களை கைப்பற்றி அபிவிருத்தி என்ற பெயரில் தன்னுடைய கடல் படைகளை இந்தியாவை சூழ்ந்து மூன்று திசைகளிலும் நிலை நிறுத்துவது. இது தான் சீனாவின் மாஸ்டர் பிளான். இது இந்தியாவின் கழுத்தில் போடப்படும் மாலை போல உள்ளதால் இதற்கு முத்துமாலை திட்டம் என்று பெயர் வந்தது. பிற்காலத்தில் இந்தியா-சீனா போர் வந்தால் மும்முனையில் இருந்து இந்தியாவை தாக்குவதற்கு வசதியாக இருந்தது இந்த திட்டம்.
பங்காளதேசில் சீனா துறைமுக மேம்பாட்டின் பேரில் உள்ளே நுழைந்ததையும் இலங்கையில் சீனாவின் உதவியுடன் ஹம்பா ந்தோட்டையில் துறைமுகம் அமைந்ததையும் பாகிஸ்தானில் குவாடர் துறை முகத்தை தன்னுடைய கட்டு பாட்டிற்குள் சீனா கொண்டு வந்ததையும் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு வேதனை தெரிவித்து அறிக்கை விட்டு விட்டு ஒதுங்கி கொண்டது முந்தைய காங்கிரஸ் அரசு. இத்தாலிய சோனியாவிற்கு இந்தியா மீது பெரிதாக என்ன அக்கறை இருக்க முடியும்? மோடியின் அரசு சும்மா இருக்கமுடியுமா.. இது நம்முடைய தாய் பூமியல்லவா.. சக்கர வியூகத்தை கண்டு பிடித்த நமக்கு அதை உடைக்க தெரியாதா என்ன?
பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை சீனா கையகபடுத்தியதன் மூலம் அரபிக்கடலில் இந்தியாவிற்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையையும் சீனா எளிதில் மேற்கொள்ள முடியும். இப்படி இந்தியாவை சுற்றி சக்கர வியூகம் அமைத்த சீனாவிற்கு ‘செக்’ வைக்கும் முயற்சிகளை மோடி தலைமையில் உள்ள பிஜேபி அரசு தொடர்ந்து செய்துவருகிறது.
இலங்கையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சீனாவை விரட்ட ராஜபக்சே வீட்டிற்கு அனுப்பபட்டு, மைத்ரி பால ஸ்ரீசேனா இந்தியாவின் உதவியுடன் ஆட்சிக்கு அழைத்து வரபட்டார். இதனால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தடுக்கபட்டு இந்தியாவின் கண்ட்ரோலில் வந்தது இலங்கை. அதுமட்டுமல்லாமல் சீனா மேற்கொண்டிருந்த கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம் நிறுத்தபட்டு கொழும்பு துறை­முக நகர் திட்டம், கொழும்பு துறை­முக அபி­வி­ருத்தி திட்டம், திரி­கோ­ண­மலை துறை­முக அபி­வி­ருத்தி திட்டம் ஆகிய அனைத்திலும் இந்தியா நுழைய உள்ளது.
imageஅரபிக்கடலில் உள்ள பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை மேம்படுத்தி சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தை இணைக்கும் பணியினை சீனா செய்து கொண்டு வருகிறது. இந்த குவாடர் துறைமுகம் தற்பொழுது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு செக் வைக்கும் முயற்சியாக பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்திலிருந்து 76 கி.மீ., தூரமே உள்ள ஈரானின் “சாபகார்” துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா அனுமதி பெற்றுள்ளது.
இதன்படி இந்த துறைமுகம் இந்தியாவின் கட்டுபாட்டிற்குள் வந்து விட்டது. இங்கு வேலையையும் தொடங்கி விட்டோம் என்று நிதின் கட்காரி ஏற்கனவே அறிவித்து விட்டார். அது மட்டுமல்லாமல் இப்பொழுது ஈரானின் சாபகார் துறைமுகத்திற்கு அருகிலேயே யூரியா தொழிற்சாலையை தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் சீனா, இந்தியாவை சுற்றி பங்காளதேஷ், இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நிறுவிய மாயவலையை பங்காளதேஷ், இலங்கை ஆகிய நாடுகளை இந்தியாவின் பிடிக்குள் தன்னுடைய ராஜதந்திரத்தினால் கொண்டு வந்த மோடி பாகிஸ்தானை திருத்த முடியாது என்பதால் பாகிஸ்தானிற்கு பக்கத்தில் ஈரானில் நின்று பதிலடி கொடுக்க தயாராகி விட்டார். அதேபோன்று நேபாளம் கிட்டத்தட்ட இந்திய நாட்டின் ஒரு பகுதி போன்று இருந்தது.காங்கிரசின் அஜாக்கிரதையான வெளியுறவுக் கொள்கையால் சீனாவிலிருந்து மாவோயிஸ்ட்கள் நேபாளத்தில் ஊடுருவி மன்னராட்சியை கவிழ்த்து இன்று அங்கு நேபாளம் சீனாவின் காலனியாக மாறியுள்ளது. அதை மீட்டெடுக்க மோடி முயன்று வருகிறார்.
இப்போது சீனா நம்மைக் கண்டு அஞ்சுகிறது. அணு சக்தி வழங்கும் நாடுகளின் குழுவில் இந்தியா இணைய உள்ளது .இதற்க்கான அனைத்து நாடுகளையும் இந்தியாவிற்கு ஆதற்காக குரல் கொடுக்க மோடியின் வெளிநாட்டு விஜயம் உதவியுள்ளது.சீனாவின் எதிரிகள் இன்று இந்தியாவின் நட்பு நாடுகளாகி விட்டன.
அன்னிய நாடுகள் நம்மைக் கண்டு அஞ்ச வேண்டுமே தவிர நாம் அஞ்சி வாழ்ந்தால் நமது எல்லைகள் மட்டுமல்ல ஒரு நாள் அனைத்துமே பறி போகும் சூழ்நிலைகள் வரும், கோழையாக இருந்து அனைத்தையும் இழப்பதைவிட வீரனாக இருந்து போரிடுவதே அரசனுக்கு அழகு” என்றான் சாணக்கியன்.
ஆக சீனாவைக் கண்டு காங்கிரஸ் அரசு பயந்தது. நாம் அவர்களிடம் பணிந்து போனோம். 30 ஆண்டுகளாக சீனா…… இந்தியாவிற்கு எதிராக எடுக்காத நிலையை மோடி வந்த பிறகே அந்த நாடு எடுக்க ஆரம்பித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது.
அப்படியென்றால் இதுவரை சீனா என்ன நிலையை காங்கிரஸ் ஆட்சியில் எடுத்திருந்தது என்பதை காங்கிரஸ் விளக்க வேண்டும். நமக்கு நட்பு நாடாவாகாவா இருந்தது? பகிரங்கமாக பாகிஸ்தானிற்கு ஆதரவாகவும் இந்தியாவிற்கும் எதிராகவும் சீனா செயல்பட்டு வந்தது. ரகசியமாக தனது நிலையை வலுவாக்கிக் கொண்டு இந்தியாவை சுற்றியிருந்த நாடுகளையும் தனது ஆதிக்கத்தில் கொண்டு வர முயன்று கொண்டிருந்தது. ஆனால் காங்கிரஸ் இந்த சதித்திட்டத்தை புரிந்து கொண்டாலும் எதிர் நடவடிக்கை எடுக்க பயந்த ஆண்மையிழந்த அரசாக இருந்தது. காங்கிரஸ் .இப்போது மட்டுமல்ல எப்போதுமே இந்தியா வலுவான ஆதிக்கம் நிறைந்த நாடாக இருக்க விரும்பவில்லை. ஐக்கிய நாட்டு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவி வழங்கியபோது அதை நேரு மறுத்ததின் பயனை இன்று அனுபவிக்கிறோம். அதுமட்டுமல்ல நேருவின் பஞ்சசீலக் கொள்கையால் கேவலமாக போரில் சீனாவிடம் தோற்றுப் போனதையும் மக்கள் மறந்து விடவில்லை.ஆகவே காங்கிரசாரின் கையாலாக தனத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது காங்கிரசாருக்கு அழகு.அதைவிட அழகு அந்நிய நாடுகளுக்கு ஆதரவாக பேசாமலிருப்பது.
காங்கிரசார் ஏன் சீனாவிற்கு இப்படி வக்காலத்து வாங்குகிறார்கள் என்று யோசித்தேன். பிறகு தான் புரிந்தது அவர்களின் கூட்டணி கம்யூனிஸ்ட்களுடன். அதனால் கம்யூனிஸ்ட்களின் சீன விசுவாசம் காங்கிரசிற்கும் வந்துவிட்டது போலும்.

நாமும் தெரிந்து கொள்ளவில்லை… நமது நீதிமன்றங்களும் புரிந்து கொள்ளவில்லை……..

January 13, 2016

ஆறு.தர்மபூபதி

நம்முடைய அரசியலமைப்பு சட்டம் 1950 இல் உருவாக்கப்பட்ட பொழுது அதிலே இந்தியா என்பதை முழு அதிகாரமுடைய ஜனநாயக குடியரசு (sovereign democratic republic) என்று தான் வரையறுத்தார்கள். அப்போது மதச்சார்பின்மை என்ற சொல்லோ சோசிலிசம் என்ற சொல்லோ உள்ளே வைக்கப்படவில்லை. 
அது எப்போது உள்ளே சேர்க்கப்பட்டது? இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலகட்டத்தில் அது உள்ளே சேர்க்கப்பட்டது. சமய சார்பற்ற சோஷிலிச ஜனநாயக என்ற வாசகங்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்ட முகப்புரையில் சேர்க்கப்பட்டது. 42 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் விளைவாகவே இந்த மதச்சார்பின்மை, சோசிலிசம் என்ற இரண்டு சொற்களும் அரசியலமைப்பு சட்டத்தில் வைக்கப்பட்டன. 
The 42nd Amendment amended the Preamble and changed the description of India from “sovereign democratic republic” to a “sovereign, socialist secular democratic republic”.
imageஇந்த 42 ஆவது திருத்தம் என்பது இன்னோர் அரசியலமைப்பு சட்டம் என்றும் இந்திரா காந்தியின் அரசியலமைப்பு சட்டம் என்றும் சொல்லப்படுகிறது. ஏன்? இந்த திருத்தம் நம்முடைய அரசியலமைப்பின் முழு வடிவத்தையே மாற்றி அமைத்தது. அரசியலமைப்பு சட்டத்தில் இருந்த அனைத்து ஷரத்துக்களும் திருத்தப்பட்டன. மதச்சார்பற்ற சோசிலிச நாடு என அரசியலமைப்பு சட்டத்திலே இருப்பது சரி தானே என சிலர் நினைக்கலாம். இதே போன்ற ஒரு திருத்தம் அரசியலமைப்பு நிர்ணய சபையிலே கொண்டு வரப்பட்டது. அது இந்தியாவை மதச்சார்பற்ற, சோசிலிச, கூட்டாட்சி அமைப்பு என சொல்லியது. ஆனால் அம்பேத்கர் அதை நிராகரித்தார்.  அம்பேத்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட நமது அரசமைப்புச் சட்டத்தில் “மதச்சார்பின்மை’ “சோஷலிசம்’ என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. மதச்சார்பின்மை’, “சோஷலிசம்’ என்ற வார்த்தைகள் அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. மதச்சார்பற்ற தன்மை என்பது, இந்தியாவின் இயல்பிலேயே அமைந்துள்ளது என்பதால் அரசமைப்புச் சட்டத்தில் அந்த வார்த்தைகளைச் சேர்ப்பது அவசியம் என அம்பேத்கர் கருதவில்லை.
இதையெல்லாம் விட மிகப்பெரிய பொய் பரப்புரை இந்த சோசிலிசம், செக்குலரிசம் என்ற கொள்கைகளை 1947 லேயே கொண்டுவரப்பட்டது போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் காங்கிரஸ் கட்சியின் சர்வாதிகாரி இந்திரா ஆட்சியில் தான் இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டு இன்றைக்கு இந்த சட்டதிருத்தம் இந்தியாவையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.
imageஇந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்த பிறகு மதச்சார்பற்ற அரசு, மதச்சார்புள்ள கோவில்களை நிர்வகிக்கும் அதிகாரம் காலாவாதியாகி விட்டது என்று தானே பொருள். அதற்கு முன் இயற்றப்பட்ட மதச்சார்புள்ள ஹிந்துக் கோவில்களை நிர்வகிக்கும் அதிகாரம் தற்போது மதச்சார்பற்ற அரசுக்கு இல்லை. எப்போது இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தில் சமய சார்பற்ற என்ற வார்த்தை சேர்க்கப்பட்டதோ அன்றைக்கே ஒரு மதத்தின் கோவில்களை கட்டுப்படுத்தும் உரிமையை அரசு இழந்து விட்டது. அதை சுட்டிக்காட்டி நாம், ஹிந்துக்கோவில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கத் தவறி விட்டோம் என்பதே நிதர்சனமான உண்மை.இந்த உண்மைகளை நாமும் தெரிந்து கொள்ளவில்லை. நீதிமன்றங்களும் கருத்தில் கொள்ளவில்லை.
இன்றைக்கு இருக்கிற மத்திய அரசு இந்த அடிப்படை உண்மையைக் கருத்திற்கொண்டு ஹிந்துக் கோவில்களை அரசுக்கு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும்.நாமும் அதற்கு குரல் கொடுப்பதன் மூலமே அரசும் நீதிமன்றங்களின் தேவையற்ற தலையீடுகளும் தடுக்கப்படும் என நம்புகிறேன்.

ரகுவம்சம்

January 3, 2016
ஆறு.தர்மபூபதி
வசிஷ்டர் தியானத்திலிருந்து கண் விழித்து பார்த்த போது மாமன்னன் திலீபன் தன் எதிரே நிற்பதைக் கண்டு அதிசியத்துப் போனார்.
“என்ன திலீபா? இந்த இளம் காலை நேரத்தில், அதுவும் உன் துணைவியாரோடு………”,
“குரு பெருமானே……என்னை ஒரு கவலை வாட்டி எடுக்கிறது. இரவு நேரங்களில் அந்த கவலை எங்களுடைய தூக்கத்தை துக்கமாக மாற்றுகிறது. நேற்று இரவு இந்தக் கவலையால் சிறிது நேரம் கூட தூங்கவில்லை…. அதனால் தான் நானும் எனது மகாராணியாரும் தங்களிடம் குருவருள் வேண்டி தங்கள் முன் நிற்கிறோம்” என்றவாரே திலீபனும் அவனது மனைவியும் வசிஷ்ட முனிவரின் திருப் பாதங்களை தொட்டு வணங்கினர்.
Magna-tech
விவச்சுவான் என்னும் மன்னன் ஆதித்தனுடைய புத்திரன். சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தான். அவனுடைய மகன் அரசர்களுக்கெல்லாம் அரசன் எனப் போற்றப்பட்ட, வைவச்சுதன் என்பவன் மரபிலே வந்தவன் திலீபன். விசாலமான மார்புடையவன். எருதின் கழுத்தைப் போன்று கழுத்துடையவன். எப்பேர்ப்பட்ட வீரர்களையும் எதிர்கொள்ளும் பலம் பொருந்தியவன். பெரும் விலங்குகளினும் பலம் கொண்டவன். மராமரம் போன்ற உன்னத புருஷன். சாத்திரங்களின்படி வாழுபவன், தர்மத்தின் படி ஆட்சி புரிபவன், பகைவர்களாயினும் நல்லோரை நட்பு பாராட்டுபவன். உறவினராயினும் தீயோராக இருந்தால் புறம் தள்ளி வைப்பவன், எடுத்த காரியத்தை முடிப்பதில் மிக்கவன் மொத்தத்தில் பாற்கடலில் சந்திரன் போன்று வந்துதித்தவன் இந்த திலீபன். இவனுக்கு மகதராசன் புதல்வி சுதாகினை என்பவள் பத்தினியாக வாய்க்கப் பெற்றாள். தனது ஆசிகளை வழங்கி விருந்தோம்பிய பின்னர் மாமுனிவர் அரசனது துக்கம் குறித்து வினவினார்.
“சுவாமி, தங்களது அருட்பார்வையாலே எனக்கு எல்லா இடையூறுகளும் நீங்குகின்றன. தங்களது மந்திர வலிமையாலே பகையெல்லாம் பஞ்சாகப் பறக்கின்றன. மனிதர்களால் வரும் களவு போன்ற எந்த பயமுமில்லை. தேவர்களால் வரும் பஞ்சம் போன்ற எந்த பயமும் இல்லை. வேத மந்திரங்கள் பொழியும் ஹோம குண்டத்தில் தாங்கள் வார்க்கும் நெய் தானே மீண்டும் மழையாகப் பெய்து பயிர்களை வளர்க்கிறது. வேத தர்ம சாஸ்திரங்களை கடைபிடித்து அதன்படி நடக்கும் தங்களின் அனுகிரகத்தாலே ராஜ்யத்தில் அனைத்து மக்களும் மகிழ்வாக இருக்கின்றனர். இவையெல்லாம் இருந்து என்ன பயன்? எனக்கு ஒரு மகவு இல்லையே! எனக்கு ஒரு செல்வன் இல்லாததால் இந்த உலகமும் என்னை இகழ்கிறது. நான் செய்யும் தான தர்மங்கள் எனக்குப் பிறகு தொடர்வதற்கு யார் இருக்கிறார்கள்? நான் எங்கள் மூதாதையருக்கு செய்யும் பித்ரு கடன்களை எனக்கு பின் தொடர்வதற்கு யாரும் இல்லையென்று மேலுலகில் உள்ள என் பித்ருக்கள் நான் வழங்கும் பிண்டத்தை சரியாக உண்பதில்லை. நான் வழங்கும் தர்ப்பண நீரையும் இனிக் கொடுப்பவரில்லையே என்று பெருமூச்சு விட்டு அதனால் எழும் சூட்டினாலே சூடு அதிகமாகி அருந்துகின்றனர். தவமும் தானமும் போல இறப்புக்குப் பின்னர் ஏற்படும் மறுமை சுகமும் கெடாமல் இம்மைக்கும் மறுமைக்கும் சுகத்தைக் கொடுக்கின்ற புத்திரப் பேறு இல்லாத என்னை உன்முன்னே நிற்கும் காயா மரமாக பாருங்கள் குருவே. பித்ரு கடன்களை தொடராத நிலைக்கு என்னை ஆட்படுத்தி விடாதீர்கள். இக்குவாகுவின் குலத்தார்க்கு அனைத்து அருட்பேருகளையும் அருளுவதற்கு தங்களை விட்டால் யாருளர்? குருவே அருள் புரியும்”, என்று திலீபனும் அவனது மனைவியும் வசிஷ்ட முனிவரின் பாதங்களில் வீழ்ந்து விண்ணப்பித்தனர்.
imageவசிஷ்ட முனிவர் அவர்களை ஆசுவாசப்படுத்தி திலீபனுக்கு புத்திர பாக்கியம் ஏற்படாத காரணத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு மீண்டும் தியான சமாதி நிலைக்கு சென்றார். சிறிது நேர தியானத்திற்குப் பிறகு அதன் காரணத்தை அறிந்து கொண்ட வசிஷ்ட மாமுனிவர், அரசனே முன்பொரு நாள் தேவருலகம் சென்று இந்திரனைக் கண்டு வரும்போழுது வாயிலில் கற்பக மரத்தடியில் காமதேனு படுத்திருந்தது. ஆனால் நீயோ காமதேனுவிற்கு வந்தனை செய்யாமல் உனது மனைவியின் ருது காலத்தையும் புத்திர உற்பத்தியையும் நினைவிற் கொண்டு, மனைவி மீது ஆவல் கொண்டு விரைவாக வந்தாய். அதனால் சினம் கொண்ட காமதேனு,” சந்ததி கருதி என்னை வந்தனை செய்யாமல் இகழ்ந்து செல்கின்றாய். என்னை வந்தனை செய்யாமல் உனக்கு சந்ததி கிடையாது என்று காமதேனு சாபமிட்டது. அந்த சாபமும் உனது திக்கி யானை தேவ கங்கையில் விளையாடிய ஆர்ப்பரிப்பு சப்தத்தாலே உனக்கு கேட்கவில்லை. உனது தேர்ப் பாகனுக்கும் கேட்டிலது. வந்தனை செய்ய வேண்டிய ஒன்றை வந்தனை செய்யாமல் வாளாவிருப்பது பெரிய நிந்தையாகும். அதனால் நன்மைகள் கிடைக்கத் தடையாகும். அந்த காமதேனுவும் இப்போது இங்கில்லை. பாதாளத்தில் வர்ணபக்வான் நடத்தும் தீர்க்க சத்திர யாகத்தில் அவிர்பாகம் பெரும் பொருட்டு அங்கு சென்றுள்ளது. இங்கே அதன் கன்று இருக்கின்றது. அதன் திரு நாமம் நந்தினி. அந்த காமதேனுவின் புதல்வியை மனதார தூய பக்தியோடு வழிபடு. காமதேனுவின் மனம் குளிரும்போது உங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்”, இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே நந்தினி அங்கு வந்தது. நந்தினியின் வருகையைக் கண்ட மாமுனிவர்,” நந்தினி வருகை நல்ல சகுனத்தைக் காட்டுகிறது. ஆகவே உனது காரியம் எளிதாக முடியும் என்பதையே இது காட்டுகிறது “, என்றார்.
“அரசனே நீ தூய்மையாக இந்த இல்லை காய் கனி ஆகிய வன பதார்த்தங்களை உண்டு விரதம் பூண்டு இந்த நந்தினியை வழிபாடு செய். இந்த நந்தினி விடியற்காலை காட்டிற்கு மேய்ச்சலுக்குப் போகும்போது உடன் நீயும் போக வேண்டும். இது நின்றால் நீயும் நிற்க வேண்டும். அது கிடந்தால் நீயும் கிடக்க வேண்டும். நீர் குடித்தால் நீயும் குடிக்கலாம். உனது பத்தினியும் விடியற் காலையில் தன்னைத் தூய்மையாக்கிக் கொண்டு நந்தினியை வழிபட்டு ஆசிரம எல்லை வரை சென்று காட்டிலே மேய விட்டு வரவேண்டும். அதே போன்று சாயங்காலம் நந்தினி மேய்ச்சல் முடிந்து வரும்போழுது, ஆசிரம எல்லையில் நின்று அதை வழிபாடு செய்து அழைத்து வரவேண்டும். நந்தினி அருள் கிடைக்கும் வரை நீயும் உனது மனைவியும் தூய பக்தியோடு இந்த காரியத்தில் ஈடுபடுங்கள். எந்த தீங்கும் இல்லாதவனாகுக. உங்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகுவதாக,” என்று வாழ்த்தி பத்தினியையும் அரசனையும் பர்ணசாலையில் கொண்டு சென்று அவர்களுக்கு உண்ண இலை காய் கனி ஆகியவற்றை வழங்கினார்.
Picture1விடியற்காலையில் ராஜ பத்தினி எழுந்து நந்தினியை வழிபாடு செய்து வணங்கினாள். அகமகிழ்ந்த நந்தினி தன் கன்றுகுட்டிக்கு பால் தந்து விட்டு நிற்க, அரசன் நந்தினியை கட்டவிழ்த்து விட்டு பாதுகாப் காப்பிற்காக, வில்லை எடுத்துக் கொண்டு மேய்ச்சல் நிலத்திற்கு அழைத்துச் சென்றான். பத்தினியும் எல்லைவரை சென்று வழியனுப்பினாள். அரசன் நந்தினியை தனது கண்காணிப்பில் வைத்துக் கொண்டான். நந்தினி நிற்கும் போது இவனும் நின்றான். அது தண்ணீர் குடிக்கும்போது இவனும் குடித்தான். நந்தினி படுக்கும் போது இவனும் தரையில் படுத்துக் கிடந்தான். அதற்கு அப்போது புல்லுக்கட்டினை நீட்டி உணவருந்த செய்தான். இப்படி நந்தினியின் நிழல் போல வாழ்ந்தான். அவனது ராஜ பத்தினியும் நந்தினியை தெய்வமாக போற்றி வழிபட்டாள். மேய்ச்சல் முடிந்து மாலை வேலைகளில் நந்தினியை அழைத்து வரும்போது, அவன் ராஜபத்தினியும் ஆசிரம எல்லை வரை சென்று வழிபட்டு அழைத்து வருவாள். இருவரின் உபசரித்தலை ஏற்றுக் கொண்ட நந்தினியும் மேய்ச்சலை முடித்து வசிட்டரின் ஆச்ரமத்தையடுத்த யாக சாலையை நோக்கி வந்தது. அரசனும் பாதுகாப்பாக வர அதன் இருப்பிடம் வந்து சேர்ந்தது. நந்தினியை விட்டு விட்டு வசிஷ்ட முனிவரை சென்று பார்த்து வணங்கி மீண்டும் நந்தினி இருப்பிடத்திற்கு வந்தனர். பால் கரந்த பின் நந்தினியும் நித்திரை செய்தது. அன்றைய நித்திய கருமங்களை முடித்துக் கொண்டு அரசனும் பர்ணசாலையில் அங்கேயே நித்திரை செய்தான். ராஜபத்தினியும் விளக்கேற்றி வைத்து நந்தினியை வழிபட்டு அரசன் அருகே சென்று படுத்து நித்திரை செய்தாள். பின்னர் விடியக் காலம் வந்தது. நந்தினி எழுந்தாள். உடன் அரசனும் ராஜபத்தினியும் எழுந்தார்கள். முந்தைய நாள் போலவே நந்தினியை வணங்கி அன்றைய நாளைக் கழித்தனர்.இப்படியே இருபத்திரண்டு நாட்கள் கழிந்தன.
இருபத்திரண்டாம் நாள்.அரசானது அன்பை சோதிக்க நந்தினி எண்ணியது. மேய்ச்சலுக்கு வழக்கம் போல சென்ற நந்தினி மெல்லமெல்ல இளம் புற்களை மேய்ந்தவாரே அந்த இமயமலை அடிவாரத்தில் உள்ள குகையை அடைந்தது. அரசனும் நந்தினியை யார் என்ன செய்துவிடமுடியும் என்ற எண்ணத்தில் தனது பார்வையை நந்தினியிடமிருந்து எடுத்து அந்த மலைச்சாரலின் அழகை ரசித்தவாறு இருந்தான். திடீரென்று நந்தினியின் அலறலைக் கேட்ட அரசன் தனது பார்வையை திருப்பினான். அங்கே அவன் கண்ட காட்சி அவனை நிலைகுலைய செய்தது. ஒரு சிங்கம் நந்தினியின் கழுத்தை கவ்வியபடி குதறத் தொடங்கியது. அரசன் தனது வில்லைத் தொடுக்க இடது கையை முன்னெடுத்து செல்ல, அவனது வலக்கை,பின் உள்ள அம்பு கூட்டிற்கு சென்றாலும் தனது கைகள் ஸ்தம்பித்ததைப் பார்த்து அரசன் செய்வதறியாது நின்றான். அப்போது அந்த சிங்கம் அரசனைப் பார்த்து சொல்லிற்று:
“அரசனே…. நான் சொல்வதைக்கேள். உன்னுடைய அம்பு என்னை ஒன்றும் செய்யாது. வலிமையான தெய்வமே வந்து என்னுடன் போர் புரியினும் வெற்றி எமக்கே. மரங்களை அடித்து வேரோடு பிடுங்கும் வாயு பகவானால் மலைகளை என்ன செய்து விட முடியும்? நான் சிங்கமல்ல, சிவபெருமானுக்கு சேவை செய்யும் கும்போதரன் என்னும் பூதங்களின் தலைவன். இங்கே நிற்கும் வானுயர்ந்த தேவதாரு மரத்தைப் பார். அன்னை உமாதேவியார் நீரூற்றி வளர்த்த மரம். காட்டு யானைகள் தங்கள் உடம்பின் அரிப்பை போக்க இந்த மரத்தின் மீது தனது உடம்பை தேய்த்து மரத்தை காயப்படுத்தியதைக் கண்ட தேவியார் கவலை கொண்டார். இதனை அறிந்த சிவபிரான், இந்த குகை அருகே சிங்க உருக்கொண்டு, வரும் பிராணிகளை உணவாகக் கொண்டு இந்த மரத்தை காவல் புரிவாயாக என கட்டளையிட்டுள்ளார். ஒரு காத தூரத்திற்கு எந்த பிராணியும் வருவதில்லை. அன்று தொடங்கி இன்றுவரை எனக்கு எந்த பிராணியும் கிட்டவில்லை. நான் பெரும் பசியுடன் இருக்கிறேன். நான் செய்த நல்வினையால் இந்தப் பசு எனக்கு இரையாக வந்துள்ளது. இன்று இதை உண்டு எனது பசியைப் போக்கிக் கொள்ள விரும்புகிறேன். உனது குருவின் பொருளை உன்னால் காப்பாற்ற முடியாது. உனது காவலிலும் தவறில்லை. பசுவைக் காக்க வேண்டும் என்ற உனது என்னத்தை மாற்றிக் கொள். தேவையில்லாமல் உன்னை வருத்திக் கொள்ளாதே….”என்றது சிங்கம்.
“சிங்கமே….தோல்வியடைந்த நான் சொல்வதையும் கொஞ்சம் கேள். நான் சொல்கிற வார்த்தைகளை ஏளனமாக பார்க்காதே….. என்னை உணவாகக் கொள். உன்னுடைய பசியைத் தீர்த்துக் கொள். சிவபிரானது கட்டளைக்கும் பங்கமில்லை. அந்த பசுவும் நீண்டு வாழும். மாலைக் காலத்தில் தனது மாதா வந்து பால் கொடுக்கும் என்று ஆசையுடன் இருக்கும் கன்று குட்டிக்கும் பங்கம் வராது. வசிட்ட முனிவரின் யாகத்திற்கு கிடைக்கும் பாலிற்கும் தடையிருக்காது. ஆகவே என்னை உண்டு பசியை போக்கிக் கொள். அந்த பசுவை விட்டு விடு” இதைக்கேட்ட சிங்கம் நகைத்தது.
“மன்னனே…. உன்னைப் பார்த்தால் இளமையும் வேகமும் அறிவும் அரசியலும் ஒரு சேரப் பெற்றவனாய் இருக்கிறாய். அற்பப் பசுவிற்க்காக இத்தனை சிறப்புக்களையும் இழந்து விடாதே. எதை செய்ய வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்று அறியாத மூடனாக இருக்கிறாய். நீ இறந்தால் இந்தப் பசு மட்டுமே உய்விக்கும். உன்னை நம்பியிருக்கும் நாட்டு மக்கள் கவலையில் மூழ்குவர், இன்னல் படுவர். ஆதலால் நீ இறவாமல் நின்று உயிர்களை காப்பாயாக. பசுவை கொல்லவிட்டதற்க்காக வசிட்டர் கோபமடைந்தால் ஆயிரம் பசுக்களை அவருக்கு தானமளித்து கோபத்தை தணிப்பாயாக….”என சிங்கம் சொல்லிற்று.
இதைக் கேட்ட அரசன்,”நான் சத்திரியன்.தனது உயிரைக் கொடுத்தாலும் கொடுத்த வாக்கை காப்பாற்றும் இனத்தைக் கொண்டவன். தனது கடமையை செய்யாத சத்திரியனான என்னைப் போன்ற அரசனால் அரசிற்கு என்ன பயன்? ஆயிரம் பசுக்களை வசிட்டருக்கு கொடுத்தாலும் அவரது கோபம் தணியாது. தனது மாதா வந்து பால் கொடுப்பாள் என்று காத்திருக்கும் இளங்கன்றின் துயரத்தை எப்படி என்னால் தாங்க முடியும்? குருவின் யாகமும் பாலின்றி பழுதாகும்.பசுவைக் காக்கும்படி பணித்த குருவின் முன்னால் பசுவை இழந்த பிறகு அவர் முன்னால் எப்படி நிற்பேன்?எனது இந்த உடம்பை அழிந்து போவது உனக்கு விருப்பமில்லை என்றால் எனது புகழுடம்பு மட்டும் எப்படி நிலைக்கும்? சிங்கமே….. இவ்வளவு நேரம் நாம் பேசி இப்போது நண்பர்களாகி விட்டோம். நண்பனின் வேண்டுகோளை மறுப்பது நீதியன்று என்றான் அரசன்.
image
“அப்படியே ஆகுக”,என்று சிங்கம் நந்தினியை விடுவித்தது. மகிழ்ச்சி அடைந்த அரசன் தனது அம்பை கீழே வைத்துவிட்டு சிங்கத்தின் முன்னர் படுத்தான். அப்போது பூமாரி பொழிந்தது. திடுக்கிட்டு தலையைத் தூக்கிப் பார்த்தான். அங்கே சிங்கம் காணப்படவில்லை. நந்தினிதான் நின்றது. “அரசனே நான் தான் உன்னை சோதிக்க விரும்பினேன். யாரும் எந்த பிராணியும் என்னை ஒன்றும் செய்து விட முடியாது. வசிட்டருடைய அனுகிரகத்தாலே, எமனே வந்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. அப்படியிருக்கையில் சிங்கம், மற்ற பிராணிகளை பற்றி சொல்ல வேண்டியதில்லை. உன்னுடைய குரு பக்தி என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. நான் வெறும் பசு மட்டுமல்ல. நினைத்ததைக் கொடுப்பவள். எனது இன்னொரு பெயர் காமதேனு. உன்னுடைய செயலால் நான் மகிழ்வடைந்தேன். உனக்கு என்ன வேண்டும் கேள்”, என்றது நந்தினி.
அரசன் “தாயே எனக்கு சந்ததி இல்லாமல் நான் வருந்துகிறேன். ஆகவே எனக்கு ஒரு ஆண் மகன் பிறக்க வரம் தர வேண்டும்”, என்றான் அரசன். “அப்படியே ஆகட்டும்.என்னுடைய பாலை தொன்னையிலே கறந்து நீ குடிக்க வேண்டும்.உனக்கு ஆண் மகன் பிறப்பான்”,என்று வரம் அளித்தாள் நந்தினி. இதைக் கேட்டு மகிழ்ந்த அரசன் திலீபன்,”தாயே,கன்று குடித்தது போக, முனிவரின் யாகத்துக்குத் தேவையான பால் நீங்கலாக மீதமுள்ள பாலை வசிட்ட முனிவரின் ஆசி பெற்று உண்ண விரும்புகிறேன்,” என்றான் திலீபன். நந்தினி அகமகிழ்ந்து ஆமோதித்து, வசிட்டருடைய பர்ணசாலை நோக்கி புறப்பட்டது. அரசனும் பாதுகாப்போடு நந்தினியை அழைத்து வந்தான்.அரசனுடைய ராஜ பத்தினியும் எல்லை வந்து வணங்கி பூஜை செய்து நந்தினியை பர்ணசாலைக்கு அழைத்து சென்றாள்.
வசிட்டமுனிவர் மன்னன் திலீபனின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கி நின்றான். மன்னன் முகத்தைப் பார்த்து குறிப்பறிந்து நந்தினியின் வரத்தை அறிந்து கொண்டு மன்னனை நோக்கினான். மன்னன் திலீபன் அங்கு நடந்தவைகளை முனிவருக்கும் தனது ராஜபத்தினிக்கும் விவரித்தான். முனிவர் ஆசி கூறவே, திலீபன் நந்தினியின் கன்று பால் குடித்து முடிக்கும் வரை காத்திருந்து, யாகத்திற்கு தேவையான பாலை கறந்த பின் ஒரு தொன்னையில் நந்தினியிடம் பாலை கறந்து வசிட்ட முனிவரையும் நந்தினியையும் வணங்கி பாலைக் குடித்தான். அன்றிரவு அரசன் திலீபனும் அவனது ராஜபத்தினியும் அங்கேயே படுத்துறங்கினார்கள். அதிகாலை எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு, அருந்ததியிடமும், வசிட்ட முனிவரிடமும் ஆசி பெற்று பின் நந்தினியை வணங்கி விடைபெற்றனர். தனது நகரை வந்தடைந்த அரசனையும் அரசியையும் மக்களும் மந்திரிகளும் வரவேற்று அரண்மனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மந்திரிகள் தங்கள் வசமிருந்த ஆட்சிப் பொறுப்பை அரசன் திலீபனிடம் வழங்கினார்கள். ராஜ பத்தினி கர்ப்பவதியானாள். பத்துமாதங் கழித்து அழகிய ஆண்மகவைப் பெற்றாள் அரசி. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். மங்கள வாத்தியங்கள் எங்கும் முழங்கின. மக்கள் குதுகலிக்க நகரமே விழாக்கோலம் பூண்டது. தனது குழந்தைக்கு ரகு என பெயரிட்டான் திலீபன். மக்களுக்கு தான தர்மங்களை வாரி வழங்கினான்.                             (தொடரும்)
(திலீபன் என்ற மாமன்னனுக்கு மகனாகப் பிறந்த ரகு என்ற சக்ரவர்த்தியின் மரபில் வழி வந்த மாமன்னர்களின் சரித்திரத்தை மகாகவி காளிதாசர், ரகுவம்சம் என்ற பெயரில் காவியமாகப் படைத்திருக்கிறார். அந்த காப்பியத்தின் கருதான் இந்த கதை) Read the rest of this entry »

ஆங்கிலப் புத்தாண்டு – எப்போ திருந்து வாங்க?

December 29, 2015

ஆறு.தர்மபூபதி

பல ஆண்டுகள் இருக்கும்…….
ஆங்கிலப் புத்தாண்டு முதல் நாளில்,ஹிந்துக் கோவில்கள் வழிபாட்டிற்கு நள்ளிரவு கூட திறந்திருந்த நேரம்……. (பிற்காலத்தில் பலத்த எதிர்ப்பின் காரணமாக நள்ளிரவு கோவில் திறப்பது நிறுத்தப்பட்டது என்பது வேறு விசயம்)
அன்று ஆங்கிலப் புத்தாண்டு ……
அப்போது நான் அரசுப்பணியில் இருந்தேன். எனது உயர் அதிகாரி ஒருவர் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள சுற்றுலா தலத்தில் தங்கியிருந்தார்.அவர் தங்கியிருந்த இடம் வாகன வசதி இருந்தால் மட்டுமே செல்லக் கூடிய இடம். பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு அன்று உயர் அதிகாரிகளை சந்தித்து வாழ்த்து சொல்வது எழுதி வைக்கப்படாத சட்டமாக இருந்தது. ஆனால் இந்த உயர் அதிகாரி யாரும் எளிதாக நெருங்க முடியாத இடத்தில் அன்று தங்கியிருந்தது ஆச்சர்யத்தை தந்தது. நான் அருகாமையில் இருந்ததால் அவருடைய தேவைகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு இருந்ததால் நான் அவரை சந்திக்கும் வாய்ப்பு இருந்தது.
அன்று காலை ஆங்கிலப் புத்தாண்டு முதல் நாள். நான் அவரை சந்திக்க சென்றிருந்தேன். அப்போது அவரது அறையில் இன்னொரு விருந்தினர் வந்ததைக் காண முடிந்தது.ஆனால் அந்த விருந்தினரை சொற்களால் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தார் எங்கள் உயர் அதிகாரி. “இந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் தேவையில்லை என்பதால் தான் நான் இவ்வளவு தூரம் வந்து தங்கியிருக்கிறேன்.ஆனால் விடாமல் என்னை இங்கு வந்து பார்த்து புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லுகிறீர்கள். நீங்களெல்லாம் படித்தவர்கள் தானே….உங்களுக்கு கொஞ்சமாவது புத்தி உள்ளதா? நான் கிறிஸ்தவன் அல்ல,நீங்களும் கிறிஸ்தவன் அல்ல.எதற்கு இந்த வாழ்த்து….. இந்த புத்தாண்டுக்கும் நமக்கும் ஏதாவது ஒரு வகையில் சம்பந்தமுண்டா?அலுவலக ரீதியிலாவது இந்த புத்தாண்டுக்கும் நமக்கும் சம்பந்தமுண்டா?அதுவும் இல்லை?ஏன் இந்த போலியான சம்பரதாயம்? ஏதோ வெள்ளைக்காரன் வந்தான், நம்மை மூளைச் சலவை செஞ்சுட்டு போயிருக்கான்….. யோசிச்சுப் பாருங்க….
imageமெக்காலே சொல்லிட்டுப் போனான். இப்போ நான் அறிமுகப்படுத்தர கல்வித்திட்டம் எதிர்காலங்களில் இந்தியர்கள் நிறத்தால் மட்டுமே கறுப்பர்களா இருப்பார்கள். நடை உடை கலாச்சாரத்தில் வெள்ளையர்களாக மாறி விடுவார்கள் என்று சொன்னது எவ்வளவு உண்மையாகி விட்டது?” என்று பொரிந்து தள்ளிவிட்டார். வந்தவர் நெளிந்தார்.
மீண்டும் அந்த அதிகாரி,”தப்பா எடுத்துக்காதீங்க…. இந்த தப்ப செய்யரவனே நல்லா அதிகம் படிச்சவன்தான் தான்….. அறிவு ஜீவிகள் தான்……வீட்டில வெளியே ஆங்கிலத்திலே பேசினாத்தான் கவுரவம்னு நினைக்கிறான்……ஆங்கில கலாச்சாரத்தை பின்பற்றது தான் பெருமைன்னு நினைக்கிறான். நமக்கு வெட்கமா இல்லே….. நாம ஒரு கிருத்தவனுக்கு வாழ்த்து சொன்னா ஏத்துக்கலாம்.சம்பந்தமே இல்லாத நாம ஏனுங்க இந்த வாழ்த்துக்களை பரிமாரிக்கணும்? அப்பொறம் வரிசையா அத்தனை அதிகாரிகளும் உயர் அதிகாரிகளைப் பார்த்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கணும், பரிசுகளை வழங்கணும்….இந்த கொடுமையெல்லாம் நம்ம நாட்டைத் தவிர வேறு எங்கும் நடக்காது… இதெல்லாம் வேண்டாம்னு தவிர்ப்பதற்குத்தான் இன்னைக்கு ஒருநாளைக்கு இங்க வந்தா, இங்கேயும் வந்துட்டிங்களே…..” விளாசி விட்டார்.
பிறகு அவருக்கு சாப்பிடுவதற்கு உணவு ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார். அப்போது தான் தெரிந்தது, எங்களூரில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
“செருப்பில அடிச்சு கைல கருப்பட்டி கொடுத்த மாதிரி”ன்னு .
அன்றைக்குத்தான் நேரிலேயே பார்த்தேன்….
ஆங்கிலப் புத்தாண்டு விசயத்திலே நம்ம ஜனங்க குறிப்பா, மெத்த படிச்ச அறிவு ஜீவிகள் எப்போ திருந்து வாங்க?

தமிழர்களின் கடவுள் முருகப் பெருமான்,திருமால்……….

July 12, 2015
ஆறு.தர்மபூபதி
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தாங்கள் வாழும் நிலத்தை ஐந்து வகையாக பிரித்துவிட்டார்கள். கண்களுக்கு எட்டிய தூரம் பரந்த சமவெளி நிலத்தையும் அந்த நிலத்தை நம்பியே தங்களுடைய வாழ்வாதாரமும் இருந்தால் அந்த பரந்த சமவெளி நிலத்தை மருத நிலம் என்றார்கள்.
கண்களுக்கு எட்டிய தூரம் சுற்றி சூழ்ந்திருக்கும் மலை பிரதேசத்தையும் அந்த மலையை நம்பி தங்களுடைய வாழ்வாதாரம் இருந்தால் அந்த இடத்தை குறிஞ்சி நிலம் என்றார்கள்.
இப்படியே மலை பிரதேசத்தை ஒட்டியிருக்கும் நிலத்தை முல்லை நிலம் என்றார்கள்.
பரந்து விரிந்த கடலையும் தங்களுடைய வாழ்வாதாரம் கடலை நம்பியிருப்பதால் அதை நெய்தல் நிலம் என்றார்கள்.
கோடை காலத்தில் முல்லை நிலம் வெப்பத்தால் வரண்டு இருப்பதால் அதை பாலை என்றார்கள்.
அப்படியே இந்த ஐந்துவகை நிலங்களுக்கும் தனித் தனியே கடவுளர்கள் உண்டு.
குறிஞ்சி நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன. குறிஞ்சி நிலத்திற்கு முருகன் குலதெய்வமாக பண்டைய மக்களால் வழிபடப்பட்டார். குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என்று அழைக்கப்பட்டன. “சேயோன் மேய மைவரை உலகமும்” எனத் தொல்காப்பியம் குறிஞ்சி நிலம் பற்றிக் கூறுகிறது.
குறிஞ்சி  நிலத்தின் கருப்பொருட்கள்
தெய்வம்: முருகன்
மக்கள்: குறவர், பொருப்பன், வெற்பன், சிலம்பன், நாடன், கொடிச்சி
மரங்கள்: வேங்கை, அகில், சந்தனம், மூங்கில்
விலங்குகள்: குரங்கு, கரடி
பறவை : கிளி, மயில்
பறை : தொண்டகம், வெறியாட்டு
பண்: குறிஞ்சி யாழ்
மலர்கள்: குறிஞ்சி, காந்தள்
தொழில்: கிழங்கு அகழ்தல், தேன் எடுத்தல்
நீர் நிலை : அருவி, சுனை
முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்பட்டது. இந்நிலம் முல்லை     மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. ” மாயோன் மேய காடுறை உலகமும்” எனத் தொல்காப்பியம் முல்லை பற்றிக் கூறுகிறது.
முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்
தெய்வம்: திருமால்
மக்கள்: இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
உணவு: வரகு, சாமை
பறவைகள்: காட்டுக் கோழி
விலங்குகள்: மான், முயல், பசு, மரை
நீர் நிலை : காட்டாறு
மரங்கள்: கொய்யா, காயா, குருத்து
மலர்கள்: முல்லை, பிடா,தொன்றி
பண்: பறை, முல்லை யாழ்
பறை : ஏறுகோள்
தொழில்: சாமை, வரகு விதைத்தல், களை எடுத்தல், குழலூதல், ஏறு தழுவல், குரவைக் கூத்தாடல், மந்தை மேய்த்தல்
ஊர்: பாடி,சேரி
மருதம், வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர். மருதநில மக்கள் மள்ளர் எனப்பட்டனர், மருத நிலத்தலைவர்கள் மகிழ்நன், ஊரன் என்று அழைக்கப்பட்டனர்.
மருத நிலத்தின் கருப்பொருட்கள்
தெய்வம்: இந்திரன்
மக்கள்: மள்ளர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
பறவைகள்: நாரை, குருகு, தாரா, அன்றில்
விலங்குகள்: எருமை, நீர்நாய்
மலர்கள்: தாமரை, கழுநீர், குவளை
மரங்கள்: காஞ்சி, மருதம்
உணவு: செந்நெல், வெண்நெல்
பண்: மருத யாழ்
பறை : நெல்லரி
தொழில்: களைகட்டல், நெல்லரிதல், கடாவிடல்
நீர் நிலை : பொய்கை, ஆறு
நெய்தல் நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என அழைக்கப்படுகின்றன. நெய்தல் நிலத்தலைவர்கள் கொண்கன், சேர்ப்பன், துறைவன், புலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். “வருணன் மேய பெருமணல் உலகமும்” எனத் தொல்காப்பியம் இதுபற்றிக் கூறுகிறது. நெய்தல் மலரில் உப்பங்கழிகளில் பூக்கும் உவர்நீர் மலர், நெல்வயலில் பூக்கும் நன்னீர் மலர் என இருவகை உண்டு.
நெய்தல் நிலத்தின் கருப்பொருட்கள்
தெய்வம்: வருணன்
மக்கள்: சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர்
பறவைகள்: கடற்காகம்
விலங்குகள்: சுறா
மரங்கள்: கண்டல், புன்னை, ஞாழல்
மலர்கள்: நெய்தல், தாழை, கடம்பு
பண்: மீன்கோட் பறை, விளரி யாழ்
தொழில்: மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு உணக்கல், உப்பு விற்றல்
உணவு : மீன்
நீர் நிலை : கேணி, கடல்
பாலை என்பது பண்டைத் தமிழகத்தில் பண்பின் அடிப்படையில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதி பாலை ஆகும். அதாவது காடாகவுமில்லாமல் மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும் பாலை நிலமாகும். பாலை நிலத்தலைவர் காளை, விடலை என அழைக்கப்பட்டனர். பாலை நில மக்கள் எயினர் எனப்பட்டனர்.
பாலை நிலத்தின் கருப்பொருட்கள்
தெய்வம்: கொற்றவை
மக்கள்: விடலை, காளை, மறவர், மறத்தியர்
பறவைகள்: பருந்து, கழுகு
மரங்கள்: உழிஞ, பாலை, இருப்பை
மலர்கள்: மராம்பு
பண்: பஞ்சுரப் பண் (பாலை) யாழ்
பறை : ஆறலை, சூறைகோள்
தொழில்: வழிப்பறி செய்தல், சூறையாடல், ஆறலைத்தல்
உணவு: ஆறலைத்தலால் வரும் பொருள்
நீர்: கிணறு
விலங்கு: வலியிலந்த புலி
யாழ்: பாலையாழ்
ஊர்: குறும்பு 
இப்படி ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே தமிழர்களின் தெய்வமாக           வழிபாட்டு வந்துள்ளனர். இவை சங்க கால இலக்கியங்களிலும் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது. ஆனால் இன்றைய ஹிந்து மத எதிர்ப்பாளர்களான வெளிநாட்டு மத ஆக்கிரமிப்பாளர்கள் தமிழ் தமிழன் என்ற முகமூடியை அணிந்து கொண்டு தமிழர்களின் பண்பாட்டை சிதைக்க முயலுகின்றனர். இவர்களின் உருவாக்கம் தான் திராவிடக் கட்சிகளும் ராமசாமி நாயக்கரும். ஆகவே போலியான தமிழ் பேசுவோரை புறம் தள்ளி ஒதுக்க வேண்டும்.

யாருக்கும் வெட்கமில்லை!

July 11, 2015
ஆறு.தர்மபூபதி
கடந்த சில நாட்களுக்கு முன் கோவை மாநகரில் தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு பிளஸ்டூ படிக்கும் மாணவி அளவுக்கு மீறீய மது போதையில் இருந்தது குறித்து கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் பரபரப்பு செய்திகளை வெளியிட்டும், அதேபோன்று தொலைக்காட்சி சானல்களும் தங்கள் பங்குக்கு பரபரப்பாக விவாதங்களை நடத்தி தங்கள் வியாபாரத்தை கடை விரித்ததை அனைத்து மக்களுமே கண்டுகளித்தார்கள். பொதுவாகவே இப்போதெல்லாம் ஊடகங்களானாலும் சரி தொலைக்காட்சி சானல்களானாலும் சரி நேர்மையான நல்ல செய்திகளை (positive news) வெளியிடுவதில்லை. மாறாக எதிர்மறையான செய்திகளை (negative news) வெளியிடுவதிலே பெரும் அக்கறை கொள்கிறார்கள். காரணம் அவர்களின் வணிக நோக்கம். ஜனநாயகத்தின் ஐந்தாம் தூண் என்று சொல்லக் கூடிய பெரும்பாலான ஊடகங்களானாலும் சரி தொலைக்காட்சி சானல்களானாலும் சரி இது தான் இன்றைய உண்மையான நிலை. பிற மாநிலங்களிலும் குடிப்பதற்கு அனுமதியிருந்தாலும் தமிழக சீரழிவை அங்கு காண முடிவதில்லை.
images (3)இன்றைக்கு இந்த பிளஸ் டூ படிக்கும் மாணவி போன்று பள்ளி மாணவர்கள் சிறு குழந்தைகள் பெண்கள் போன்றவர்களும் இந்த மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி வருதல் வேகமாக பரவி வருகிறது. படிக்கவா குடிக்கவா என்ற நிலையில் மாணவர்கள் சமுதாயம் வழி நடத்தப்படுகிறது. ஏன் நான்கு வயது குழந்தைக்கு மது கொடுத்து அந்த பச்சிளங்குழந்தை மது அருந்துவதை பார்த்து மட்டற்ற மகிழ்சி கொள்ளும் அளவிற்கு இந்த சமூகம் முன்னேறியிருக்கிறது.தமிழ் பெண்கள் அதுவும் இளம் பெண்கள் கூட குடிக்க ஆரம்பித்துள்ளது தமிழ் சமுதாயம் இந்த திராவிடக் கட்சிகளால் எப்படி சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இனி என்ன சாட்சி வேண்டும்? அந்தக் காலத்திலெல்லாம் அதாவது திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் காலூன்றும் வரை குடிப்பழக்கத்திற்கு ஆளான ஒருவன் சமூகத்தின் பார்வையில் கீழ்த்தரமான மனிதனாக கருதப்பட்டான். ஊருக்கு வெளியே கள்ளுக்கடை இருக்கும் யாருக்கும் தெரியாமல் சில பேர் குடித்துவிட்டு வருவார்கள். குடித்துவிட்டு வருபவர்களை குடிகாரன் என்று சொல்லி யாருமே அந்தக் குடும்பத்தை நெருங்க மாட்டார்கள். குடிகாரன் என்ற சொல் சமூகத்தில் கடைநிலை சார்ந்தவனாகவும் ஒழுக்கமற்ற மனிதனாகவுமே கருதப்பட்டது. குடிப்பழக்கம் கொண்ட பெரிய மிகவும் வசதி படைத்த மனிதர்கள் கூட சமூகத்தில் தூற்றப்பட்டனர். குறிப்பாக பெண்களோ சிறுவர்களோ இந்த மதுப் பழக்கத்திற்கு அடிமையானதாக சமூகத்தின் அடிமட்ட குடும்பங்களில் கூட அன்றைக்குப் பார்க்க முடியாது. 
அந்தக் காலத்திய தமிழ் திரைப்படங்களே இன்றைக்கு சாட்சியாக உள்ளன. திரைப்படங்களில் கதாநாயகன் உட்பட ஒழுக்கமான பாத்திரங்களில் வருபவர்கள் மது அருந்தும் காட்சிகளில் தோன்ற மாட்டார்கள். திரைப்படங்களிலே தோன்றும் கதாநாயகன் மது அருந்த மாட்டான். பொய் பேச மாட்டான். பிறருக்கு உதவி செய்வான், நல்ல தனி மனித ஒழுக்கத்திலே சிறந்து விளங்குவான். பிற பெண்களை தாயாக மதிப்பான். நல்ல தெய்வீக பற்று கொண்டு நீதி நேர்மை தர்மம் போன்றவற்றை தனது வாழ்வில் கடைபிடிக்கும் பண்பாளனாக கதாநாயக பாத்திரத்தை சித்தரித்திருப்பார்கள். அன்றைக்கு சமூகத்தில் தொன்னூறு விழுக்காடு மனிதர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள். பத்து விழுக்காடு மனிதர்கள் தான் அன்றைய திரைப்படத்தில் வந்த வில்லன்கள் போன்று தீயபழக்கங்களுக்கு அடிமையாக வாழ்ந்தார்கள். இது நிதர்சனமான உண்மை. இன்னும் சொல்லப் போனால் குடிகாரன்களைக் கண்டால் பயந்து ஒடுவார்கள். ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. imagesஆண் பெண் இளம் ஆண் பெண் சிறுவர்கள் குழந்தைகள் என எந்த பாகுபாடுமின்றி குடிக்கத் தொடங்கி விட்டனர். பெண்களின் சுதந்திரம் வேண்டி பாடிய பாரதி இன்றைக்கு இருந்திருந்தால் நெஞ்சு பொறுக்கதில்லையே என்று மீண்டும் பாடி உயிரையே மாய்த்துக் கொண்டிருப்பான்.  இன்றைக்கு வரும் திரைப்பட கதாநாயகன் மட்டுமல்ல அனைத்து கதாபாத்திரங்களுமே மதுவை குடிப்பது ஏதோ அன்றாட உணவு பழக்கம் போலவே குடிப்பதை தினசரிப் பழக்கமாகவே சித்தரிக்கிறார்கள். காரணம் சமூகத்தின் சில பேரிடமிருந்த இந்த போதைப் பழக்கம் திரைப்படத்துறையினரால் மிகைப்படுத்தப்பட்டு  இன்றைய இந்த சமூகம் யதார்த்தமான நிலையாக வாழத் தொடங்கி ஏற்றுக் கொண்டு விட்டதாகவே கருத வேண்டியுள்ளது.
images (1)அதைவிட மிகப் பெரிய அவலம் மக்களைப் பாதுகாக்கவேண்டிய அரசாங்கமே மதுக்கடைகளை திறந்து வணிகம் செய்து கொண்டிருக்கிறது. குடிகாரன் பிள்ளை என்று அந்தக் காலத்தில் கேவலமாகப் பேசப்பட்ட நிலை மாறி தனது தந்தைக்கு பள்ளி செல்லும் சிறார் மதுக்கடைக்கு சென்று மது வாங்கி வருவதையும் நாளடைவில் அந்த பள்ளி மாணவனும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாவதும், அந்த மாணவன் மூலமாக இதர பள்ளி மாணவர்களும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதும் வாடிக்கையாகி விட்டது. இப்போது மாணவியர்களும் போட்டி போட்டுக் கொண்டு இந்த பழக்கத்திற்கு அடிமையாகி வருவதை என்னவென்று சொல்வது? மது அருந்துபவன் தான் இன்றைக்கு சமூகத்திலே பெரிய மனிதனாக கருதப்படும் பழக்கம் வந்துவிட்டது. அன்றைக்கு மது அருந்தி அடிமையானவன் கூட தன் மகன் இந்த மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி விடக் கூடாதே என்று நினைத்தான். ஆனால் இன்றைக்கு மது அருந்தாதவர்கள் தீண்டத்தகாத ஜன்மங்களாக கருதப்படுகிறார்கள் என்பது உண்மையிலும் உண்மை. இந்த அவல நிலைக்கு யார் காரணம்?
download (1)வள்ளுவரை தூக்கிப்பிடித்துக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் வீதியெங்கும் மதுக் கடைகளை திறந்து வைத்துள்ளார்கள். வள்ளுவர் என்ன குடிக்கவா சொன்னார்? வள்ளுவர் தான் எழுதிய திருக்குறளில் மது குடிப்பதை எதிர்த்து பதிவு செய்திருப்பது மட்டுமல்ல கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தையே எழுதியுள்ளார். திராவிட ஆட்சியாளர்கள் உண்மையிலேயே வள்ளுவரை பின்பற்றியா ஆட்சி செய்கிறார்கள். வள்ளுவருக்கு கோட்டம் எடுத்து விட்டால் போதுமா? வள்ளுவருக்கு சிலை அமைத்து விட்டால் போதுமா? வாயெல்லாம் வள்ளுவரைப் பாடிவிட்டு அந்த வாயாலேயே மதுவையும் மாமிசத்தையும் சாப்பிடும் இந்த அவல நிலை வேறு எங்காவது உண்டா? அன்றைக்கு பள்ளிகளில் நீதி போதனைகளை போதிப்பார்கள். எது நல்லது எது கெட்டது என்பதை பாரம்பரியக் கதைகள் வாயிலாக பண்பாட்டை போதித்தார்கள். கொடுமை,….. இந்தியாவின் போலி மதச்சார்பின்மையாளர்கள் அதற்கும் வேட்டு வைத்து விட்டார்கள்.
unnamedஊடகங்களும் திரைப்படங்களும் விபச்சாரமா செய்கின்றன? அத்துனை தனி மனித ஒழுக்கக் கேடுகளையும் நியாயப்படுத்தி செய்திகளையும் திரைப்படங்களையும் வெளியிடுவது நியாயம் தானா? தொலைகாட்சி சானல்களில் வரும் தொடர்கள் தனி மனித ஒழுக்கத்தை சிதைக்கின்றன. தீய செயல்கள் தீர செயல்களாக சித்தரிக்கப் படுகின்றன. இந்த தொடர்களைப் பார்க்கும் பெண்கள் சிறுவர்கள் தாங்களும் இதைப் போன்று செயல்பட ஆரம்பிக்கின்றனர். ஆனால் இந்த அவலங்களை பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் பலர் நியாயப் படுத்துகின்றனர்.
அரசாங்கமும் சரி, இன்றைக்கு ஊடகங்களும் சரி சமூகத்திற்கு எதிராகவே இயங்குகின்றன. ஆனால் பெற்றோர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இன்றைக்கு இந்த பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர்கள் தான் இன்றைய நடுத்தர வயது இளம் வயது பெற்றோர்கள். பெரும்பாலான பெற்றோர்கள் பாசம் என்ற பெயரில் தங்கள் குழந்தைகளின் தனி மனித ஒழுக்கங்களை சிதறடிக்கிறார்கள். நன்கு படித்து பட்டம் பெற்ற தாய் தந்தையரின் குடும்பத்தில் பிறந்த மாணவி இந்த மது பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது எவ்வளவு கேவலம்.இன்றி இந்தக் குடும்ப மானம் ஊடகங்களிலும் தொலைக் காட்சி சானல்களிலும் கப்பலேறிக் கொண்டிருக்கிறது. பெற்றோர்கள் இப்போது அழுது என்ன பயன்? மேற்கத்திய கலாச்சாரத்தை தனது குழந்தைகள் பின்பற்றும் போது அதைக் கண்டு மகிழும் பெற்றோருக்கு இது ஒரு பாடம்.  தங்கள் வளரும் குழந்தைகளை சீர்திருத்தி வளர்க்க முடியாமல் சிலர் தவிக்கிறார்கள். அந்தக் காலத்தில் தாய் தந்தையுருடன் மகன் வாழ்ந்த காலம். குடித்து விட்டு வீட்டிற்கு வருவது என்பது அபூர்வம். காரணம் பெற்றோர்கள் கண்டிப்பார்கள் என்ற பயம் இருந்தது. அது மட்டுமல்ல. தாத்தா பாட்டிகள் தங்களது பேரக் குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கங்களை போதிக்கும் வகையில் பாட்டி கதைகள் சொல்வது வழக்கம். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும்போது வெறும் சாப்பாட்டை மட்டும் ஊட்டமாட்டார்கள். பாசத்தையும் சேர்த்தே ஊட்டுவார்கள். அது மட்டுமல்ல அந்த சாப்பாட்டுடன் சின்ன நீதிக் கதைகள் தனி மனித ஒழுக்கங்களைப் போதிக்கும் சம்பவங்களையும் கதையாகவே சாப்பாட்டுடன் ஊட்டி விடுவார்கள். இது நமது நாட்டின் பண்பாடு. இன்றைக்கு தாத்தாவும் இல்லை பாட்டியும் இல்லை அம்மாவும் வேலைக்கு போய்விடுவாள் அப்பாவும் வேலைக்கு போய்விடுவார். போட்டு வைத்திருக்கும் சாப்பாட்டை தொலைக்காட்சி சானல்களை பார்த்து தானே சாப்பிட்டுக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு குழந்தைகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இன்றைய சமூகம் வந்துவிட்டது.
123குடிப்பழக்கத்தால் பெண்கள் மட்டுமல்ல ஒரு குடும்பமே சீரழிகிறது. அதனால் தான் மகாத்மா காந்தி மது குடிப்பதை தடை செய்ய வேண்டும் என்று தனது பிரதான கொள்கையாக கொண்டார். இந்த போதனையை முன்வைத்து ஏதாவது ஊடகங்களோ அல்லது சானல்களோ பிரச்சாரம் செய்து வருகிறதா? அவர்கள் நோக்கம் வணிகம். அடுத்து பரபரப்பு செய்திகள் வரும் வரை ஒரு மாணவி குடித்து விட்டாள். குழந்தைக்கு மது தரப்பட்டது, இன்று ஒரு மாணவன் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்தான் என்று, ஒவ்வொருவரும் விவாதங்களை அரங்கேற்றிவிட்டு பின்  இந்த பிரச்சனைகள் மறந்துவிடும் இந்தக் கேடு கெட்ட மனிதர்களை என்னவென்று சொல்வது? இந்த அவல நிலைக்கு யாரை குறை சொல்வது?

மொத்தத்தில் யாருக்கும் வெட்கமில்லை!