Archive for the ‘அரசின் கொள்கைகள்’ Category

வாய்ப்பை தவற விட்டது மட்டுமல்ல,தன் கடமையிலிருந்தும் தவறி விட்டது பாஜக!

February 25, 2018

ஆறு.தர்மபூபதி

image

கம்யூனிஸ்ட் தலைவர் ராஜா உச்ச நீதி மன்ற நீதிபதி செல்லமேஸ்வருடன் ரகசிய சந்திப்பு நடத்தியது அவருக்கும் செல்லமேஸ்வருக்கும் உள்ள தொடர்பு அம்பலமானது.
000
ஒரு அரசியல்வாதி பதவியில் இருக்கும் ஒரு நீதிபதியை தனது இல்லத்தில் சந்தித்தது முன்பின் நடந்திராதது நாட்டில் பிரிவினை வாதம் நக்சல் ஆதரவு வாதம் பேசும் ஒரு அரசியல் வாதி உச்ச நீதி மன்ற நீதிபதியுடன் தொடர்பு கொண்டு தங்கள் திட்டத்தை நீதித்துறையின் மூலம் நிறைவேற்றுவது இந்திய அரசியலைமப்பு சட்டத்திற்கு விடப்பட்டுள்ள சவால்.
000
ஆனால் இதை வெறுமனே கண்டித்துவிட்டு காணமல் இருப்பது போல நடந்து கொண்ட அரசியல் கட்சிகளின் நிலை கண்டு வெட்கப்படுகிறேன்.
000
இதுவே ஒரு ஆளும் கட்சி தலைவர் சந்தித்திருந்தால் இந்த எதிர்கட்சிகள் என்ன குதி குதித்திருக்கும்?
பாராளுமன்றத்தில் இது குறித்து குரல் எழுப்பியிருக்க மாட்டார்களா?
அந்த நீதிபதியை பதவியிறக்கம் செய்திருக்க மாட்டார்களா?
இந்த ராஜா தேசதுரோகி.பிரிவினை வாதத்திற்கும் கிருத்துவ மெசினரிகளுக்கும் பிரதிநிதியாக இயங்கி வருபவர்.
000
கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர்.இவரது பதவிக்காலம் முடிந்தால் மீண்டும் காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்பி பதவியை பெறுவதில் முனைப்புடன் இருக்கும் தேசதுரோகி.ஆளும் கட்சி எம்பி உச்ச நீதிமன்ற ணிதிபதியை இப்படி ரகசியமாக சந்தித்திருந்தால் இதே ராஜா எப்படி அதை எதிர்த்து குரல் கொடுத்திருப்பார்.
எண்ணிப்பாருங்கள்
000
ஒரு அரசியல் கட்சி தன் எண்ணத்ததை நிறைவேற்ற அரசியல் சார்பற்று இருக்க வேண்டிய நீதிபதி துணை போனால் நீதியின் நிலைமை என்ன?
000
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் (ஒரு சில அரசியல் கட்சியின் ஆசைக்கேற்ப) நாடத்தை அரங்கேற்றுகிறார்கள்.நாடகம் முடிந்ததும் (இயக்குனர்) ராஜா( நல்லபடியாக நாங்கள் சொன்னபடி நடித்தீர்கள் என்று பாராட்டி ) கைகுலுக்குகிறார். (தயாரிப்பாளர்) ராகுல் நாடகம் பற்றிய விமர்சனத்தை திட்டமிட்டபடி பத்திரிக்கையாளர்களைக் கூட்டி படிக்கிறார்.
000
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை எதிர்கட்சிகள் சில நீதிபதிகள் சிலரின் துணை கொண்டு வீழ்த்த முயற்சிப்பது எவ்வளவு பெரிய ஜன நாயகப் படுகொலை?
000
அந்த நீதிபதியும் அரசியல்வாதியும். பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டாமா?
000
இந்த வாய்ப்பை தவற விட்டதுமட்டுமல்ல,தன் கடமையிலிருந்தும் தவறி விட்டது பாஜக.

Advertisements

கோழைத்தனமான ஆண்மையில்லாத காங்கிரஸ் அரசு.

June 12, 2016

ஆறு.தர்மபூபதிimage

30 ஆண்டுகளாக சீனா……  இந்தியாவிற்கு எதிராக எடுக்காத நிலையை நரேந்திர மோடி வந்த பிறகே அந்த நாடு எடுக்க ஆரம்பித்துள்ளது!  -மணீஷ் திவாரி,  காங். செய்தி தொடர்பாளர்
உண்மை, இதில்ச ந்தேகமில்லை. காங்கிரஸ் என்ன சொல்ல வருகிறது?சீனாவிற்கு பயந்து கொண்டு இருந்திருக்க வேண்டுமென்று சொல்கிறதா? குட்ட குட்ட குனிந்து கொண்டு இருப்பதற்கு மோடி ஒன்றும் மன்மோகன் சிங் அல்ல. இப்போது சீனா ஏன் இந்தியாவைக் கண்டு பயப்படுகிறது?
சீனா காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவை அடக்கி வைத்திருந்தது. அருணாச்சல பிரதேசத்தில் அடிக்கடி ஊடுருவல்களை மேற்கொண்டு வந்தது. நமது எல்லை அருகில் ஆயிரக்கணக்கனக்கான கிமீக்கு பாதை அமைத்து விட்டது. அதை தடுத்து நிறுத்த அன்று காங்கிரஸ் அரசால் எதுவும் செய்ய இயலவில்லை. சீனா இந்தியாவின் நாற்புரமும் உள்ள நாடுகளை திட்டமிட்டு நமக்கு எதிரி நாடுகளாக  உருவாக்கி விட்டது.
இலங்கையில் ராஜபக்சே ஆட்சியில் இருந்த போது இந்தியாவின் தவறான காங்கிரசின் அணுகு முறையால் சீனாவிடம் நட்பு கொண்டது மட்டுமல்ல இலங்கைத் துறைமுகத்தை சீனாவின் கட்டுப்பாட்டிற்கு கொடுத்தது. பாஜாக ஆட்சிக்கு வந்தவுடன் இலங்கையை மீண்டும் நட்பு நாடாக முயற்சி எடுத்து சீனாவின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்தார்.
“வியட்னாமில் செயற்கைக்கோள் மையத்தை அமைத்தது இந்தியா – கலக்கத்தில் சீனா!
நியுஸ் 7 சானல் (http://ns7.tv/ta/india-build-satellite-tracking-station-vietnam-offers-eye-china.html)
புவி கண்காணிப்புத் தகவல்களை அறிவதற்காக, வியட்னாம் நாட்டில் செயற்கைக்கோள் மையத்தை இந்தியா அமைக்கவுள்ளது. 

இந்தியாவின் இந்த நடவடிக்கை சீனாவை கலக்கமடைய வைத்துள்ளது.

 இஸ்ரோ மூலம் ஏவப்படும் செயற்கைக் கோள்களை கண்காணிக்க, அந்தமான்-நிகோபார், புருனே, இந்தோனேஷியாவின் பியாக் மற்றும் மொரீஷீயசில் தரைக் கண்காணிப்பு மையங்களை இந்தியா அமைத்துள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, வியட்னாமின் ஆதரவுடன் அந்நாட்டின் ஹோசிமின் நகரில், புதிதாக கண்காணிப்பு மையம் அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. சுமார் 138 கோடி ரூபாய் செலவில் இதற்கான கட்டுமானப் பணிகளை இந்தியா மேற்கொள்ளவுள்ளது. 

இந்திய பெருங்கடல் பகுதியில் இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களில் இருந்து புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பெறவே, இந்த மையம் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் மூலம், சீனாவையும், சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியையும் இந்தியாவால் கண்காணிக்க முடியும் என பாதுகாப்புத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, இந்தியா மற்றும் வியட்னாமுடன் சீனா எல்லைப் பிரச்னை கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கை சீனாவை கலக்கமடைய வைத்துள்ளது.”
சீனாவிற்கும் வியட்னாமிற்கும் எல்லைத் தகராறு உண்டு. வியட்னாமின் கடலில் உரிமை கொண்டாடுகிறது சீனா. அதை தடுக்க வியட்நாம் இந்தியாவை அதன் கடல் எல்லையில் இந்தியாவின் ஓ.என்.ஜி.சி. விதேஷ் நிறுவனமும், வியட்னாமின் பெட்ரோ வியட்னாம் நிறுவனமும் தென் சீனக் கடல் பகுதியில் எண்ணெய் தூர்ப்பண பணிகளை கூட்டாக இணைந்து மேற்கொள்வது. கடல்வழிப் பாதையில் பாதுகாப்பு, கடற்கொள்ளையர்களை விரட்டியடித்தல், கடலில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உதவுதல் போன்ற முக்கிய அம்சங்கள் அடங்கிய ஒப்பந்தத்தில் இந்தியாவும் வியட்னாமும் கையொப்பமிட்டுள்ளன. இதனால் சீனா கலக்கம் அடைந்துள்ளது.
இந்தியாவை சுற்றி வளைக்க சீனா பின்னிய முத்துமாலைத்திட்டம்:
பங்களாதேசில் சீனா மேற்கொண்டிருந்த காக்ஸ் பஸாரில் உள்ள ”சொனடியா” துறைமுக அபிவிருத்தி திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது பங்களாதேசின் ‘பெய்ரா’ ஆழ் கடல் துறைமுகத்தினை மேம்படுத்தும் ஒப்பந்தத்தினை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது பங்காள தேச அரசு. மோடியின் ராஜதந்திரத்திற்கு  மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது
இதன் மூலம் இந்தியாவை சுற்றி முத்துமாலை என்ற பெயரில் சீனா உருவாக்கி வைத்த மாயவலையை மோடி முற்றிலுமாக அறுத்து விட்டார் என்றே சொல்லலாம். சீனா இந்தியாவை சுற்றி உருவாக்கி வைத்திருந்த திட்டம்தான் முத்து மாலை திட்டம், இந்த திட்டத்தின் படி இந்தியாவின் கிழக்கே பங்காள தேசத்தில் உள்ள வங்காள விரிகுடாவில் சிட்ட காங்கில் உள்ள சொனடியா துறைமுக அபிவிருத்தி திட்டம், அடுத்து தெற்கே இலங்கையில் இந்தியப் பெருங்கடலில் ராஜபக்சேயின் பெயரால் புதிதாக உருவாக்கபட்ட “ஹம்பாந் தோட்டை” துறைமுகம். அடுத்து அரபிக்கடலில் பாகிஸ்தானில் “குவாடர்” துறைமுக விரிவாக்கம் என்று இந்தியாவின் மூன்று திசையிலும் உள்ள நாடுகளில் உள்ள துறை முகங்களை கைப்பற்றி அபிவிருத்தி என்ற பெயரில் தன்னுடைய கடல் படைகளை இந்தியாவை சூழ்ந்து மூன்று திசைகளிலும் நிலை நிறுத்துவது. இது தான் சீனாவின் மாஸ்டர் பிளான். இது இந்தியாவின் கழுத்தில் போடப்படும் மாலை போல உள்ளதால் இதற்கு முத்துமாலை திட்டம் என்று பெயர் வந்தது. பிற்காலத்தில் இந்தியா-சீனா போர் வந்தால் மும்முனையில் இருந்து இந்தியாவை தாக்குவதற்கு வசதியாக இருந்தது இந்த திட்டம்.
பங்காளதேசில் சீனா துறைமுக மேம்பாட்டின் பேரில் உள்ளே நுழைந்ததையும் இலங்கையில் சீனாவின் உதவியுடன் ஹம்பா ந்தோட்டையில் துறைமுகம் அமைந்ததையும் பாகிஸ்தானில் குவாடர் துறை முகத்தை தன்னுடைய கட்டு பாட்டிற்குள் சீனா கொண்டு வந்ததையும் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு வேதனை தெரிவித்து அறிக்கை விட்டு விட்டு ஒதுங்கி கொண்டது முந்தைய காங்கிரஸ் அரசு. இத்தாலிய சோனியாவிற்கு இந்தியா மீது பெரிதாக என்ன அக்கறை இருக்க முடியும்? மோடியின் அரசு சும்மா இருக்கமுடியுமா.. இது நம்முடைய தாய் பூமியல்லவா.. சக்கர வியூகத்தை கண்டு பிடித்த நமக்கு அதை உடைக்க தெரியாதா என்ன?
பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை சீனா கையகபடுத்தியதன் மூலம் அரபிக்கடலில் இந்தியாவிற்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையையும் சீனா எளிதில் மேற்கொள்ள முடியும். இப்படி இந்தியாவை சுற்றி சக்கர வியூகம் அமைத்த சீனாவிற்கு ‘செக்’ வைக்கும் முயற்சிகளை மோடி தலைமையில் உள்ள பிஜேபி அரசு தொடர்ந்து செய்துவருகிறது.
இலங்கையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சீனாவை விரட்ட ராஜபக்சே வீட்டிற்கு அனுப்பபட்டு, மைத்ரி பால ஸ்ரீசேனா இந்தியாவின் உதவியுடன் ஆட்சிக்கு அழைத்து வரபட்டார். இதனால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தடுக்கபட்டு இந்தியாவின் கண்ட்ரோலில் வந்தது இலங்கை. அதுமட்டுமல்லாமல் சீனா மேற்கொண்டிருந்த கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம் நிறுத்தபட்டு கொழும்பு துறை­முக நகர் திட்டம், கொழும்பு துறை­முக அபி­வி­ருத்தி திட்டம், திரி­கோ­ண­மலை துறை­முக அபி­வி­ருத்தி திட்டம் ஆகிய அனைத்திலும் இந்தியா நுழைய உள்ளது.
imageஅரபிக்கடலில் உள்ள பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை மேம்படுத்தி சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தை இணைக்கும் பணியினை சீனா செய்து கொண்டு வருகிறது. இந்த குவாடர் துறைமுகம் தற்பொழுது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு செக் வைக்கும் முயற்சியாக பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்திலிருந்து 76 கி.மீ., தூரமே உள்ள ஈரானின் “சாபகார்” துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா அனுமதி பெற்றுள்ளது.
இதன்படி இந்த துறைமுகம் இந்தியாவின் கட்டுபாட்டிற்குள் வந்து விட்டது. இங்கு வேலையையும் தொடங்கி விட்டோம் என்று நிதின் கட்காரி ஏற்கனவே அறிவித்து விட்டார். அது மட்டுமல்லாமல் இப்பொழுது ஈரானின் சாபகார் துறைமுகத்திற்கு அருகிலேயே யூரியா தொழிற்சாலையை தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் சீனா, இந்தியாவை சுற்றி பங்காளதேஷ், இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நிறுவிய மாயவலையை பங்காளதேஷ், இலங்கை ஆகிய நாடுகளை இந்தியாவின் பிடிக்குள் தன்னுடைய ராஜதந்திரத்தினால் கொண்டு வந்த மோடி பாகிஸ்தானை திருத்த முடியாது என்பதால் பாகிஸ்தானிற்கு பக்கத்தில் ஈரானில் நின்று பதிலடி கொடுக்க தயாராகி விட்டார். அதேபோன்று நேபாளம் கிட்டத்தட்ட இந்திய நாட்டின் ஒரு பகுதி போன்று இருந்தது.காங்கிரசின் அஜாக்கிரதையான வெளியுறவுக் கொள்கையால் சீனாவிலிருந்து மாவோயிஸ்ட்கள் நேபாளத்தில் ஊடுருவி மன்னராட்சியை கவிழ்த்து இன்று அங்கு நேபாளம் சீனாவின் காலனியாக மாறியுள்ளது. அதை மீட்டெடுக்க மோடி முயன்று வருகிறார்.
இப்போது சீனா நம்மைக் கண்டு அஞ்சுகிறது. அணு சக்தி வழங்கும் நாடுகளின் குழுவில் இந்தியா இணைய உள்ளது .இதற்க்கான அனைத்து நாடுகளையும் இந்தியாவிற்கு ஆதற்காக குரல் கொடுக்க மோடியின் வெளிநாட்டு விஜயம் உதவியுள்ளது.சீனாவின் எதிரிகள் இன்று இந்தியாவின் நட்பு நாடுகளாகி விட்டன.
அன்னிய நாடுகள் நம்மைக் கண்டு அஞ்ச வேண்டுமே தவிர நாம் அஞ்சி வாழ்ந்தால் நமது எல்லைகள் மட்டுமல்ல ஒரு நாள் அனைத்துமே பறி போகும் சூழ்நிலைகள் வரும், கோழையாக இருந்து அனைத்தையும் இழப்பதைவிட வீரனாக இருந்து போரிடுவதே அரசனுக்கு அழகு” என்றான் சாணக்கியன்.
ஆக சீனாவைக் கண்டு காங்கிரஸ் அரசு பயந்தது. நாம் அவர்களிடம் பணிந்து போனோம். 30 ஆண்டுகளாக சீனா…… இந்தியாவிற்கு எதிராக எடுக்காத நிலையை மோடி வந்த பிறகே அந்த நாடு எடுக்க ஆரம்பித்துள்ளது என்று காங்கிரஸ் கூறுகிறது.
அப்படியென்றால் இதுவரை சீனா என்ன நிலையை காங்கிரஸ் ஆட்சியில் எடுத்திருந்தது என்பதை காங்கிரஸ் விளக்க வேண்டும். நமக்கு நட்பு நாடாவாகாவா இருந்தது? பகிரங்கமாக பாகிஸ்தானிற்கு ஆதரவாகவும் இந்தியாவிற்கும் எதிராகவும் சீனா செயல்பட்டு வந்தது. ரகசியமாக தனது நிலையை வலுவாக்கிக் கொண்டு இந்தியாவை சுற்றியிருந்த நாடுகளையும் தனது ஆதிக்கத்தில் கொண்டு வர முயன்று கொண்டிருந்தது. ஆனால் காங்கிரஸ் இந்த சதித்திட்டத்தை புரிந்து கொண்டாலும் எதிர் நடவடிக்கை எடுக்க பயந்த ஆண்மையிழந்த அரசாக இருந்தது. காங்கிரஸ் .இப்போது மட்டுமல்ல எப்போதுமே இந்தியா வலுவான ஆதிக்கம் நிறைந்த நாடாக இருக்க விரும்பவில்லை. ஐக்கிய நாட்டு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவி வழங்கியபோது அதை நேரு மறுத்ததின் பயனை இன்று அனுபவிக்கிறோம். அதுமட்டுமல்ல நேருவின் பஞ்சசீலக் கொள்கையால் கேவலமாக போரில் சீனாவிடம் தோற்றுப் போனதையும் மக்கள் மறந்து விடவில்லை.ஆகவே காங்கிரசாரின் கையாலாக தனத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது காங்கிரசாருக்கு அழகு.அதைவிட அழகு அந்நிய நாடுகளுக்கு ஆதரவாக பேசாமலிருப்பது.
காங்கிரசார் ஏன் சீனாவிற்கு இப்படி வக்காலத்து வாங்குகிறார்கள் என்று யோசித்தேன். பிறகு தான் புரிந்தது அவர்களின் கூட்டணி கம்யூனிஸ்ட்களுடன். அதனால் கம்யூனிஸ்ட்களின் சீன விசுவாசம் காங்கிரசிற்கும் வந்துவிட்டது போலும்.

நாமும் தெரிந்து கொள்ளவில்லை… நமது நீதிமன்றங்களும் புரிந்து கொள்ளவில்லை……..

January 13, 2016

ஆறு.தர்மபூபதி

நம்முடைய அரசியலமைப்பு சட்டம் 1950 இல் உருவாக்கப்பட்ட பொழுது அதிலே இந்தியா என்பதை முழு அதிகாரமுடைய ஜனநாயக குடியரசு (sovereign democratic republic) என்று தான் வரையறுத்தார்கள். அப்போது மதச்சார்பின்மை என்ற சொல்லோ சோசிலிசம் என்ற சொல்லோ உள்ளே வைக்கப்படவில்லை. 
அது எப்போது உள்ளே சேர்க்கப்பட்டது? இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலகட்டத்தில் அது உள்ளே சேர்க்கப்பட்டது. சமய சார்பற்ற சோஷிலிச ஜனநாயக என்ற வாசகங்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்ட முகப்புரையில் சேர்க்கப்பட்டது. 42 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் விளைவாகவே இந்த மதச்சார்பின்மை, சோசிலிசம் என்ற இரண்டு சொற்களும் அரசியலமைப்பு சட்டத்தில் வைக்கப்பட்டன. 
The 42nd Amendment amended the Preamble and changed the description of India from “sovereign democratic republic” to a “sovereign, socialist secular democratic republic”.
imageஇந்த 42 ஆவது திருத்தம் என்பது இன்னோர் அரசியலமைப்பு சட்டம் என்றும் இந்திரா காந்தியின் அரசியலமைப்பு சட்டம் என்றும் சொல்லப்படுகிறது. ஏன்? இந்த திருத்தம் நம்முடைய அரசியலமைப்பின் முழு வடிவத்தையே மாற்றி அமைத்தது. அரசியலமைப்பு சட்டத்தில் இருந்த அனைத்து ஷரத்துக்களும் திருத்தப்பட்டன. மதச்சார்பற்ற சோசிலிச நாடு என அரசியலமைப்பு சட்டத்திலே இருப்பது சரி தானே என சிலர் நினைக்கலாம். இதே போன்ற ஒரு திருத்தம் அரசியலமைப்பு நிர்ணய சபையிலே கொண்டு வரப்பட்டது. அது இந்தியாவை மதச்சார்பற்ற, சோசிலிச, கூட்டாட்சி அமைப்பு என சொல்லியது. ஆனால் அம்பேத்கர் அதை நிராகரித்தார்.  அம்பேத்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட நமது அரசமைப்புச் சட்டத்தில் “மதச்சார்பின்மை’ “சோஷலிசம்’ என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. மதச்சார்பின்மை’, “சோஷலிசம்’ என்ற வார்த்தைகள் அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. மதச்சார்பற்ற தன்மை என்பது, இந்தியாவின் இயல்பிலேயே அமைந்துள்ளது என்பதால் அரசமைப்புச் சட்டத்தில் அந்த வார்த்தைகளைச் சேர்ப்பது அவசியம் என அம்பேத்கர் கருதவில்லை.
இதையெல்லாம் விட மிகப்பெரிய பொய் பரப்புரை இந்த சோசிலிசம், செக்குலரிசம் என்ற கொள்கைகளை 1947 லேயே கொண்டுவரப்பட்டது போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் காங்கிரஸ் கட்சியின் சர்வாதிகாரி இந்திரா ஆட்சியில் தான் இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டு இன்றைக்கு இந்த சட்டதிருத்தம் இந்தியாவையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.
imageஇந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்த பிறகு மதச்சார்பற்ற அரசு, மதச்சார்புள்ள கோவில்களை நிர்வகிக்கும் அதிகாரம் காலாவாதியாகி விட்டது என்று தானே பொருள். அதற்கு முன் இயற்றப்பட்ட மதச்சார்புள்ள ஹிந்துக் கோவில்களை நிர்வகிக்கும் அதிகாரம் தற்போது மதச்சார்பற்ற அரசுக்கு இல்லை. எப்போது இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தில் சமய சார்பற்ற என்ற வார்த்தை சேர்க்கப்பட்டதோ அன்றைக்கே ஒரு மதத்தின் கோவில்களை கட்டுப்படுத்தும் உரிமையை அரசு இழந்து விட்டது. அதை சுட்டிக்காட்டி நாம், ஹிந்துக்கோவில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கத் தவறி விட்டோம் என்பதே நிதர்சனமான உண்மை.இந்த உண்மைகளை நாமும் தெரிந்து கொள்ளவில்லை. நீதிமன்றங்களும் கருத்தில் கொள்ளவில்லை.
இன்றைக்கு இருக்கிற மத்திய அரசு இந்த அடிப்படை உண்மையைக் கருத்திற்கொண்டு ஹிந்துக் கோவில்களை அரசுக்கு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும்.நாமும் அதற்கு குரல் கொடுப்பதன் மூலமே அரசும் நீதிமன்றங்களின் தேவையற்ற தலையீடுகளும் தடுக்கப்படும் என நம்புகிறேன்.

மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசா? பகுதி 3

April 29, 2015
ஆறு.தர்மபூபதி
Picture1டெஃஸ்ட்

கரியைக் கூட விட்டு வைக்காத காங்கிரஸ்?

மன்மோகன் பிரதமராக மட்டுமில்லை, நிலக்கரித்துறை அமைச்சராகவும் இருந்தார். அவருடைய பதவிக் காலத்தில் பெரும் கார்ப்பரேட் தொழிலதிபர்களுக்கு எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு விற்பனை செய்தார்.
download
அதனால் அரசுக்கு பல லட்சம்கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது ஏலம் முறையை பின்பற்றாமல்தகுதியற்ற நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி) கூறியது.இதையடுத்து இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தியது. முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டதால், சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 204 நிலக்கரி சுரங்கங்களின் உரிமத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து நிலக்கரி சுரங்கங்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்ய  நரேந்திர மோடி அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
ஒடிசாவில் உள்ள தலபிரா-2 சுரங்கம் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு முறைகேடாக ஒதுக்கப்பட்ட வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யும்படி அதன் தலைவர் குமாரமங்கலம் பிர்லா, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு கடிதம் எழுதியிருந்தார். அவரது பரிந்துரையின் பேரிலேயே இந்த சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக மன்மோகன் சிங்கிடம் சிபிஐ விசாரணை நடத்தும்படி டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ-1) ஆட்சிக்காலத்தில், கம்பெனி விவகாரங்கள் துறை இணை மந்திரியாக இருந்த பி.சி. குப்தா, தன் மகனின் நிறுவனத்துக்கு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு கிடைக்க தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியாக புகார் எழுந்தது. இதுபற்றி விசாரணை நடத்தி வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், தற்போது பி.சி.குப்தா மீதும் அவரது மகன் கவுரவ் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.காங்கிரசின் முக்கிய இளம் தலைவரும் பெரிய கார்ப்பரேட் தொழிலதிபருமான நவீன் ஜின்டால் மற்றும் நிலக்கரித்துறை ராஜாங்க மந்திரி தாசரி நாராயனராவும் ஊழலில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்[பட்டுள்ளது. நிலக்கரி ஊழலில் காங்கிரஸ் தனக்கு வேண்டியவர்களுக்கும் தங்களது மந்திரி சகாக்களுக்கும் கற்பனை பன்ன முடியாத மலிவான விலையில் ஒதுக்கீடு செய்துள்ளனர்.இந்த நிலக்கரி பேர ஊழல் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல்களில் சம்பந்தப்பட்ட சிலருடைய பெயர்களை நீக்குமாறு காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தன்னை நிர்ப்பந்தம் செய்ததாக முன்னாள் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) வினோத் ராய் கூறியுள்ளார்
இப்படி கார்ப்பரேட்களே காங்கிரசின் மத்திய அரசில் மந்திரி பதவி பெற்று தனது குடும்பத்தினர்களுக்கும் வேண்டிய தொழிலதிபர்களுக்கும் மிகக் குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்து கொள்வார்கள். இந்த காங்கிரச் தான் ஏழைகளின் அரசு.அது மட்டுமல்ல சோனியாவிற்கும் இதில் பங்குள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் imagesநடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன்னாள் பிரதமரும் நிலக்கரித்துறை அமைச்சருமான மன்மோகன் சிங்கிற்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து நேற்று காலை கட்சியினருடன் புறப்பட்ட சோனியா காந்தி, முன் எப்போதும் இல்லாத வகையில் சில அடி தூரத்திலிருந்த மன்மோகன் சிங் வீட்டுக்கு பேரணியாக நடந்தே சென்றார். அங்கு மன்மோகன் சிங்கை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பல இக்கட்டான சூழ்நிலைகள் இருந்த போதும் கூட அவர் வீட்டிற்கு செல்லாத சோனியா மன்மோகன் சிங்க தன்னைக் காட்டிக் கொடுத்து விடுவாரோ என்ற பயத்தில் தான் அவருக்கு ஆதரவளிக்க சென்றதாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டதை மறுக்க முடியுமா? இந்த காங்கிரசின் கார்ப்பரேட் முதலைகள் தான் மோடியை கார்ப்பரேட் அரசு என்று சொல்கிறார்கள்.

மோடி அரசின் புதிய ஏல முறை

வெளிப்படையான் ஈ ஏல முறை காரணமாக கார்ப்பரேட்களிடையே ஏற்பட்ட போட்டிகாரணமாக அரசுக்கு ரூ ன்கு லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. மோடி அரசால் கார்ப்பரேட்களுக்கு போயிருக்கக் கூடிய
   
A-Tale-of-Two-Auctionscoal
வருவாய் அரசுக்கு அதுவும் அந்தந்த மாநில அரசுகளுக்கு கிடைத்துள்ளது. மோடி அரசு கார்ப்பரேட்களுக்கு ஆதரவான அரசு என்பது உண்மையாக இருந்தால் ஸ்பெக்ட்ரம் மற்றும் நிலக்கரி ஏலங்களை புதிய முறையில் வெளிப்படைத் தன்மையோடு ஏன் நடத்த வேண்டும்?

கார்ப்பரேட்களுக்கான அரசு என்றால் சிறு குறு தொழில்களை ஊக்குவிக்க ஏன் முத்ரா வங்கியை துவக்க வேண்டும்?

02mfi1முத்ரா வங்கி குறித்த அறிவிப்பை நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டார். தொடக்கத்தில் சிட்பி வங்கியின் துணை அமைப்பாக இந்த முத்ரா வங்கி தொடங்கப்படுகிறது. நாட்டில் மொத்தம் 5.77 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர ரகத் தொழில் நிறுவனங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்கி அவதிப்படாமல் நியாயமான வட்டி கிடைக்க வகை செய்வதற்காக முத்ரா வங்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறு, குறு தொழில்கள் அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும் துறையாகத் திகழ்வதால் எளிதில் கடன் பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்ரா வங்கிக்கு முதலீடாக ரூ.20 ஆயிரம் கோடி நிதியும், கடன் வழங்குவதற்காக ரூ.3 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் ஜேட்லி தெரிவித்திருந்தார்.
கடன் உதவித் திட்டங்களுக்கு சிஷு, கிஷோர், தருண் என பெயரிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் வரையிலான கடன் திட்டங்கள் சிஷு எனப்படும். ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்டு ரூ.5 லட்சம் வரையிலான கடன் திட்டங்கள் கிஷோர் எனப்படும். ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரையிலான கடன் திட்டங்கள் தருண் எனப்படும். பிரதம மந்திரி முத்ரா யோஜனா
CCEuD24WEAAqP32
திட்டத்தின் கீழ் இந்தக் கடன் உதவித் திட்டங்கள் அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் சிறு தொழில் உற்பத்தி நிறுவனங்கள், சிறிய வணிக கடைகள், பழம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள், சலூன், அழகு மையங்கள், வாகன ஓட்டிகள், நடைபாதை வியாபாரிகள், கைவினைக் கலைஞர்கள் ஆகியோர் பயன் பெறலாம். மகளிர் தொழில் முனைவோரும் இத்திட்டம் மூலம் கடன் பெறலாம் என்பது கவனிக்கத்தக்கது.

வெறும் அறிவிப்பல்ல……

mudra-bank-yojanaபட்ஜெட்டில் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டால் அதை நடை முறப்படுத்துவது என்பது காங்கிரஸ் ஆட்சியில் பகற்கனவாகவே இருக்கும். அனைத்தும் அறிவிப்போடுதான் நிற்கும். ஆனால் மோடி அரசு மார்ச் ஒன்றாம் தேதி பொது பட்ஜெட்டில் முத்ரா வங்கி குறித்து அறிவிக்கிறது.ஏப்ரல் முதல் வாரத்தில் முதல் வங்கி கிளை திறக்கப்படுகிறது. இதுவல்லவோ ஆளுமைத் திறன்.நல்லாட்சி. இப்படி பெரும் தொழில்களாக இருந்தாலும் சரி சிறு குறு தொழில்களாக இருந்தாலும் சரி தொழில் வளத்தை தாமதப்படுத்தாமல் பெருக்க வேண்டுமென்ற உத்வேகம் பிரதமர் மோடி அவர்களிடத்தில் காணப்படுகிறது. அதன் விளைவே இந்தத் திட்டங்களும் அவரது அணுகுமுறைகளும் நடைமுறைப்படுத்த காரணம்.

காங்கிரஸ் கட்சியின் உள் நோக்கம் தான் என்ன?

சோனியா காங்கிரஸ் மோடியின் ஆட்சியில் நல்ல திட்டங்களை தொடர அனுமதித்தால் காங்கிரசின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். ராகுல் images (1)பிரதமராகும் கனவு பகற்கனவாகி விடும். ஆகவே மோடியின் அனைத்து திட்டங்களையும் பொய் பிரச்சாரம் மூலமும் ராஜ்யசபாவில் பாஜாக அறுதிப் பெரும்பான்மை இல்லாதிருப்பதால் எதிர்கட்சிகளை ஒன்றினைத்து அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் முடக்குவதே அவர்களின் உள்நோக்கம். இதற்கு நாட்டில் உள்ள தன்னார்வ வெளிநாட்டு நிதி உதவி பெற்று இந்திய வளர்ச்சியை தடுக்க அந்நிய கைக்கூலிகளாக செயல்பட்டுவரும் என் ஜி ஒக்கள்,ஊடகங்கள்,கிருத்துவ மெசினிரிகள் என அனைத்து எதிர்ப்பாளர்களும் ஒன்றினைந்து இந்திய வளர்ச்சியை முடக்க முயலுகிறார்கள். காங்கிரஸ் தொடர்ந்து நல்ல திட்டங்களை எதிர்க்குமேயானால் இந்த நாட்டிற்கு செய்யும் மிகப் பெரிய துரோகமாகும். நடப்பது மோடி ஆட்சி. இவர்களை தக்க வழியில் பாஜாக அரசு எதிர்கொண்டு தடைகளை உடைத்து  வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை.
 
இப்போது சொல்லுங்கள்…….
காங்கிரஸ் அரசு கார்ப்பரேட் அரசா இல்லை
மோடி அரசு கார்ப்பரேட் அரசா?

மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசா? பகுதி 2

April 28, 2015
ஆறு.தர்மபூபதி

Picture1டெஃஸ்ட்

காங்கிரஸ் ஆட்சியில் கார்ப்பரேட்களுக்கு வாரி வழங்கியது 17 லட்சம் கோடி… அதில்  ரூ 2.04 லட்சம் கோடி தள்ளுபடி. 
தொழிலதிபர்களுக்காக இயங்கும் அரசு என்று காங்கிரசின் அரைவேக்காடு இத்தாலி மாஃபியா ராகுல் காந்தி திருவாய் மலர்ந்திருக்கிறார். அப்படியென்றால் காங்கிரஸ் கட்சி தொழிலதிபர்களை சந்தித்தது இல்லையா? வெளிநாடுகளுக்கு அவர்களை அழைத்து சென்றதில்லையா? உள் வெளி நாடுகளில்   தொழில் துவங்க தொழிலதிபர்களுக்கு ஊக்கம் காட்டவில்லையா ?   பல      காங்கிரஸ் அரசுகள் தொழிலதிபர்களை தங்கள் மாநிலத்தில் வந்து தொழில் தொடங்கும் படியும்     அனைத்து வசதிகளையும் செய்து  கொடுக்கிறோம் என்று  அறை கூவல்   விடுத்ததில்லையா? டாடா மேற்கு வங்கத்தில் தொழில் தொடங்க பகிரங்க ஆதரவை வழங்க வில்லையா?  தொழில் தொடங்குவதற்கு பல கார்ப்பரேட்  தொழில் அதிபர்களுக்கு விதி முறைகள் மீறி வங்கிகளை காங்கிரஸ் அரசு நிதி
unnamed (1)

FIRST  POST

கொடுக்கும்படி அரசு நிர்பந்திக்கவில்லையா? அதன் காரணமாக இந்தியன் வங்கி தலைவர் முறை கேடு காரணமாக சிறை தண்டனை பெற்றது நினைவில்லையா? காங்கிரஸ்  ஆட்சியில் கார்ப்பரேட் தொழிலதிபர்களுக்கு சுமார் ரூ 17 லட்சம் கோடி நிதி வழங்கி இன்றளவில் வாராக் கடனாக 1000 கோடிக்கு மேல் பெற்ற 433 பேரிடமிருந்து மட்டும் ரூ 78000 கோடி நிலுவையில் உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற தொழிலதிபர்கள். இவர்களிடமிருந்து ஆக்க பூர்வமாக நிலுவைகளை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத கார்ப்பரேட் ஆதரவு காங்கிரஸ் கட்சி 2001-க்கும் 2013-க்கும் இடையேயான 10 ஆண்டுகளில் ரூ 2.04 லட்சம் கோடி தள்ளுபடி செய்து கார்ப்பரேட்களுக்கு உதவியுள்ளது. ( தினமணி மே 7,2014) இவர்கள் தான் மோடி அரசைப் பார்த்து கார்ப்பரேட் அரசு என்கிறார்கள்..
குடும்ப ஆட்சியை மீண்டும் கொண்டுவர காங்கிரஸ் காணும் கனவு……
பாஜாக ஆட்சிக்கு வந்ததும் மோடி அரசு வந்த பிறகுதான் தொழிலதிபர்களுக்கு வாரி வாரி வழங்குவது போன்ற மாயையை உருவாக்க nehru-indira-rajiv-sonia-rahul-gandhi-garibi-hatao-poverty-dynasty-corruptionகாங்கிரஸ் முயலுகிறது. இந்த நிலுவைகளை வசூலிக்க வங்கிகள் பெருமளவில் முயற்சி எடுத்து வருகிறது. அதற்க்கான உத்தரவுகளை நிதியமைச்சகம் பிறப்பித்துள்ளது. தொழில்களை துவங்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் வங்கிகள் அந்த நிறுவனங்களின் நிதி ஆதாரங்களுக்கேற்ப கடன் வழங்குவது ஒன்றும் புதிதல்ல. வழக்கமான ஒன்று தான். அப்படி பிரதமர் மோடியின் தலையீட்டில் விதிமுறைகளுக்கு மீறி தொழிலதிபர்களுக்கு கடன் வழங்கப்பட்டிருப்பதற்கு ஆதாரமிருந்தால் தாராளமாக அதை வெளியிடலாமே தவிர, பொய்களை காங்கிரஸ் பரப்புவது அதன் நோக்கத்தை சந்தேகப்பட வைக்கிறது. காணாமல் போய்விட்ட காங்கிரஸ் இப்படியொரு பொய் பிரச்சாரத்தின் மூலம் மக்களின் செல்வாக்கைப் பெற்று விடலாம் என்று கனவு காண்கிறது.  ஆண்டு தோறும் நடக்கும் தொழிலதிபர்களின் கூட்டமைப்பில் அமைச்சர்கள் அரசியல் வாதிகள் கலந்து கொண்டு அவர்கள் சிரமத்தைப் போக்கவும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பேசி வருகின்றனர். மன்மோகன் ஆட்சியில் ராகுல் காந்தி கூட தொழிலதிபர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு கார்ப்பரேட் தொழில் அதிபர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளதை அவரால் மறுக்க முடியுமா?
வங்கிகடன் நிலுவை வைத்திருக்கும் கார்ப்பரேட்களுக்கு பத்மா விருது மற்றும் மத்திய அமைச்சர் பதவி வழங்கி ஊக்குவித்த காங்கிரஸ்
பெரும் கடன் தொகை நிலுவையில் வைத்துள்ள கார்ப்பரேட் தொழில் அதிபர்களுக்கு மன்மோகன் அரசு பத்மா விருது வழங்கும் அவலம்
unnamed

FIRST POST

3 Untitled

காங்கிரஸ் ஆட்சியைத் தவிர வேறு எங்காவது உண்டா? அது மட்டுமல்ல ஐந்து முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் மன்மோகன் ஆட்சியில் ஜவுளித்துறை அமைச்சராக பதவி வகித்த கே எஸ் ராவின் நிறுவனம் 351 கோடி நிலுவை வைத்துள்ளது. அந்த கார்ப்பரேட் தொழிலதிபர் மன்மோகன் சிங் காங்கிரஸ் அமைச்சரவையிலேயே பங்கு பெற்று ஆட்சி நடத்துகிறார். இப்போது சொல்லுங்கள் யாருடைய அரசு கார்ப்பரேட்களின் அரசு? இவர் மட்டுமல்ல பல தொழிலதிபர்கள் பங்கு பெற்ற ஆட்சி தான் காங்கிரஸ் அரசு என்பதை பின்னர் பார்ப்போம். மோடி அரசை கார்ப்பரேட்களின் அரசு என்று குற்றம் சாட்டுபவர்கள் கீழ் கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த பிரதமர் முயல்வது தவறா?
640x480xFrom-Zero-Loss-to-Infinite-Gain-2.jpg.pagespeed.ic.XiF183ebHC
நாட்டின் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த பிரதமர் முயல்வது தவறா?அந்நிய முதலீட்டைப் பெருக்க வெளிநாட்டு நிறுவனங்களை அழைப்பது குற்றமா? நாட்டில் வேலையில்லா  திண்டாட்டத்தைப் போக்க தொழிற் சாலைகள் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறுவது தேச விரோத செயலா? தொழில்வளம் மேம்பட அரசு உதவி செய்வது தவறான முன்னுதாரணமா? தொழிலதிபர்களை அரசு அழைத்து பேசுவது இது தான் முதல் முறையா? ஜனநாயக நாட்டில் தொழிலதிபர்கள் யாரும் இருக்கக் கூடாதா?
கடன் நிலுவை பட்டியலில் தொழிலதிபர் அதானி பெயர் இல்லையே!
தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க பிரதமர் மோடி அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை வைத்துக் கொண்டு கார்ப்பரேட்களுக்கு ஆதரவானவர் என்று எப்படி சொல்ல முடியும்? இவர்கள் அதானி என்ற தொழிலதிபரை மோடிக்கு நெருக்கமானவர் என்றும் அவருக்கு மோடி கடங்களை வாரி வழங்கியுள்ளார் என்றும் சிலர் எந்த ஆதாரமுமின்றி குற்றம் சாட்டுகின்றனர்? ஒரு தொழிலதிபர் அதானியாக அல்லது யாராக இருந்தால் என்ன? இந்த நாட்டில் தொழில் தொடங்கக் கூடாதா? அரசுகள் தொழிலதிபர்களை தங்கள் மாநிலத்தில் வந்து தொழில் தொடங்கும் படியும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம் என்று  அறை கூவல் விட்டு பிறகு நாட்டின் வளர்ச்சிக்கு மற்றவர்களை ஊக்குவிப்பது போல இவரை ஊக்குவித்திருந்தால் அதில் என்ன தவறு? அதானி வங்கிகளில் கடன் பெற்று நிலுவையில் உள்ள கார்ப்பரட் தொழிலதிபர்களின் பட்டியலில் அதானி பெயர் இல்லையே அது ஏன்? ஆனால் காங்கிரஸ் ஆதரித்த கார்ப்பரேட்கள் பெரும்பாலோனோர் ஏன் ஆயிரக் கோடிக்கணக்கில் நிலுவை வைத்துள்ளனர்? காங்கிரசார் பதில் சொல்லுவார்களா?
பூஜ்யத்தை கண்டுபிடித்தது அன்றைய இந்திய ரிஷிகள்…. பூஜ்ய இழப்பைக் கண்டுபிடித்தது இன்றைய காங்கிரஸ் கபில் சிபல்
2 ஜி ஊழல் பற்றி நாடே சிரித்தது நாம் மட்டுமல்ல உலகமே நம்மை எள்ளிநகையாடியது. மன்மோகன் சிங் தொலைத்தொடர்புத் துறையை தரகர் நீரா ராடியா மூலமாக தி மு காவிற்கு விற்றதும் அதில் ரூ 176000 கோடி ஊழல் செய்ததும் அதில் மன்மோகன் சிங்கிற்கும் பொறுப்பு உண்டு என்று 030212satishஇன்றளவும் ராஜா கூறி வருவது அனைவருக்கும் தெரிந்த விசயம். தற்போது ஏல முறையை மாற்றிய மோடி அரசுக்கு வருவாய் சுமார் ரூ லட்சத்து பத்தாயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைத்துல்லது. இதைத்தான் இன்னொரு கார்ப்பரேட் தொழிலதிபரும் அன்றைய அமைச்சருமான  கபில் சிபில் பூஜ்ய இழப்பு என்ற ஒரு புதிய சித்தாந்தத்தை பாரதத்திர்கு வழங்கினார்.மன்மோகன் தலைமையிலான அரசின் தொலைத்தொடர்பு அமைச்சர் ஏல விதிகளையெல்லாம் காற்றிலே விட்டு விட்டு கார்ப்பரேட்டுகளுக்கு மலிவு விலையில் கற்றைகளை வாரி வழங்கினார்.இப்படி கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்த காங்கிரஸ் இன்று மோடியைப் பார்த்து கார்ப்பரேட் அரசு என்று. காங்கிரசாருக்கு கொஞ்சமாவது வெட்கம் வேண்டாமா? இது மட்டுமா பெரிய கார்ப்பரேட்டான கலாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவி பெற்று தொலைதொடர்பு துறையையே தனது வீட்டின் தொடர்பு துறையாக மாற்றி இன்று நீதி மன்றத்திற்கு சென்று கொன்டிருப்பது யாருடைய ஆட்சியில்?

தொடரும்…..

மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசா? பகுதி 1

April 27, 2015
ஆறு.தர்மபூபதி
 Picture2
டெஃஸ்ட்பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாஜாக தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவு பெறப் போகிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே நரேந்திர மோடி தனது வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை என்று ஊடகங்களும் குறிப்பாக ஆங்கில ஊடகங்களும் அறுபது ஆண்டு காலம் இந்தியாவை ஆண்டு ஊழலில் திளைத்து குட்டிச் சுவராக்கி அதள பாதாளத்தில் வைத்து விட்டுப் போயுள்ள மூக்கறுபட்டுப் போயுள்ள சூர்ப்பனகையின் காங்கிரசிற்கு துதிபாடி பொய்களை பரப்பி வருகின்றனர். நரேந்திர மோடியின் தலைமையில் நாடுமுன்னேறி விடக் கூடாது என்பதில் முனைப்புடன் பாஜாக அரசுக்கு எதிர்ப்பான நிலைப்பாடு கொண்டு பண்ணாட்டு தன்னார்வ அமைப்புகளின் துணைகொண்டு ஊடகங்களும் எதிர்கட்சிகளும் பொய்களை பரப்பி வருகிறது. இவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அரசின் மீது கூறிவரும் சில பொய் குற்றச்சாட்டுக்கள்  என்ன என்று பார்ப்போம். முதலாவது……….
திறன்மிகு இந்தியாவை ஊழல் மிகு நாடாக்கிய காங்கிரசின் குடும்ப ஆட்சியை காணாமற் போக செய்த மக்கள் சக்தி…… 
மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசு.  சொல்வது யார்? அறுபது ஆண்டுகள் திறன்மிகு இந்தியாவை ஊழல் மிகு நாடு என்று முத்திரையை பதித்த காங்கிரஸ் கட்சி. உண்மையிலேயே மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசா? கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம். வெள்ளைய ஏகாதிபத்திய ஆட்சியில் 1935 ஆம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி 1937 இந்தியர்கள் பங்குகொள்ளும் வகையில் ஆறு மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்போதே ஊழல் காங்கிரஸ் ஆட்சியில் தலை விரித்தாடியது. அதைக் கண்டு மனம் நொந்த காந்திஜி அவர்கள்
“I would go to the length of giving the whole congress a decent burial, rather than put up with the corruption that is rampant.” — Mahatma Gandhi May 1939
என்று தனது மனக்குமறலை வெளிப்படுத்தினார். ஆக ஊழல் என்பது காங்கிரஸ் கட்சியின் ஏகாதிபத்திய அடிப்படை கொள்கை. ஆக இவர்கள் உள்னாட்டு கார்பரேட்டுகளை மட்டுமல்ல பன்னாட்டு கார்பரேட்டுகளின் அரசாகவும் காங்கிரஸ் கட்சி திகழ்ந்தது. காங்கிரஸ் ஏன் தூக்கி எறியப்பட்டது? என்ற கேள்விக்கு காங்கிரசார் முதலில் விடை கண்ட பிறகு மோடியை குறை கூற வேண்டும்.
 congress performance 2014
congress %காங்கிரசின் முதலாளித்துவ போக்கும் அறுபது ஆண்டுகளாக அனைத்து தேர்தல்களிலும் வறுமையை ஒழிப்போம் என்று கூறி தேர்தலை சந்தித்த ஒரே கட்சி காங்கிரஸ். இவர்களுடைய ஊழலும் மக்களை தொடர்ந்து ஏழைகளாகவே வைத்திருக்கும் போக்கும் ஒரே குடும்ப ஆட்சி காரணமாகவும் மக்கள் காங்கிரசை நிராகரித்தனர். அடுத்த தேர்தலின் போது அநேகமாக காங்கிரஸ் என்ற ஒரு கட்சி மாநிலக் கட்சியாக ஆகக்கூடும். அதைத் தடுக்கவும் சோனியாவின் குடும்ப ஆட்சி மலர வேண்டும் என்பதற்க்காகவும் மோடி ஆட்சியின் மீது பொய்களை பரப்பி வருகின்றனர். அதன் முதல் பொய் கார்ப்பரேட் அரசு.
ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறார்களா?
நரேந்திர மோடி அவர்கள் மீது கார்ப்பரேட் அரசு என்று கூறுவதற்கு இவர்கள் ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறார்களா? ஆதாரம் இருந்தால் அவர்கள் முதலில் வெளியிட்டிருக்க வேண்டும். கார்ப்பரேட்களுக்கு தவறான வழியில் மோடி உதவியிருந்தால் ஏன் வெளியிடவில்லை. இவர்கள் வைக்கும் முக்கிய குற்றசாட்டு மோடி அவர்கள் வெளிநாடு செல்லும்போதெல்லாம் தொழில் அதிபர்களை அழைத்து  செல்கிறார் என்றும் குறிப்பாக அதானி என்ற தொழில் அதிபரை அழைத்து செல்வதாகவும் அவரின் தொழில் வளம் பெற தனது செல்வாக்கைப் பயன்படுத்துகிறார் என்றும் பொய்கள் பரப்பப்பட்டு வருகிறது. அதானி ஒரு சாதாரண தொழிலதிபர் தான். வளர்ந்து வரும் தொழில் அதிபர். அவர் மோடியின் செல்வாக்கை தவறாக பயன் படுத்தி அரசிற்கு இழப்பை ஏற்படுத்தியிருந்தால் அது குற்றமே. அப்படியொரு குற்றச்சாட்டை ஆதாரத்துடன் காங்கிரஸ் ஏன் அம்பலப் படுத்தவில்லை? அவரை விட பலம் வாய்ந்த கார்ப்பரேட்கள் காங்கிரசின் ஆதரவாளர்கள்  என்பதை காங்கிரசால் மறுக்க முடியுமா?
இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால்…..
PM Modi launches
இந்தக் குற்றச்சாட்டுகளை ஆராயும் முன்னர், நமது நாடு வல்லரசாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் வல்லரசாகி விடுமா? ஒரு நாடு தொழில் வளம் கொண்ட நாடாக இருக்க வேண்டும். அந்நிய முதலீடுகள் குவிய வேண்டும். நிறைய தொழிற்சாலைகள் உருவாக வேண்டும். புதிய புதிய தொழில் நுட்பங்கள் அமல் படுத்தப் பட வேண்டும். நமது தயாரிப்புகள் உலக சந்தையில்   தரத்துடன் தயாரிக்கப்பட்டு இதர நாடுகளுடன் போட்டியிட்டு உலக சந்தையை கைப்பற்ற வேண்டும்.நாட்டின் உள்கட்டமைப்பு நவீனப்படுத்தப் பட வேண்டும் அப்பொழுது மட்டுமே மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வேலை வாய்ப்புகளை பெருக்க முடியும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். அப்படி என்றால் அந்த தொழில்கள் அனைத்துமே அரசால் முதலீடு செய்யப்பட்டு நடத்திட இயலுமா? என்றால் நிச்சயமாக இயலாது. ஒரு அரசாங்கம் அத்துனை தொழில்களிலும் முதலீடு செய்வதற்கு தேவையான நிதி ஆதாரம் இருக்காது. அது மட்டுமல்ல நாட்டின் அனைத்து வளர்ச்சிகளிலும் தனியார் பங்களிப்பின்றி அரசாங்கம் மட்டுமே பங்கு பெற வேண்டுமென்றால் நாட்டின் வளர்ச்சி பின்னோக்கித்தான் போகுமே தவிர முன்னேறி செல்ல முடியாது. தனியார் நிறுவனங்களின் ஆளுமைத்திறன் போன்று அரசுத் துறைகளில் எதிர்பார்க்க முடியாது. அரசாங்கம் ஒரு கட்டமைப்பின் வரையரைக்குள் தான் செயல்பட முடியும். அது மட்டுமல்ல அரசின் தலையாய கடமை அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவது தான்.
சோஷிலிசம் பேசிய சீனா இன்று……
சோஷிலிசம் பேசீய கம்யூனிஸ்ட் நாடான சீனா தனது கொள்கைகளை மாற்றிக் கொண்டதன் விளைவே சீனா வல்லரசு ஆனதிற்கு முக்கிய காரணம். அது மட்டுமல்ல சீன அரசு என்ன நினைக்கிறதோ அதை நடத்தும் சர்வாதிகார கம்யூனிஸ்ட் அரசு அங்கே நடைபெற்று வருகிறது எதிர்கட்சிகள் இல்லை. அப்படி யாராவது அரசை எதிர்த்துப் பேசினால் அடுத்த நாள் அவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்பது தான் அவர்களது அணுகுமுறை. கொள்கைகள் தவறாக இருந்தால் கூட ஆட்சியாளர்கள் அவர்களுக்கு இருக்கும் சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி சீனாவை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்தியாவின் வளர்ச்சியை எதிர்க்கும் காங்கிரசும் அதன் கூட்டாளிகளும்…..
Picture1ஆனால் இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. பல எதிர்கட்சிகள் கொண்ட நாடு. அதிலும் வெளிநாட்டு சக்திகள் பல அரசியல் கட்சிகளில் ஊடுருவி இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடுவதில் முனைப்பாக இருக்கிறது. காங்கிரசும் அதற்கு விதி விலக்கல்ல. இவர்களுக்கு பக்கபலமாக வெளிநாட்டு நிதி உதவிகளோடு செயல்படும் மனித உரிமைகள், சுற்றுப்புற ஆர்வலர்கள், மதச்சார்பற்ற அமைப்புகள், பெண்னுரிமை, பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் இயங்கும் தன்னார்வ அமைப்புகள் அதற்கு இணையாக ஊடகங்கள் என இந்தியாவின் வளர்ச்சியை எதிர்க்கும் பல்வேறு சக்திகள் கொண்ட நாடு இந்தியா. இத்தனை எதிர்ப்புகளையும் ஜனநாயக முறையில் சந்தித்து இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது இமாலயப் பணி என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆக மோடியை எதிர்த்துக் கூக்குரல் போடுபவர்கள் அனேகமாக இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம் அரசின் செயல் பாடுகள் தவறாக இருக்கும் பட்சத்தில் அதை ஆணித்தரமாக ஆதாரபூர்வமாக வெளியிட்டு எதிர்த்தால் அது உண்மையான ஜனநாயக கடமை ஆகும். ஆனால் மோடி எதிர்ப்பாளர்கள் அப்படி செய்யாமல் பொய்களை மட்டுமே பரப்பி வருவது உள்நோக்கம் கொண்டது  என்பதை யாராலும் மறுக்க இயலாது. இதுவரை எதிர்க்கட்சிகள் சில செய்திகளையும் ஊகங்களையும் வைத்துக் கொண்டே அரசை எதிர்த்து வருகின்றது என்பதே நிதர்சனமான உண்மை.
தொடரும்…..
 

கன்னி வெடிகளை விதைத்து விட்டுப் போயிருக்கும் காங்கிரஸ்…….

June 25, 2014
 தர்மபூபதி ஆறுமுகம்
பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள காங்கிரஸ் கட்சி, பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி வெற்றி பெற்று விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இதன் மூலம் பிரதமர் மோடி கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் மதச்சாயமோ அல்லது மக்கள் விரோத போக்கு என்றோ சொல்லி தினமும் ஏதாவது ஒரு வகையில் போராட்டங்கள் நடத்துவது என்ற முடிவில் காங்கிரசார் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுடைய எண்ணம் எப்படியாவது பிரதமர் நரேந்திரமோடியின் பெயருக்கு கெட்ட பெயர் உருவாக்கி மக்களிடம் உள்ள செல்வாக்கை குறைக்க வேண்டும் என்பதே அவர்களது பிரதான நோக்கமாக இருக்கக்கூடும்.

Image

மோடி அவர்கள் பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் எவ்வளவு போராட்டங்களை நடத்தியுள்ளார்கள். அதற்கு  காங்கிரசால் நியமிக்கப்பட்டுள்ள பல அரசு அதிகாரிகள், கவர்னர்கள், அதிகாரம் கொண்ட அமைப்புகளின் தலைவர்கள் என இவர்கள் பாஜாகாவிற்கு எதிராக செயல்படுவார்கள். அரசு ரகசியங்களை கசிய விட்டு மோடி அவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்த முயலுவார்கள். இவர்களோடு சில ஆங்கில டிவி சானல்களும் மோடிக்கு எதிராக பிரச்சாரத்தை தொடங்குவார்கள். இவர்களுக்கு பின்புலமாக சில வெளிநாட்டு சக்திகள் என் ஜி ஓ க்கள் மூலம் இயங்கக்கூடும் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
பாஜாக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே தலை நகர் டெல்லியில் மின்பற்றாக்குறை ஏற்பட்டு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியினரால் போராட்டம் நடத்தப்பட்டது. ஆங்கில டிவி சானல்கள் தொடர்ந்து ஒரு வாரம் இந்த Imageபிரச்சனையை எழுப்பியது. இதற்கு முக்கிய காரணம் காங்கிரசால் நியமிக்கப்பட்ட டெல்லி கவர்னர் வேண்டுமென்றே அரசை கலந்தாலோசிக்காமல் திடீரென்று மின்வெட்டை அமல் படுத்தி மத்திய அரசிற்கு களங்கம் ஏற்படுத்த முயன்றனர். இதில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றல் ஆம் ஆத்மியினர் மின்வெட்டைக் கண்டித்து மின் துறை அமைச்சரை விட்டு விட்டு, சுகாதார அமைச்சர் வீட்டு முன் போராட்டம் நடத்தியது இவர்களின் உண்மையான முகத்தை காட்டியது.
இதே போன்று தற்போது டெல்லி பல்கழைக் கழகத்தினர், முன்னால் மத்திய அமைச்சர் கபில் சிபல் அமல்படுத்திய நான்கு வருட பட்டப் படிப்பை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் இதற்கும் பாஜாகாவை எதிர்த்து போராடுகிறது. இவர்கள் செய்த தவறுகளுக்கு பாஜாகாவை பொறுப்பாக்க காங்கிரஸ் முயலுகிறது.
இதுமட்டுமல்ல காங்கிரஸ் அரசால் அறிமுகப்படுத்தப் பட்டு தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் கட்டண உயர்வையும் எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது. நல்ல தரமான ரயில் சேவையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். சிறிது விலை உயர்வை யாருமே எதிர்ப்பதில்லை. ஆனால் காங்கிரஸ் மற்றும் டிவி சானல்கள் சிறிய விசயங்களையெல்லாம் பூதாகரமாக்க முயலுகின்றனர். இதன் மூலம் பிரதமர் மோடிக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
அதே போன்று ஹிந்தி சமூக வலைத்தளங்களில் பயன் படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கை கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் அரசால் அனுப்பப்பட்டது. அதை வேண்டுமென்றே அரசு அலுவலகங்களில் ஊடுருவியுள்ள காங்கிரஸ் அதிகாரிகள் சுற்றறிக்கையை மாநிலங்களுக்கு அனுப்பி மோடி அரசுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றனர்.
அதேபோன்று வரக்கூடிய வருடங்களுக்குக் கூட முன் தேதியிட்டு பல நிறுவனங்களிடமிருந்து, வரி வசூலித்து விட்டு போயிருக்கிறது காங்கிரஸ் அரசு. நாட்டின் நிதி நிலைமையை ஆராய்ந்த பல பொருளாதார நிபுணர்கள் கடுமையான கசப்பான முடிவுகளை பிரதமர் மோடி அவர்கள் எடுக்க வேண்டுமென்று விரும்புகின்றனர்.
60 ஆண்டுகாலம் தூங்கிக்கொண்டு ஊழலில் திளைத்து கொள்ளையடித்த காங்கிரஸ் புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் எதற்கெடுத்தாலும் மோடியை தாக்குகின்றனர். ஆக காங்கிரஸ் எப்படி எதிர்காலத்தில் நடக்கப்போகிறது என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்கள். பிரதமர் மோடி தலைமயிலான அரசு சிறப்பாக பணியாற்றி நல்ல பெயர் எடுத்து விடக் கூடாது என்பதிலேயே காங்கிரசார் அக்கறை காட்டுகின்றனர். அவர்களுக்கு நாட்டின் Imageவளர்ச்சி மீது அக்கறையில்லை மோடி பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதே அவர்களது பிரதான நோக்கம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு துணையாக காங்கிரசால் நியமிக்கப்பட்டுள்ள கவர்னர்கள் உயர் பதவியிலுள்ள அதிகாரிகள், அலுவலர்கள், பல குழுக்களின் தலைவர்கள் நிச்சயமாக பாகஜாக அரசிற்கு எதிராக உள்ளேயிருந்து போராடுவார்கள். அதற்கு துணையாக காங்கிரஸ் அதன் கூட்டணிக்கட்சிகள், இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிராக போராடி வரும் என் ஜி ஓக்கள் உள் நாட்டில் இயங்கிவரும் தேச விரோத கும்பல்கள் ஆகியவற்றோடு  ஆங்கில தொலைக் காட்சி நிறுவனங்களும் டெகல்கா கோப்ரா போஸ்ட் போன்ற காங்கிரசின் ஸ்டிங்க் ஆப்பரேசன் புகழ் ஊடகங்களும் முழு வீச்சில் செயல்படும் என்பதை மோடி அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
கிட்டத்தட்ட 2002ஆம் வருடம் முதற்கொண்டு குஜராத்தில் சந்தித்து வந்த பிரச்சணைகளை போன்றே மோடி அரசு இப்போதும் எதிர்கொள்ள வேண்டி வரும். ஆகவே மோடி அரசு இந்த பிரச்சணைகளை புரிந்து கொண்டு காங்கிரசால் நியமிக்கப்பட்டுள்ள கவர்னர்கள். சில குழுக்களின் தலைவர்கள் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் போன்றவர்Imageகளை தயவு தாட்சன்யமின்றி நீக்கி விடுவதே சிறந்ததாக இருக்கும். பத்து சதவீகித உறுப்பினர்கள் இல்லாத காங்கிரசாருக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி கொடுக்கக் கூடாது. அந்த வாய்ப்பு அனைத்து எதிர்கட்சிகளுக்கும் ஒவ்வொரு குழுவிலும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். போராட்டங்களை நசுக்க வேண்டும்.  காங்கிரசார் விமர்சனங்களையும் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. அவர்களுடன் கை கோர்க்க போகிறவர்களில் முக்கியமானவர்கள் கம்யூனிஸ்ட்கள். இந்திய அரசியலில் நீர்த்துப் போனவர்கள். மக்கள் படிப்படியாக நிராகரித்து இன்று அரசியல் அனாதையாக உள்ளனர். இவர்களைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்Imageலை. காங்கிரசின் தேச துரோகங்களையும், அவர்களின் ஊழல்களையும் அம்பலப்படுத்த வேண்டும். சமூக ஆர்வலர்கள் என்று திரிந்து கொண்டிருக்கும் தலைவர்களின் முக மூடி கிழித்தெறியப்பட வேண்டும். அதே போன்று உள்நாட்டில் வெளி நாட்டுத் தீவிரவாத செயல்கள் அரங்கேறுவதற்கு உள் நாட்டில் உள்ள சிலரது ஆதரவே காரணம். அந்த அரசியல் வாதிகளையும், அந்நிய நாட்டிலிருந்து நிதி பெற்று தேச துரோக காரியங்களில் ஈடுபடும் என் ஜி ஓக்கள் தடை செய்யப் பட வேண்டும். வெளிநாட்டு சக்திகளுக்கு யாரும் துணை போகாத அளவிற்கு பொடா போன்ற  கடுமையான உள் நாட்டுப் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்.
திட்டக் கமிசனை மாற்றி அமைக்கப் போவதை காங்கிரஸ் எதிர்க்கிறது. இது குறித்து பாஜாகாவைக் கேள்வி கேட்க காங்கிரசிற்கு உரிமையில்லை. ஆளும் பாஜாகா திறமையான ஆட்சியைக் கொடுக்க எந்த முடிவெடுக்க வேண்டும் என்ற உரிமை பாஜாகாவிற்குத்தான் இருக்கிறது. காங்கிரசை மட்டுமல்ல தோழமைக் கட்சிகளைக் கூட கலந்து ஆலோசிக்க வேண்டிய அளவிற்கு யாருடைய தயவிலும் பாஜாக ஆட்சி புரியவில்லை.
ஆகவே துணிந்து பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவெடுக்க வேண்டும். யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. நாட்டு நலனே முக்கியம்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக காங்கிரஸ் விதைத்து விட்டுப் போயிருக்கும் இந்த கன்னி வெடிகளை அகற்றினால் மட்டுமே நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.

 

ஏன் அவர்கள் போராட வேண்டும்?

April 9, 2012
Posted by தர்மபூபதி ஆறுமுகம்
ராணுவத்தளபதி வி.கே.சிங் அவர்கள் ராணுவத்தில் நடக்கும் ஊழல வெளிக்கொணர்ந்ததன் மூலம் இந்த நாட்டிற்கு பெரும் சேவை செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஆனால், கிடைக்கும் லஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு ராணுவத்தளபதி சும்மா இருந்திருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் சிலர் நினைக்ககூடும். ராணுவத்தளபதி வி.கே.சிங் பிரதமருக்கு எழுதிய கசிந்த ரகசியக் கடிதத்தில் ராணுவத்தயார் நிலைக்கு தடையாக உள்ள கடுமையான பிரச்சனைகளை கோடிட்டுகாட்டியுள்ளார். இவைகள் வெளி உலகிற்கு கசியவிட்டது தவறு என்று இவர்கள் வாதிடுவது, தகுதியற்ற, நேர்மையற்ற, அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் காப்பாற்றுவதற்க்கல்லாமல் வேறு எதற்காக? ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததை கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். சீனா இந்தியா மீது போர் தொடுத்தபோது, பனிபடர்ந்த அந்த ஹிமாலயமலையில் போரிடும் வீரர்களுக்கு உடுத்தப்போதுமான குளிர்கால உடைகள் கூட இல்லாமல் போராடவேண்டியிருந்தது. ராணுவத்தளபதி பரிந்துரைத்த படை வீரர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளைக் கூட பிரதமர் ஜவகர்லால் நேரு, மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் ஆகியோர் கண்டு கொள்ளாமல் புறக்கணித்ததன் விளைவு, கடும் பனி பொழிவு மற்றும் உறை பனி காரணமாக பலவீரர்கள் மடிந்தனர். வரலாற்றில் நிலைபெற்றுவிட்ட இந்த துயரமான சம்பவங்களிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டாமா?
ராணுவத்தளபதி வி.கே.சிங்கை குறிவைத்து சில சுயநலக்காரர்கள் அவரது பெயரை களங்கப்படுத்த முனைகின்றனர். முதலில் சாதாரண அலுவலகப் பிரச்சனையான அவரது பிறந்த தேதி சர்ச்சையை பெரிதுபடுத்தி அவரை களங்கப்படுத்த முயன்றனர்.  இப்போது அவரது கடிதத்தை கசியவிட்டு, அவரை களங்கப்படுத்த முயலுகின்றனர். இதற்கெல்லாம் ஒரே காரணம் ராணுவத்தளபதி வி.கே சிங் நேர்மைக்கும் கண்டிப்புக்கும் பெயர் பெற்றவர். முறைகேடுகளை ஏற்றுக் கொள்ளாதவர். ஊழலை சகித்துக் கொள்ளாதவர். ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத்தயங்காதவர் என்பதால் தான். ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் போடப்படும் ஒப்பந்தங்களின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை  பெற்று ஊழலிலே திளைத்துப் போன சில அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும்,  வி.கே சிங் இடையூராக இருந்ததால் அவரது பெயருக்கு களங்கம் விளைவித்து அவரை வெளியேற்ற போட்ட திட்டம் தான் இந்த அரங்கேற்றங்கள்.
கிருஷ்ணமேனன் கம்யூனிசக் கொள்கையில் பற்றுக் கொண்டவர் என்பதால் பணம் சம்பாதிப்பதில் நாட்டம் இல்லாதவர்  என்று சிலர் சொல்லியதுண்டு. உண்மை அதுவல்ல. காங்கிரஸ் கட்சி எப்போது ஆட்சிக்கு வந்ததோ அப்போதே இந்த நாட்டிற்க்கு ஊழலும் அறிமுகப் படுத்தப்பட்டது. இப்படி செய்யும் ஊழல்களை மறைக்க அவர்களுக்கு தேவைப்பட்டது காந்தியின் குல்லாவும், கதர் சட்டையும் தான். சுதந்திர பாரதத்தில் 1948 ஆம் ஆண்டு, முதன் முதலாக காஷ்மீரில் ராணுவத்திற்க்கு ஜீப் வாங்கியதில் அப்போதைய இங்கிலாந்திற்க்கான ஹைகமிசனர் V.K.கிருஷ்ணமேனன், எந்த நடைமுறைகளையும் கடைபிடிக்காதது பெரும் ஊழலுக்கு வழி வகுத்தது. இதை விசாரித்த அனந்தசயனம் குழு பரிந்துரைத்தபடி நீதி விசாரனை போடப்படவேண்டுமென்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்த அரசு, பிரதமர் நேருவின் கட்டளைக்கிணங்க செப்30, 1955 ஆம் ஆண்டு இந்த ஊழல் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவது என அரசாங்கம் அறிவித்தது. அப்போதைய மத்திய அமைச்சர் GB பந்த் “இந்த பிரச்சனையை அரசு இத்தோடு முடித்துக் கொள்வதாகவும், எதிர்கட்சிகளுக்கு இதில் திருப்தியளிக்கவில்லையென்றால் தேர்தலில் பிரச்சனையாக எழுப்பட்டும்” என அறிவித்தார். இதைத் தொடர்ந்து உடனடியாக ஊழல் செய்த VK கிருஷ்ணமேனனுக்கு பிப் 3 ஆம் தேதி, 1956 ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவையில் சக்திவாய்ந்த இலாகா இல்லாத அமைச்சராக பதவி வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். ராணுவத்திற்கு தளவாடங்கள் வாங்குவதில் பெரும் தொகை சிலவிடப்படுவதால் அங்கு, ஊழல் நடக்கும் என்றாலும், ராணுவத் தளவாடங்கள் வாங்குவதில் ஊழலின் உச்சத்தைத் தொட்டவர் நேருவின் பேரன் ராஜிவ்காந்தி ஆவார். போபர்ஸ் ஊழலின் மறு பெயர் ராஜிவ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இந்திய ராணுவத்தில் போபர்ஸ் ஊழல் அழிக்கமுடியாத கரை படிந்த அத்தியாயம். இந்த ஊழலின் மைய சூத்ரதாரிகள் நேருவின் பேரன் ராஜிவ்காந்தியும், அவரது துணைவி சோனியா காந்தியின் உறவினருமான குட்ரோச்சியும் ஆவார். நவீன இந்தியா என்று சொல்லிகொண்ட ராஜிவ் தனது குடும்பத்தை இந்த ஊழல் மூலம் நவீனமாக்கொண்டார். இந்த ஊழலுக்குப் பிறகுதான் அதிகாரவர்க்கம், மற்றும் அரசியல் வாதிகளின் பார்வை பாதுகாப்புத்துறை மீது விழுந்தது. நாட்டின் பாதுகாப்பிற்கு ராணுவத்தளவாடங்கள் வாங்குவதுபோய், அரசியல்வாதிகள், மற்றும் அதிகாரிகள் கொள்ளை அடிக்க ஆயுதங்கள் வாங்கப்பட்ட சரித்திரத்தை துவக்கிய பெருமை காங்கிரசாரையே சாரும். பல லட்சக்கணககான கோடி ரூபாய்கள் ஆண்டுதோறும் பாதுகாப்புத் துறையில் சிலவிடப்படுவதால், ராணுவத் தேவைகளை புறக்கணித்துவிட்டு, ராணுவத்தளவாடங்களில் எவ்வளவு லஞ்சம் கிடைக்கும் என்று பார்க்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஆரம்பித்துவிட்டனர். தற்போதைய ராணுவத்தளபதி திரு வி கே சிங் அவர்கள் தனக்கே லஞ்சம் வழங்க முயன்றதாகக் கூறிய  ஊழல் குற்றச்சாட்டை இந்த பின்னணியில் பார்க்கவேண்டும். ராணுவத்தில் நடக்கும் ஊழல் குறித்தோ, அல்லது ராணுவத்தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறதா என்பதைப் பற்றியெல்லாம் பாராளுமன்றதில் யாரும் விவாதம் செய்ய முன்வருவதில்லை. ஊடகங்களும் பரபரப்பான செய்திகளை வெளியிட்டி தனது சுய தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது.நாட்டின் பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல் இவர்கள் ராணுவத்தளபதி பிரதமருக்கு எழுதிய கடிதம் கசிந்தது பற்றியே பெரிய அளவில் விவாதிப்பது வேதனைக்குறிய ஒன்று. சமீபத்திய தேர்தலின் போது பதவியை எப்படியாவது பிடித்துவிடவேண்டுமென்று கங்கனம் கட்டி தேர்தல் பிரச்சாரத்தில் குதித்த தாடியுடன் சென்ற ராகுல், தனது கணவர் மற்றும் மூன்று வயது குழந்தைகளையும் பிரச்சாரத்தில் ஈடுபடுத்திய பிரியங்கா போன்ற அரசியல் வாதிகள் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து ஏதாவது பேசினார்களா? அல்லது அவர்கள் பேசாதது குறித்து ஊடகங்களாவது கேள்வி எழுப்பியதுண்டா?
ராணுவத்தளபதி பிரதமருக்கு எழுதிய கடிதம் பத்திரிக்கைகளிலே வெளியாகியுள்ளது  குறித்தும், ராணுவத்தயார் நிலகுறித்து பல கடுமையான கவலைகள் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் ராணுவத்தளபதியின் கடிதத்தில் உள்ளவைகளை பொருட்படுத்தாமல் இருந்துள்ளது பாதுகாப்புத்துறை அமைச்சருக்கே கவலையை ஏற்படுத்தியிருக்கக்கூடும். ராணுவ விதிகளின்படி இக்கடிதம் பாதுகாப்புத்துறை அமைச்கரின் கவனத்திற்கு வராமல் போக வாய்ப்பில்லை. ஆக பிரதமரின் அலட்சியப்போக்கின் காரணமாக, வெறுத்துப்போன பாதுகாப்புத்துறையினரே இக்கடிதத்தை வெளியிட்டிருக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. நாட்டிலே, ஆட்சியிலே கொள்ளையடிப்பதை அனுமதிக்கும் ஒருவர் நேர்மையாளர் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ல முடியும். நேர்மையாளராக இருந்தால்,இந்த அசிங்கங்களை சகித்துக் கொள்ள முடியாதவர் ராஜினாமா செய்து விட்டுப் போக வேண்டியதுதானே? அப்படியில்லையென்றால் இவரையும் பதவி ஆசை ஆட்டிப்படைகிறது என்று தானே பொருள். பதவி ஆசை பிடித்தவர் எப்படி நேர்மையாளராக இருக்க முடியும்? இவர் தானே, நாட்டின் பாதுகாப்பை அலசியப்படுத்திவிட்டு, சோனியாவின் உறவினரான குட்ரோச்சியை தப்பவிட்டவர்? பிரதமருக்கு, நாட்டைப் பாதுகாப்பதை விட வேறு ஒரு பெரிய கடமை எதுவும் இருக்கமுடியாது. பிரதமர் இதுபற்றி கவலைப்படாமல் இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கவ்டில்யர் என்ற துறவி அரசனின் கடமைகள் எப்படிப்பட்டது என்பதை கூறியதை நினைவில் கொள்ளவேண்டும். கவுடில்யர் மகத சக்ரவர்த்தி சந்திரகுப்தனுக்கு எழுதிய கடிதத்தை பிரதமரும், பாதுகாப்புத்துறை அமைச்சரும் படித்து கவனத்தில் கொள்வது அவர்களுக்கு நன்மை பயக்கும் (10,ஜன்பத் வீதியில் இருக்கும் எஜமானி படித்தால் அவருக்கு கூட நன்மை பயக்கும். ஆனால் படித்து, புரிந்துகொள்ளும் அளவிற்கு, அளவிற்கு அறிவாற்றல் இருக்குமா என்பது சந்தேகம் தான்.) கவுடில்யர் துணிவோடும், அதே நேரத்தில் உறுதிபடவும் அரசனுக்கு ஞாபகப்படுத்துகிறார். “அரசனே, உன்னுடைய உயிருக்கு உத்திரவாதமும், ராஜ்ஜியத்தின் பாதுகாப்பும், இந்த நாட்டின் படைவீரர்கள் கொண்டுள்ள நம்பிக்கை, மற்றும் தியாகத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை மறந்துவிடாதே”.
மவுரியப்படை வீரர்களிடம் ராஜாங்க மதிப்பற்ற செல்வங்கள் அடங்கிய கருவூலங்களோ அல்லது களஞ்சியங்களோ இல்லை. அதுமட்டுமல்ல, அவனால் வியாபரத்திலோ அல்லது வர்த்தகத்திலோ ஈடுபடமுடியாது. அவனால் பண்டிதர்களையோ, கலைஞர்களையோ, கைவினைஞர்களையோ, சிற்பிகளையோ,  கட்டிடக்கலை நிபுணர்களையோ, மருத்துவர்களையோ, நிர்வாகிகளையோ உருவாக்கும் சக்தி அவனுக்கில்லை. அவனால் கோட்டை, கொத்தளங்கள், சாலைகள், அல்லது வாய்க்கால்களையோ, கிணறுகளையோ வெட்டிவிட முடியாது. இதில் ஏதுவுமே அவனால் நேரிடையாக செய்ய இயலாது. சிப்பாய்களால், வரி மற்றும் வருவாயை சேகரிப்போரின் பயணத்தின் போது, பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். ஒரு விவசாயி தான் உற்பத்தி செய்த பொருட்களை கொள்ளை பயமின்றி தெருக்களிலே அல்லது பண்டகங்களிலே விற்பனை செய்வதை உறுதிப்படுத்த முடியும். வர்த்தகர், சாதாரண வியாபாரம் செய்வோர், நிதிபயன்பாட்டில் ஈடுபடுவோர் ஆகியோர் பயமின்றி தங்களது வர்த்தகத்தை எந்தவித பாதிப்பும் இல்லாமல் செய்வதை உறுதிப்படுத்த முடியும். சிற்பிகள், அறிஞர்கள், குருமார்கள், கலைகள் படைக்கும் கலைஞர்கள், தத்துவஞானிகள், வானசாஸ்திர வல்லுனர்கள் போன்றோர் எந்த சலனமுமின்றி அமைதியான முறையில் தனது பணியில் ஈடுபடுவதை உறுதி செய்ய முடியும். வாஸ்து விஞ்ஞானி பரபரப்பில்லாமல் தனது கட்டுமானப் பணியை நிறவேற்ற முடியும். குருமார்கள் தங்களது உபதேசத்தை தடையின்றி செய்ய முடியும். மருத்துவர் நோய் தீர்க்கும் பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியும். குழந்தைகளும், பெண்களும் பாதுகாப்போடு வாழ முடியும். கால்நடைகள் திருட்டுபோகாமல் இருக்கும். இவ்வளவையும் சிப்பாய்களால் மட்டுமே உறுதிசெய்ய முடியும்.
பாடலிபுத்திரத்தின் ஒவ்வொரு இரவும் அமைதியான முறையில் மகிழ்வோடு கழியவேண்டுமென்றால், அரசே! மகத எல்லைகள் பாதுகாப்பாகவும், வலிமையாகவும் இருக்கிற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட விழிப்போடு, இரவு பகல் பாராது, கையிலே வாளேந்தி, கண்களில் வெறியோடு, எந்த தட்ப வெட்ப சூழ் நிலையிலும்,  தனது அசவுகரியங்களைப் பொருட் படுத்தாமல், வருடக் கணக்கில் எல்லையில்  நாடு காக்கும் அந்த மவுரிய படைவீரர்களின் தியாகமே பாடலிபுத்திரத்தின் அமைதிக்கு மகிழ்விற்கும் ஆணிவேர். குடிமகன்கள் ராஜ்யத்தின்  வளர்ச்சிக்கு வழி வகுக்கிறார்கள், படைவீரர்கள் அந்த வளர்ச்சிக்கு பாதுகாவலர்களாக இருக்கிறார்கள். அதனால் சொல்கிறேன், ராஜாதிராஜா, உன்னுடைய கடமை என்னவென்றால் தங்களுக்கு இன்ன தேவை என்று அவர்கள் கூற விரும்பாமல் எல்லை காக்கும் அந்த படை வீரர்களுக்கு தரவேண்டியவைகளை காலதாமதம் இன்றி வழங்குவதும், அவர்களது அனைத்து தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றுவதும், மரியாதையுடன் நடத்துவதும், உன்னுடைய தலையாயாய கடமையாகும். இறுதியாக சாணக்கியர் என்று சொல்லப்படும் கவுடில்யர் மகத அரசனுக்கு ஒரு எச்சரிக்கையை கொடுக்கிறார்:
அரசனே, எந்த ஒரு நாள் அந்த படைவீரர்கள் தன்க்கள் நிலுவைகளையும், தேவைகளையும் கேட்க ஆரம்பிக்கிறார்களோ, அந்த நாள் மகதத்தின் துயரமான நாள் என்பதையும், அன்று முதல் அரசன் என்ற நீ அனைத்து தார்மீக உரிமைகளையும் இழந்து விடுகிறாய் என்பதை நினைவில் வைத்துக் கொள்.
இந்தியாவின் ஆட்சியாளர்களும் இந்த நிலைக்கு வந்து விட்டார்களென்றால், ராணுவத்தினர் தங்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற தகுதியை மக்கள் இழந்து விடுகிறார்கள். இரவு பகல் என்று பாராது, குடும்பங்களை விட்டு, ஆண்டுக்கணக்கில், பனியிலும், குளிரிலும் தங்கள் அசவுகரியங்களை மறந்து நாட்டைக் காக்கும் வீரர்களை பற்றி, அரசும் இந்த மக்களும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லையென்றால்  நமக்காக ஏன் அவர்கள் போராட வேண்டும்?
 
 

One Response to “ஏன் அவர்கள் போராட வேண்டும்?
Nalliah Thayabharan Says:

April 12, 2012 at 9:35 am    

Edvige Antonia Albina Maino was born December 09, 1946 to Stefano and Paola Maino in Lusiana, a little village 30 km from Vicenza in the region of Veneto, Italy. Edvige Antonia Albina Maino spent her adolescence in Orbassano, a town near Turin, attending a Catholic school. In 1964, Edvige Antonia Albina Maino went to study English at the Bell Educational Trust’s language school in the city of Cambridge. She met Rajiv Gandhi, who was enrolled in Trinity College at the University of Cambridge in 1965 at a Greek restaurant while working there, as a waitress to make ends meet. In all three years of Rajiv Gandhi’s tenure at Trinity College had not passed a single examination. Edvige Antonia Albina Maino and Rajiv Gandhi married in 1968.Rajiv Gandhi changed his so called Parsi religion to become a Catholic to marry Edvige Antonia Albina Maino. Rajiv became Roberto. His daughter’s name is Bianca and son’s name is Raul. Quite cleverly the same names are presented to the people of India as Priyanka and Rahul. What is amazing is the extent of Indians’ ignorance in such matters. The press conference that Rajiv Gandhi gave in London after taking over as prime minister of India was very informative. In this press conference, Rajiv Gandhi boasted that he was NOT a Hindu but a Parsi.

 

Edvige Antonia Albina Maino was given the name ‘Sonia’ by her late mother-in-law, Indira Gandhi. But there is no notification in the gazette regarding this change in name. This change of name runs in Nehru family is to fool the Indian public for their votes. Indira Gandhi’s real name was Indira Priyadarshini. In 1935, Indira joined Shantiniketan,a school set up by Rabindranath Tagore. When Indira was found in the bed with her German teacher at Shantiniketan she was chased out of the Shantiniketan by Rabindranath Tagore. Subsequently, she went to England and sat for the University of Oxford entrance examination, but she failed, and spent a few months at Badminton School in Bristol, before passing the exam in 1937 and enrolling at Somerville College, Oxford where she never finished her degree. Khushwant Singh, who has personally known Indira Gandhi, has said that she felt uncomfortable around educated people because she had no real education. During her stay in the UK, she frequently met Feroze Khan, whom she knew from Allahabad, and who was studying at the London School of Economics. Before Indira’s marriage, the then Governor of Maharashtra Dr Shriprakash had warned Nehru in a meeting and through a letter, that Indira was having an illicit relationship with Feroze Khan. Feroze Khan was quite sympathetic to Indira and Indira married Feroze Khan in a London mosque as per Islamic rites Feroz Khan after converting herself to Islam. Indira’s muslim name was Maimuna Begum and later both had changed their name to fool the public of India by an affidavit in a court to Indira Gandhi and Feroz Gandhi.

 

After Rajiv’s birth Indira and Feroze lived separately, but they were not divorced. Feroze used to interfere in Nehru’s political activities. Nehru got fed up and left instructions not to allow him into the Prime Minister’s residence Trimurthi Bhavan. The death of Feroze in 1960 before he could consolidate his own political forces came as a relief to Nehru and Indira. Feroze had even planned to remarry. The second son of Indira known as Sanjay Gandhi was not the son of Feroze Khan. Sanjay’s real father was Mohammad Yunus who served as India’s ambassador to Turkey, Indonesia, Iraq and Spain. Mohammad Yunus represented India at the Non-Aligned Summits at Lusaka, Algiers, Colombo, New Delhi, and Harare. Baby Sanjay had been circumcised following Islamic custom, although the reason stated was phimosis. Incidentally, Sanjay’s marriage with the Sikh girl Menaka took place quite surprisingly through a civil ceremony(on 23 September 1974)in Mohammad Yunus’ house in New Delhi. And the marriage with Menaka who was a model (she had modelled for Bombay Dyeing wearing just a towel) was not so ordinary either. Sanjay never attended college, but took up an apprenticeship with Rolls-Royce in Crewe, England. Sanjay Gandhi’s name was actually Sanjeev Gandhi. He was arrested for a car theft in England. Since his passport had been seized, the then Indian Ambassador to England Krishna Menon changed his name to ‘Sanjay’and procured a new passport for him. On February 3,1956 Krishna Menon was inducted into the Nehru cabinet as minister without portfolio. Mohammad Yunus who cried the most when Sanjay died in the plane accident.

 

At the end of Rajiv Gandhi’s five years in office, the Bofors Scandal broke out. Rajiv Gandhi was paid by Bofors through Ottavio Quattrocchi. Ottavio Quattrocchi was merely a conduit for siphoning money. He was not a regular arms dealer. His company Snamprogetti dealt in fertiliser and petrochemicals. He was nobody in India without the backing of Rajiv Gandhi.
Interpol revealed two bank accounts, 5A5151516M and 5A5151516L, held by Ottavio Quattrocchi and his wife Maria with the BSI AG bank, London, containing Euros 3 million and $1 million, a “curiously large savings for a salaried executive”. Ottavio’s financier son, Massimo Quattrocchi, grew up with Sonia’s children Raul(Rahul) and Bianca(Priyanka).

 

Around 1974, Quattrocchi was introduced to Rajiv Gandhi and Sonia Gandhi by an Italian named Mr. Molinari. Then Mrs. and Mr. Quattrocchi started visiting Rajiv Gandhi and Sonia Gandhi. Children of both sides were frequent visitors to each other. At that time Rajiv Gandhi was a pilot in Indian Airlines. Quattrocchi became very close to Rajiv Gandhi and his wife. Their children grew up together, and based on this friendship, Quattrocchi had become so influential at the office of the Prime Minister that bureaucrats used to stand up when Quattrocchi visited them. The award of Jagdishpur Fertilizer Plant to Quattrocchi, changing earlier decision for SPIC, is a clear case. He won about 60 major projects projects including:
In 1981 – the five Alibag (Thal Vaishet) plants from RCF, four Kribhco plants in Hazira, as well as the ONGC gas pipeline in Hazira.
In 1983 – National Fertilisers Limited’s (NFL’s) plant in Una[disambiguation needed ] and two plants in Guna.
In 1984- IFFCO’s three plants in Aonla.
In 1987- Nagarjuna Fertilizers and Chemicals Limited’s two plants in Kakinada.

 

In 1980 Sonia’s name appeared in the voter’s list for New Delhi prior to her becoming an Indian Citizen. At the time she was still holding Italian Citizenship. A violation of Form 4 of the Registration of Electors Rules, 1960, which states that “Only the names of those who are citizens of India should be entered on the electoral rolls.” When she did acquire Indian Citizenship, in April 1983, the same issue cropped up again, as her name appeared on the 1983 voter’s list when the deadline for registering had been in January 1983.

 

Swiss magazine Schweitzer Illustrierte in 1991 claimed that Sonia was controlling accounts worth $2 billion US dollars in her son Raul’s name.

 

Harvard scholar Yevgenia Albats cited KGB correspondence about payments to Rajiv Gandhi and his family, which had been arranged by Viktor Chebrikov, which shows that KGB chief Viktor Chebrikov sought in writing an “authorization to make payments in U.S. dollars to the family members of Rajiv Gandhi, namely Sonia Gandhi, Rahul Gandhi and Paola Maino, mother of Sonia Gandhi” from the CPSU in December 1985.

 

Payments were authorized by a resolution, CPSU/CC/No 11228/3 dated 20 December 1985; and endorsed by the USSR Council of Ministers in Directive No 2633/Rs dated 20 December 1985. These payments had been coming since 1971, as payments received by Sonia Gandhi’s family and “have been audited in CPSU/CC resolution No 11187/22 OP dated 10/12/1984.

 

In 1992 the media confronted the Russian government with the Albats disclosure. The Russian government confirmed the veracity of the disclosure and defended it as necessary for “Soviet ideological interest.”

 

Rahul Gandhi & his Columbian girlfriend Veronique Cartelli, daughter of a Columbian mafia drug lord were arrested on Sep 21, 2001 at Boston Airport by FBI for carrying suitcase full of dollars. Some say it was about was it $2 million. This huge dollar amount generated suspicion with the US authorities. Rahul and his girl friend was thus detained by FBI. FBI suspected that Rahul was carrying terrorist funds or drug money for laundering in US.
What money Rahul Gandhi was carrying? Was it another Bofors type pay off? Was it Columbian drug money on behalf of his Columbian girl friend?
Rahul called his mother Sonia Gandhi in India. In turn Sonia called Brijesh Mishra, the former National Security Advisor and a key aide to former prime minister Atal Behari Vajpayee at the Prime Ministers Office. Brijesh Mishra intervened on behalf of PM Vajpayee with the US Administration for the release Rahul from FBI custody. Brijesh Mishra has strong connections with Sonia Gandhi’s Italian family through his daughter Jyotsna. Jyotsna is married to an Italian and lives in Italy.

 

In Sep 2004 when Washington played host to Young political sons, Sachin Pilot, Milind Deora, Jitin Prasada (all are from Congress party), and Manvendra Singh (from BJP ) followed by liquor baron who got himself elected to a the Rajya Sabha, Vijay Mallya (Janata Party) and ever smiling Rajiv Shukla of the Congress. Yet one prominent face was missing which was that of Rahul Gandhi. Rahul Gandhi didn’t go to USA with the young politicians. It was Shukla who conceived the idea of the Indo-US Parliamentary Forum to create a counterpart to the India Caucus in the US House of Representatives. Rahul Gandhi had to avoid going to the U.S. forever, because of the pending police questions he could be arrested again by FBI if he ever steps in to US. Rahul Gandhi was dropped out in 3 Months from Harvard. But Rahul Gandhi lied to Indians that he has Masters in Economics from Harvard. Veronique Cartelli is already living in Thuglaq road in Delhi. If ever, because of India’s misfortune, Rahul Gandhi comes to power, India will have another “Sonia”.

 

In 2008 Sonia’s party appointed Prime Minister Manmohan Singh. Manmohan Singh was the only international leader to initially refuse data provided by the German authorities during 2008 Liechtenstein tax affair.Sonia shares a common Educational Background with her 2G Partner in Crime, Dakshinamurthy Muthuvel who lated changed his name as Karunanidhi.

 

Indira didn’t have any knowledge about constitution and constitutional procedures.Indira furthered creation of democratic dictatorship, first kicked off by her father Nehru. Indira never trusted anyone but her family only and so made Sanjay Gandhi and Rajiv Gandhi heroes without any deed during her lifetime. Her leadership plunged India into depths of darkness. India needs enlightened leaders. But it has been getting stupid leaders because the population at large is not “enlightened.”

 

For India to get decent leadership, Indians have to change. Indians have to demonstrate that they can take the long view, that they are not willing to vote criminals into office.

 

Indians have granted “their obedience by their own consent” to dictators for a long while. The most recent in living memory is Indira Gandhi. Before that it was to their British overlords. Before that to the Islamic invaders.

 

The World’s largest democracy acutely suffers from nepotism and is gradually slipping towards ‘hereditary democracy’. The conspicuous feature of this ‘hereditary democracy’ is the planned upbringing by the political leaders of their wards as the political heirs or heir-apparent to the higher posts in politics.Starting with Gandhi dynasty, leaders from federal to provincial level are involved in promoting their offspring.

 

Failure of integrity is not uncommon among ministers and that some ministers, who have held office during the last seventy years have enriched themselves illegitimately, obtained good jobs for their sons and relations through nepotism and have reaped other advantages inconsistent with any notion of purity in public life.

 

http://www.dailymotion.com/video/xgjg5m_sonia-gandhi

 

வரலாறு மீண்டும் திரும்புகிறதா?

April 6, 2012
Posted by தர்மபூபதி ஆறுமுகம்
வரலாறு தானே திரும்புவதில்லை, ஆனால் முட்டாள்களால் வரலாறு மீண்டும் திருப்பப்படுகிறது என்று ஒரு சொல் உண்டு. அது திரும்பவும் நிரூபணமாகி வருகிறதோ எனத் தோன்றுகிறது. இன்றைக்கு ஏதோ ராணுவத்திற்கும், அரசிற்கும்  மிகப்பெரிய இடைவெளி இருப்பது பற்றி பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்ல ராணுவப்புரட்சியே வருவது போல் கூட செய்திகள் வருகின்றன. ராணுவம் பற்றிய உண்மையான பிரச்சனை எதுவென்றால், ராணுவத்தளபதி பிரதமருக்கு எழுதிய கடிதம் கசிந்தது பற்றி அல்ல, மாறாக பாதுகாப்பு படைகளின் மன உறுதியை, கட்டுப்பாட்டை குலைக்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் உள்ளன என்பதை நாம் உணரவேண்டும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு, மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் ஆகியோரின் அணுகுமுறை, ராணுவத்தை அலட்சியப்படுத்ததையும் பாதுகாப்பு படைகளிடம் ஒழுக்க சிதைவையும் ஏற்படுத்தியது, 1962ல் தேசீய அவமான சம்பவமான சீனப்போருக்கு வழி வகுத்தது என்று சொன்னால் மிகையாகாது. 
வரலாறை நன்கு அறிந்தவர்களுக்கு புரிந்திருக்கும். 1962ல் நடந்த தேசீய அவமான சம்பவமான சீன போரின் போது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பதிலாக நேருவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோனிக்கு பதிலாக கிருஷ்ணமேனனும் பதவியிலிருந்தது ஒன்று தான் வித்தியாசம் என்பது அனைவருக்கும் விளங்கும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன், 1959ல், காஷ்மீரை காத்தவர் என்று புகழப்பட்ட ராணுவத் தளபதி திம்மையா அவர்கள், அப்போதைய பிரதமர் ஜவர்கலால் நேருவிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ண மேனனின் போக்கைக் கண்டித்து தனது ராஜினாமாவை கொடுத்தார். காரணம் ராணுவத்தை பலப்படுத்தவும், எதிர்காலங்களில் வரும் போர் அபாயங்களை (1962 சீன போர்) தடுக்கவும் தான் வகுத்தளித்த திட்டங்களை ஏற்க மறுத்ததுமே காரணமாகும். பிறகு நேருவின் வற்புறுத்தலுக்கு பிறகு தனது ராஜினாமாவை ராணுவத் தளபதி திம்மையா அவர்கள் திரும்ப பெற்றுக் கொண்டார். ஆனால் நேரு தளபதி திம்மையா அவர்களுக்கு உறுதியளித்தபடி ராணுவத்தை பலப்படுத்த எந்த நடவடிக்கையையும் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் எடுக்கவில்லை. சிறிய நடவடிக்கைகள் கண்துடைப்பாக எடுக்கப்பட்டது. ராணுவத்தளபதி திம்மையாவும் சிறிது காலத்தில் ஓய்வு பெற்றார். அதன் விளைவு தான் இந்திய சீன போர். அதன் முடிவு இந்தியாவிற்கு தோல்வி மட்டுமல்ல, பெருத்த அவமானத்தையும் தேடித்தந்தது. 
ராணுவத் தளபதி திம்மையா அவர்களின் பதவிக்காலம் முடிந்ததும், ராணுவத் தளபதி திம்மையா அவர்களின் ராணுவத்தை பலப்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் பிரதமர் நேருவாலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் அவர்களாலும் புறக்கணிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. ராணுவத்தளபதி திம்மையா அவர்கள் தளபதி தொரட் என்பவரை புதிய ராணுவத்தளபதியாக நியமிக்கும்படி பரிந்துரை செய்தார். ஆனால் நேருவும் கிருஷ்ணமேனனும் அவருடைய பரிந்துரையை நிரகரித்தது மட்டுமல்ல, பிரான் நாத் தாப்பர் என்பவரை புதிய தளபதியாக நியமிக்க முடிவெடுத்தனர். தொரட் வீரம் மிக்க போராடும் குணம் கொண்ட போராளி ஆவார்.. ஆனால் தாப்பர் அரசியல் தொடர்பு கொண்டவர். நேருவிற்கு (திருமண சம்பந்த மூலம்) உறவினர் ஆவார். (சரித்திர ஆராய்ச்சியாளர் ரொமிலா தாப்பர் இவருக்கு மாமா ஆவார். தற்போதைய தொலைகாட்சி புகழ் கரன்தாப்பர் அவர்களின் தந்தையும் ஆவார்.) குடும்ப உறவுகளின் வலிமை எப்படிப்பட்டது என்பது இப்போது அனைவருக்கும் புரியும். இதேபோன்று அரசியல் தொடர்பு கொண்ட பிரிஜ் மோகன் கவுல் பிரச்சனைகள் நிறைந்த வடகிழக்கு எல்லை தளபதியாக நியமிக்கப்பட்டார். 1962 சீன போரின்போது, கவுல் போர்க்களத்திலிருந்து ஓடி, டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை என்ற பெயரில் தானே சேர்ந்து ஒளிந்து கொண்டு, சரித்திரத்தில் அழியாத அபகீர்த்தியை சம்பாதித்துக் கொண்டவர். ஆக நேருவும், கிருஷ்ணமேனனும் நியமித்த அரசியல் தொடர்பு கொண்டவர்களின் தகுதியால் நாடு எப்படி பெரும் அவமானத்தைச் சந்தித்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நேருவிற்கும், கிருஷ்ணமேனனுக்கும் இந்திய தேசத்தின் பாதுகாப்பில் ஆர்வம் இருக்கவில்லை. இவர்கள் தங்களை இந்தியாவின் பாதுகாவலர்களாக நினைத்துக் கொள்ளவில்லை. ஆனால், மாறாக உலகிற்கு தாங்கள், யுடோபியன் கருத்துக்களை போதிக்கும் ஒரு களமாக இந்தியாவைக் காட்ட முனைந்தனர். (யுடோபியா  ஒரு சரியான  அரசியல் சட்ட அமைப்பு (socio-politico-legal system) கொண்ட ஒரு இலட்சிய மக்கள் சமூகம்.  1516ல் தாமஸ் மோர் என்பவர், தான் எழுதிய யுடோபியா என்ற புத்தகத்தில் இந்த கிரீக் வார்த்தையை பயன் படுத்தினார்.)  எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச அளவில்  தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதிலேயேயும், மேற்கத்தியர்களை ஈர்க்கும் முயற்சிகளிலேயேயும்  நேரு மிகுந்த ஆர்வம் காட்டினார். 1948ல் தளபதி திம்மையா அவர்களின் ஆலோசனைகளை புறந்தள்ளிவிட்டு, பிரதமர் நேரு காஷ்மீர் பிரச்சனையை ஐக்கியநாட்டு சபைக்கு கொண்டு சென்றார். அதன் விளைவை இன்றளவு நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம் ராணுவத்தளபதி கரியப்பா அவர்களின் வடகிழக்கு எல்லையோரங்களில் ராணுவத்தை பலப்படுத்த உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்ற திட்டத்தையும் பிரதமர் நேரு நிராகரித்தார்.
பிரிட்டிஷ் மெசினரியை சார்ந்த வெர்ரியர் எல்வின் என்பவரது ஆலோசனையையே நேரு கேட்டறிந்தார். பழங்குடி கலாச்சாரத்தை பேணிக்காக்கும் வகையில் அங்கு அடிப்படை செயல்பாடுகளை நிறுத்தவேண்டும் என்று நேருவிற்கு எல்வின் ஆலோசனை வழங்கினார். பழங்குடியினர் கலாச்சாரத்தை பேணிக்காப்பதில் ஆர்வம் உள்ளவர் போல காட்டிக்கொண்டாலும், உண்மையில் அவர்களை, குறிப்பாக இளம் பெண்களை தனது விருப்பத்திற்கு பயன்படுத்திக்கொண்டார். தனது வயதிற்கு மிகக்குறைவான வயதுடைய இரு இளம்பெண்களை திருமணம் செய்துகொண்டு, பிறகு அவர்களை விவாகரத்து செய்துவிட்டார். இவர்தான் நேருவிற்கு மிகவும் விருப்பமானவர். நேருவிற்கு ஆலோசனை வழங்கியவர். இவரது ஆலோசனையின் விளைவு தான் வடகிழக்கு மாநிலங்கள் இன்று கிருத்துவ ஆதிக்கம் கொண்டதுமட்டுமல்ல, பிரிவினையையும் கோரிவருகின்றன. 
ஐக்கியநாட்டு சபை தொடங்கப்பட்டபோது, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் வழங்க முன்வந்தது குறித்து நமது மக்களுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. (இப்போது இந்த நிரந்தர இடத்திற்கு பிச்சை கேட்டு வருகிறோம்). ஆனால் நேரு, இந்தியாவிற்கு நிரந்தர இடம் வழங்குவதற்கு முன், மாசேதுங் தலைமையிலான  சீனாவிற்கு நிரந்தர இடம் வழங்குவதே சரியாக இருக்குமென்று வாதிட்டு, சீனாவிற்கு நிரந்தர இடம் கிடைப்பதில் முன்னின்றார். 1950களில் சுதந்திர நாடாக, இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்த திபெத்தை சீனா கைப்பற்றியது. இதன் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவிக்கப்பட்டபோது, நேரு அதைப் பொருட்படுத்தவில்லை. அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ணமேனன் இன்னும் ஒருபடி மேலே பொய் திபெத்தை சீனா ஆக்கிரமித்தது சரி என்றும், சீனா இந்தியாவின் மீது எப்போதும் போர் தொடுக்காது என்றும் வாதிட்டார். 
சீனா போர் தொடுத்ததும், அதில் நாம் தோல்வியை சந்தித்ததும் உலகறிந்த விசயம். தற்போதும் சீனா நம்மை விழுங்க வலை விரிக்கிறது. பலவகைகளிலும் அது நம்மை நெருக்கி வருகிறது. நம்மை சுற்றியுள்ள நாடுகளை நட்பு நாடாக்கிக்கொண்டு, அந்த நாடுகளை நமக்கு எதிராக தூண்டி வருகிறது. ஆனால் இந்தியாவை தூங்கிக்கொண்டே ஆண்டு கொண்டிருக்கும் சோனியா காங்கிரஸ் விழித்துக் கொள்ளவில்லை. தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. ராணுவத்தளபதியின் கடிதம் எப்படி கசிந்தது என்பதில் ஆர்வம் காட்டும் காங்கிரஸ் அரசு, அவர் கூறியுள்ள ராணுவத்தில் உள்ள குறைபாடுகளை நீக்குவதில் ஆர்வம் காட்டினால் நன்றாக இருக்கும். இல்லையென்றால் இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல முட்டாள்களால் மீண்டும் வரலாறு திரும்பும்! 
ஒரு பெட்டி செய்தி: ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் போல தங்களைக் காட்டிக்கொண்டாலும், பிரபலமான ஜோதிடர் திரு பி வி ராமன் அவர்களை  நேருவும், கிருஷ்ணமேனனும் கலந்தாலோசிப்பது வழக்கம். மேனன் நேரிடையாகவும், நேரு, தனது தூதர் குல்சாரிலால் நந்தா மூலமாகவும் ஆலோசனை கேட்பது வழக்கம். ஒரு முறை, மேனன் தனது பதவியை இழப்பார் என்றும், சீனா இந்தியா மீது போர் தொடுக்கும் என்று கணித்து சொன்னார். அப்போது மேனன் அவரிடம் “நான் பதவியை இழப்பேன் என்று சொல்வது கூட உண்மையாக இருக்கலாம், ஆனால் சீனா இந்தியா மீது எக்காலத்திலும் போர் தொடுக்காது, ஏனென்றால் இருநாடுகளும் சோசிலிச நாடுகள்” என்று கூறினாராம். அதன் பின்னர் சீனா போர்  தொடுத்தது அனைவரும் அறிந்த ஒன்று.
Source: http://www.causes.com/causes/115592-support-indian-army-in-the-war-against-terrorism/actions/1640013
 

காங்கிரஸ் கட்சியின் அறிவிக்கப்படாத கொள்(கை)ளை.

March 31, 2012
Posted by தர்மபூபதி ஆறுமுகம்
பாரத ராணுவத் தளபதி திரு வி.கே.சிங் அவர்கள் பிரதமருக்கு எழுதிய கடிதமும், ராணுவ தளவாடங்களில் சலுகைகள் புரிந்திட தனக்கே பதினான்கு கோடி ரூபாய் கையூட்டு கொடுக்க ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியே முயன்றதாகவும் கூறியவை இன்று பாரதத்தையே உலுக்கிவருகின்றன. இதன்காரணமாக  இதைத்தொடர்ந்து சிலர் அவருக்கு ஆதரவாகவும், சிலர் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிராகவும் அவரை விமர்சித்து வருகிறார்கள். அரசியலில் செல்லாக்காசாக இருக்கும் லல்லு போன்றோரின் பேட்டிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி தங்கள் பங்கிற்கு பாரதத்தை அசிங்கம் செய்து கொண்டுள்ளனர். உண்மைகளை உள்ளபடியே சொல்லவேண்டிய தொலைகாட்சிகள் தங்கள் மனம்போன போக்கில் விமர்சிப்பது ஜனநாயகத்தையே கேவலப் படுத்துவதாக உள்ளன. விமர்சனங்கள் என்பது நடு நிலைமையோடு இருக்கவேண்டிய ஒன்று. கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம். ராணுவத்தளபதி திரு வி.கே.சிங் அவர்களின் பிறந்த நாள் குறித்த சர்ச்சை. (இது குறித்து ஏற்கனவே இந்த தளத்தில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.) கொஞ்சம் இந்த பிரச்சனை குறித்து ஊன்றி கவனித்தோமானால், ஒரு சாதாரண பிரச்சனை எவ்வளவு பெரிதாக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வரும். 
வி.கே.சிங், ஏதோ ஒரு படைப்பிரிவின் ராணுவ வீரர் அல்ல. அவர் இந்திய ராணுவத் தளபதி. அவருக்கு இத்தகைய சிக்கல் (பிறந்த நாள் குறித்த சர்ச்சை) ஏற்பட்டிருக்கிறது என்கின்றபோது, அவரே இது குறித்து பாதுகாப்புத் துறையிடம் முறையிட்டுள்ளபோது, அரசு என்ன செய்திருக்க வேண்டும்? பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனி, பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலர் சர்மா மற்றும் ராணுவத்தின் உயர் அதிகாரிகள் அமர்ந்து பேசி, இந்தப் பிரச்னைக்கு ஒரு சில மணி நேரத்தில் தீர்வு கண்டிருக்க வேண்டாமா? 
வி.கே. சிங் பிறந்த தேதி அவரது கூற்றுப்படி 1951 என்பதே சரி என்பதால், ஆவணங்களை நேர்ப்படுத்தி அவரைப் பணியில் மேலும் ஓராண்டுக்குத் தொடர்ந்து சேவையாற்ற அனுமதித்திருக்கலாம் அல்லது ஆவணங்களை நேர்ப்படுத்தினால் வேறு சிக்கல்கள் எழக்கூடும் அல்லது தவறான முன்னுதாரணமாக பின்னாளில் சுட்டிக் காட்டப்படும் என்று பாதுகாப்புத் துறை கருதியிருந்தால், இந்தச் சிக்கல்களை வி.கே. சிங்கிடம் தெரிவித்து, ராணுவத்தின் கெளரவம் கருதி, இதைப் பெரிதுபடுத்தாமல் ஓய்வு பெறவும், இதனால் அவருக்கு ஏற்படும் இழப்புகளைச் சரிசெய்யும் வகையில் அவருக்கு வேறு பொறுப்புகளை அளிக்கவும் சமாதானப்படுத்தியிருக்கலாம். ஆனால், இதை எதையும் மத்திய பாதுகாப்புத் துறை செய்யவில்லை. இதன்மூலம், அவர் ராணுவத்தளபதி பதவியிலிருந்து அவர் வெளியேற்றப்படவேண்டும் என்பதே சிலரது எண்ணமாக இருந்துள்ளது  புரிகிறது. அதன் காரணமாகவே இந்த பிரச்சனையில் அரசின் அணுகு முறை தவறாக இருந்து வந்திருக்கிறது. யார் அந்த சிலர்? நிச்சயமாக ராணுவத்தளபதிக்கு வேண்டப்படாதவர்களாகவே அவர்கள் இருக்கக்கூடும். காரணம் தங்கள் எண்ணத்திற்கு, செயலுக்கு, இவர் தடையாக உள்ளார் என்பது தான். அந்தத் தடையென்ன என்பதற்க்கான காரணம் இப்போது ராணுவத் தளபதி அவர்களால் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ராணுவத்துக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை, குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடம் இருந்து வாங்கினால், அந்த நிறுவனத்திடம் இருந்து, எனக்கு 14 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுத் தருவதாக, முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் என்னை அணுகினார். இதுகுறித்து, ராணுவ அமைச்சரிடம் அப்போதே தெரிவித்து விட்டேன்’ என்று திரு வி.கே சிங் கூறியுள்ளார். ஓய்வு பெற்ற ஜெனரல் தேஜேந்திர சிங் பதவியில் இருந்த காலத்தில் ராணுவத்திற்கு தேவையான டாட்ரா வெட்ரா டிரக் கொள்முதல் செய்யப்பட்டது. சுமார் 7000 டிரக்குகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இதுகுறித்து நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் தற்போதைய தலைமை தளபதி வி.கே.சிங் கோரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற காரியங்களுக்கு துணை போகாத காரணத்தால் ராணுவத்தளபதியை பிறந்த நாள் சர்ச்சையில் சிக்கவைத்து பழி தீர்த்துள்ளனர். அப்படியிருக்கும்போது, ஏதோ பிறந்த நாள் சர்ச்சையில் தனக்கு தீர்வு கிடைக்காத காரணத்தால் தான் ராணுவத்தளபதி இந்த குற்றச்சாட்டை இப்போது கூறியிருக்கிறார் என்று பிரச்சனையை திசை திருப்புவது, நேர்மையற்ற செயலாகும். இந்த விவகாரம் என்னுடைய பதவிக் காலம் குறித்தது அல்ல, 13 லட்சம் ராணுவ வீரர்களுக்குத் தலைமைத் தளபதியாக இருக்கும் என்னுடைய நேர்மை சம்பந்தப்பட்டது என்று அவர் குறிப்பிட்டதை இங்கு நினைவில் கொள்ளவேண்டிய ஒன்றாகும். 
பலர் இப்போது கேள்வி எழுப்புவது ஏன் இவர் முன்னரே இதை கூறவில்லை? அல்லது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை என்று முட்டாள் தனமாக கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். திரு வி.கே சிங் ஒரு சாதாரண ஆள் அல்ல, ஓடிப்போய் போலிசில் புகார் கொடுக்க. அதுமட்டுமல்ல பாதுகாப்பு அமைச்சரிடம் இந்த உண்மையை கூறியுள்ளார். ஏன் பாதுகாப்புத்துறை அமைச்சர் இது பற்றி உளவுத்துறையிடம் கூறி விசாரித்திருக்கலாமே? ஏன் அமைச்சர் செய்யவில்லை? ராணுவத்தளபதி என்னிடம் கூறியது உண்மை ஆனால் நடவடிக்கை எடுப்பதில் அவருக்கு விருப்பமில்லையாதலாலும், எழுத்து மூல புகார் இல்லையாதலாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். எவ்வளவு கேவலம். இதற்கு எழுத்து மூல புகார் இருந்தால் மட்டுமே தான் நடவடிக்கை எடுக்க முடியுமா? இல்லையென்றால் நடவடிக்கை எடுக்க இயலாதா? ஆக ஊழல் நடக்கிரது என்பது தனக்கு தெரியும். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சரும் உள் என்று தானே பொருள்? அந்தோனி திருவாளர் சுத்தமாக வேடம் தரிக்கவேண்டிய அவசியம் என்ன என்பதை விளக்க வேண்டும்? ஒரு மிகப்பெரிய ஊழல் குறித்து, அல்லது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு செய்தி பிரதமருக்கு  வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். இது குறித்து விசாரிக்க வேண்டுமென்றால் பிரதமர் புகார் கொடுக்கவேண்டுமா? அப்போதுதான் விசாரிப்பீர்களா? அந்தோனி அவர்களே விளக்கம் கொடுங்கள். ரகசிய விசாரனை நடத்த எத்துனை துறைகள் உள்ளன என்பதை அரசுப் பொறுப்பில் அமைச்சராக உள்ள உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. இது குறித்து தகவல் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத நீங்கள் தான் முதல் குற்றவாளி! நீங்கள் நேர்மையானவன் என்று சொல்லிகொண்டால் போதாது. 
மகாபாரதம்  உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான்.
அதர்மத்திற்கும், தர்மத்திற்கும் போர் நடக்கும்போது, எவன் ஒருவன் நடுநிலமை வகிக்கிறானோ அவன் அதர்மத்தின் பக்கம் நிற்கிறான் என்பதுதான்… 
ஆக நீங்கள் தான் குற்றவாளி என்பதை உணர வேண்டும். 
அரசின் உயர்பதவிகளில் இருப்பவர்கள் நிலை என்ன என்பது அனுபவித்து பார்த்தவர்களுக்குத்தான் புரியும்? அமைச்சரை விரோதித்துக் கொண்டு அவர்கள் பதவியில் இருந்துவிட முடியுமா? அவர் பகிரங்கமாக சொல்ல முடியாமற்போனதிற்கு பல காரணங்கள் இருக்கலாம். நமக்கு தெரியாது. இதற்கிடையே கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது தந்தை தேவேகவுடா பிரதமராக இருந்தபோது ராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்காக இடைத்தரகர்கள் என்னிடம் ரூ.350 கோடி தருவதாக பேரம் பேசினார்கள் என்று கூறியுள்ளார். இதுகுறித்து உண்மையான விசாரணை என்று ஒன்று  நடந்தால் தேவகவுடாவின் உச்சகட்ட ஊழல் வெளிவரக்கூடும். அதனால் தான் என்னவோ அவசர அவசரமாக இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார் குமாரசாமியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா. 
சில ஆண்டுகளில் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட உள்ள தல்பிர் சிங் மீதும் ஊழல்  குற்றச்சாட்டு! 
இதுதவிர, ஏற்கனவே ராணுவத்தில் ஊழல் தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி அம்பிகா பானர்ஜி கடிதம் எழுதியிருந்ததும் இப்போது வெளிவந்து உள்ளது. சிறப்பு எல்லையோர பாதுகாப்புப் படையின் தலைவராக இருந்த (LIEUTENANT GENERAL) லெப்டினன்ட் ஜெனரல் தல்பிர் சிங், ஊழல் செய்ததாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி அம்பிகா பானர்ஜி, தனக்கு புகார் கடிதம் எழுதியதாக ராணுவ தளபதி வி.கே.சிங் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த கடிதத்தை சி.பி.ஐ.க்கு அனுப்பிய அவர், ஊழல் புகார் பற்றி விசாரிக்குமாறு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு நேர கண்காணிப்பு கருவிகள், தொலைத்தொடர்பு சாதனங்கள், பாராசூட்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்க லஞ்சம் பெற்றதாக, தற்போது Dimapur பகுதி பாதுகாப்புப் படையின் கமாண்டிங் அதிகாரியாக உள்ள தல்பிர் சிங் மற்றும் முன்னாள் ராணுவ தளபதி ஒருவர் மீது, திரிணாமூல் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார். தனக்கு14 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக தெஜிந்தர் சிங் என்ற ஓய்வு பெற்ற அதிகாரி மீது தளபதி வி.கே.சிங் ஏற்கெனவே புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மேலும் ஒரு உயர் அதிகாரி மீது ஊழல் குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க அவர் பரிந்துரை செய்துள்ளது அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. தற்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ள ராணுவ உயர் அதிகாரியான தல்பிர் சிங், இன்னும் சில ஆண்டுகளில் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட இருப்பது கூடுதல் தகவல். 
இதிலிருந்து ராணுவத்தில் எவ்வளவு ஆழமாக ஊழல் புரையோடியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். ஏனென்றால் இந்த காங்கிரஸ் அரசாங்கத்தின் வரலாறு அப்படி. ராணுவத்தில் ஊழல் என்பது காங்கிரஸ் கட்சியின் அறிவிக்கப்படாத கொள்(கை)ளை. ஜவர்கலால் நேரு காலத்தில் துவக்கப்பட்ட ராணுவக் கொள்ளை பேரன் ராஜிவ் காலத்தில் கொள்ளை சாம்ராஜ்யமாக போபர்ஸ் ஊழலாக பரினாமித்தது அனைவருக்கும் நினைவிலிருக்கும். அந்த போபர்ஸ் குற்றவாளிகளையே தப்பவிட்ட சோனியா காங்கிரஸ் அரசு ராணுவத்தளபதி கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிடுமா? உண்மையான விசாரனை நடந்தால் இந்த ஊழலில் காங்கிரசை ஆட்டிப்படைக்கும் உயர் குடும்பத்திற்கும் சம்பந்தமிருக்ககூடும்? அதன் காரணமாக, நேர்மையாளர் அந்தோனி நடவடிக்கை எடுக்க அச்சப்பட்டிருக்கலாம்? ஏன் ராணுவத் தளபதிக்கே கூட இது தெரிய வந்திருக்கலாம்? அதன் காரணமாக சொல்ல முடியாமல் போகும்படியான நிலைமை இருந்திருக்கலாம். யார் கண்டது? ஊழல்பற்றி பாதுகாப்பு அமைச்சரிடம் புகார் கூறியதாலேயேகூட ராணுவத்தளபதியின் பெயரைக்கெடுக்க பல சர்ச்சைகளை அரசே உருவாக்கியிருக்கக் கூடும். 
அதேசமயம், வி.கே.சிங் முதலில் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்க வேண்டும். ஆனால், அவர் நேரடியாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. பிரதமருக்கு கடிதம் எழுதியது தவறு என்பது போன்றும் அந்தரங்கக் கடிதம் அரங்கத்திற்கு வந்தது குறித்து ராணுவத்தளபதி வி.கே சிங் மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இத்தகைய பொறுப்பற்ற செயலை பொறுப்பான ராணுவத்தளபதி நிச்சயம் செய்திருக்க வாய்ப்பில்லை. வெடிபொருள் பற்றாக்குறை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றது சரியானதுதான். 
எனது தனிப்பட்ட சிறப்புரிமையின் அடிப்படையில்தான் பிரதமருக்கு கடிதம் எழுதினேன். இந்நிலையில், அந்தக் கடிதம் பகிரங்கமாக வெளியானதை தேச துரோகக் குற்றமாகக் கருத வேண்டும். அது வெளியாகக் காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மீதான மதிப்பைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். ஆக மொத்தத்தில் ஊழலுக்கு துணை போகாத நேர்மையான ராணுவத்தளபதி மீது ஊழலில் ஊறிப்போன காங்கிரசாரும், லாலு போன்ற தலைவர்களும் கூறிவரும் அவமதிப்புகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்கள் நா காக்கவேண்டும். ஒரு கண்ணியம் மிக்க ராணுவத்தளபதி இவர்களைப் போல லாவணி பாடமுடியாது என்பதை இவர்கள் உணர வேண்டும். 
ராணுவத்தின் நிலைகுறித்து முப்படைத்தலைவர்கள் பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் நேரிடைத் தொடர்பு கொண்டவர்கள் என்பதைப் புரியாத கோமாளி லல்லு போன்ற சில அறிவற்ற அரைவேக்காட்டு தலைவர்கள் பேசும் பேச்சுகளாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆக இந்த கடிதத்தை வெளியிடுவதன் மூலம் ராணுவத்தளபதியின் பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டுமென்ற நோக்கில் இக்கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. நிச்சயம் யாரோ அரசாங்கத்தில் உள்ள தேசத்துரோகிதான் இதை செய்திருக்க வேண்டும். அரசாங்கமே தேசதுரோகியாக இருந்தால் எங்கிருந்து நீதி கிடைக்கும்?