ரிக் வேதத்தில் ஒளியின் வேகம்

POSTED BY  தர்மபூபதி ஆறுமுகம்
பாரதம் உலகிற்கு எண்ணற்ற கொடைகளை அளித்துள்ளது. வானவியல், மருத்துவம், கணிதவியல், மற்றும் அறிவியலில் வியத்தகு சாதனைகளைப் படைத்திருக்கிறது. பூஜ்யத்தைக் கண்டுபிடித்தது பாரதீயரே. ஒளியின் வேகத்தை 1865 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த கணித மேதையும் பௌதீக ஆராய்ச்சியாளருமான ஜேம்ஸ்கிளர்க்மேக்ஸ்வெல்  என்பவர் கண்டுபிடித்தார். நவீன அறிவியலின் படி ஒளியின் வேகம் 186000 மைல்கள் / செகண்ட்ஸ் இது  நவீன அறிவியலின் கண்டுபிடிப்பாகும்.
ஆனால் ஒளியின் வேகம் குறித்த முதல் மதிப்பீடு பழமை வாய்ந்த ஹிந்து வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒளியின் வேகம் குறித்த விபரத்தை நாம் முதன் முதலாக வேத கால அறிஞரும் ஞானியுமாகிய சாயனாச்சார்யா அவர்கள் ரிக்வேதத்திற்கு  எழுதிய வர்ணனை மூலமாக அறிகிறோம். 14ஆம்நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தில் தென்னிந்தியாவின் கர்நாடக பகுதியில் விஜயநகர சாம்ராஜ்யத்தை அலங்கரித்த மன்னன் புக்காவின் அமைச்சரவையின் முக்கிய மந்திரி சாயனாச்சார்யா ஆவார்.
சூரிய ஒளியின் கடக்கும் வேகம் ஒரு நிமிஷர்தா நேர இடைவெளியில் 2202 யோஜனா தூரம் கடக்கும் என்று சாயனாச்சார்யா தனது வர்ணனையில் குறிப்பிடுகிறார்.அதாவது நிமிஷர்த என்பது நிமிஷ அர்தா என்ற வார்த்தையின் கூட்டுச் சொல் ஆகும். அர்த என்றால் சமஸ்கிருதத்தில் பாதி என்று பொருள். நிமிஷாவில் பாதி. (ஆங்கில நிமிடத்தையும் இதையும் ஒப்பிட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்) சமஸ்கிருதத்தில் நிமிர்ஷதா என்று குறிப்பிடுவது பார்ப்பதற்குள் நகர்ந்து செல்வது என்ற பொருள் படும்படியான கண் மூடித் திறப்பதற்குள் என்று பொருள் கொள்ளலாம். பண்டைய வேதங்களில் நிமிஷா என்பது கால அளவைக் குறிக்கவும் ( Unit of Time ), யோஜனா என்பது பயண தூரத்தை (Unit of Distance) குறிக்கும் அளவாகவும் பயன்படுத்தியுள்ளனர்.
ரிக் வேதத்தில் அமைந்துள்ள வர்ணனைகளை ஆராய்ந்து ஒளியின் வேகம் குறித்த ஆய்வினை நடத்திய எஸ் எஸ் தே மற்றும் வர்த்தக் ஆகியோர் அது குறித்த கணித முடிவுகளை கீழ்கண்டவாறு ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். ரிக்வேதம் பாடல் 1:50 நான்காவது வசனம்

तरणिर्विश्वदर्शतोजयोतिष्क्र्दसिसूर्य |

विश्वमाभासिरोचनम |

taraNir vishvadarshato jyotishkrdasi surya |

vishvamaa bhaasirochanam ||

images (1)
மந்திரி சாயனாச்சார்யா அவர்கள் மேற்கண்ட பாடலுக்கு தனது வர்ணனையை கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

tatha ca smaryate yojananam. sahasre dve dve sate dve ca yojane

ekena nimishardhena kramaman.

அதாவது “சூரிய ஒளியின் கடக்கும் வேகம் நிமிர்ஷதாவிற்கு  2202 யோஜனா ” என்பதை நினவிற் கொள்ள வேண்டும் என்று சாயனாச்சார்யா கூறுகிறார்.
 images
மகாபாரதத்தில் சாந்தி பர்வம் மோக்ஷ தர்ம உப பர்வத்தில் நிமிஷா பற்றிய கால நேர அளவுபற்றிய குறிப்பு வருகிறது.
“யோஜநாநாம் ஸகஸ்ரேத்தி த்விசத த்வியோஜநம்” (சுலோகத்தின் பகுதி)
அதாவது 2202 யோஜணை அதாவது 189547 மைல்கள்.அடுத்த பகுதியில் அரை நிமிஷத்தில் இவ்வளவு தூரம் கடக்கும் அந்த ஒளிக்கு வணக்கம் என்று சொல்லப் படுகின்றது.
 15 நிமிஷா = 1 காஷ்தா
30 காஷ்தா = 1 கால
30.3 கால = 1 முகூர்த்த
30 முகூர்த்தம் = 1 பகல் இரவு
ஒரு பகல் இரவு என்பது 24 மணி நேரம் ஆகும்.
ஆக 24மணி நேரம்  = 30 x 30.3 x 30 x 15 நிமிஷா ஆகும்
நிமிஷாவில் குறிப்பிடப்படும் போது  409050 நிமிஷா ஆகும்
 
அதே போன்று  1 மணி நேரம் = 60 x 60 = 3600 செகண்ட்ஸ்
24 மணி நேரம் = 24 x 3600 செகண்ட்ஸ் = 409050 நிமிஷா
409050நிமிஷா= 86,400 செகண்ட்ஸ்
1 நிமிஷா  = 0.2112 செகண்ட்ஸ் (கண் மூடி திறக்கும் நேரம்)
1/2 நிமிஷா(நிமிர்ஷதா ) = 0.1056 செகண்ட்ஸ்
யோஜனா தூரத்தைக் குறிக்கும் அளவு(unit of distance)
விஷ்ணு புராணத்தில் (தொகுதி 1 அத்தியாயம் 6) யோஜனா பற்றிய குறிப்பு வருகிறது.
10 பராமனுஷ் = 1 பராசூக்ஷ்ம
10 பராசூக்ஷ்ம = 1 தராஸ்ரேனு
10 தராஸ்ரேனு = 1 மஹிராஜஸ் (particle of dust)
10 மஹிராஜஸ் = 1 பலாக்ரா (hair’s point)
10 பலாக்ரா = 1 லிக்க்ஷா
10லிக்க்ஷா = 1 யுகா
1o யுகா = 1 யவோதரா (heart of barley)
10 யவோதரா = 1 யவா (barley grain of middle size)
10 யவா = 1 அங்குலா (1.89 cm or approx 3/4 inch)
6 விரல் = 1 பாத (the breadth of it)
2 பாத = 1 விடாஸ்டி (span)
2 விடாஸ்டி = 1 ஹஸ்தா (cubit)
4 ஹஸ்தா = தணு, தண்டா(அ) பௌருஷா (a man’s height), அ 2 நர்கஸ் = 6 அடி
2000 தணுஸ் = 1 கௌயுதி (distance to which a cow’s call or lowing can be heard) = 12000 அடி
4 கௌயுதி = 1 யோஜனா = 9.09 மைல்கள்
இந்த அளவைகளை வைத்து ஒளியின் வேகம் தற்போதைய நவீன அளவை (யூனிட்) கணக்கிடும் போது,
= 2202 x 9.09 மைல்கள் / 0.1056 செகண்ட்ஸ்
= 20016.18 மைல்கள் / 0.1056 செகண்ட்ஸ்
= 189547 மைல்கள்/ செகண்ட்ஸ்!!
நவீன அறிவியலின் படி ஒளியின் வேகம் 186000 மைல்கள் / செகண்ட்ஸ்
குறிப்பு: இந்த இரண்டு மதிப்பீடுகளுக்கும் சிறிய வித்தியாசம் இருப்பது எங்களின் கணக்கீட்டு முறையில் வேதங்களின் அளவீட்டை தற்போதைய அளவீட்டிற்கு துல்லியமாக மாற்றம் செய்வதில் உத்தேசமாக நாங்கள் கணக்கிட்டது தான் காரணமே தவிர பண்டைய கால கணக்கில் எந்த தவறும் இல்லை. உதாரணத்திற்கு ஒரு அங்குலம் என்பதை  ¾ அங்குலம் என்று தோராயமாக குறிப்பிட்டுள்ளோம். உண்மையில் அங்குலம் என்பது துல்லியமாக முக்கால் அங்குலமல்ல என்று இதன் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கட்டுரைக்கு உதவியவை:
http://www.hitxp.com/articles/veda/light-speed-rigveda/
டாக்டர் வி.எஸ்.நரசிம்மன் எழுதிய பாரதீய விஞ்ஞான சாதனைகள்
Eternally Tallented India  108 FACTS

Leave a comment