Archive for the ‘சோனியா…ராகுல்…’ Category

ரெயின் கோட்டும்,காங்கிரசும்!

February 10, 2017

ஆறு.தர்மபூபதி

நேற்றிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்த கருத்துக்கு அவையின் கண்ணியத்தை குறைக்கும் செயல் என்று. கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர்.கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் மாண்பு மிகு பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய போது,தனது அரசாங்கம் நாட்டின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு, நிறைவேற்றியுள்ள திட்டங்கள் குறித்து வரிசைப்படுத்திப் பேசினார். அப்படி பேசும்போது, காங்கிரஸ் கட்சியின் ஊழல்கள் பற்றியும், தனக்கு எதிராக அவதூறுகளையும் தனிப்பட்ட தாக்குதல்களையும் மேற்கொண்ட பல காங்கிரஸ் தலைவர்கள் குறித்து காங்கிரஸ் மவுனம் சாதிப்பது ஏன் என்று வினவினார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பண மதிப்பிழப்பு விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் அண்மையில் பேசிய போது இந்த பண மதிப்பிழப்பு விவகாரம் “அரசின் மறக்கமுடியாத நிர்வாகத் தோல்வி, சட்டரீதியான திருட்டு, திட்டமிடப்பட்ட கொள்ளை, மோடி மோசடிக்காரர்” என்று வசை பாடியிருந்தார்.
பணமதிப்பிழப்பு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தன்னைப் பற்றி இப்படி விமர்சித்தற்கு நேரம் பார்த்து பிரதமர் தனக்கே உரிய பாணியில் சரியான பதிலடியை திருப்பித் தந்தார்.  மன்மோகன் சிங் அவர்கள் கிட்டத்தட்ட 35 வருடங்களாக இந்த நாட்டின் நிதிக் கொள்கையில் தன்னை ஈடுபடுத்தி imageவந்துள்ளார். அதே சமயம் இந்த கால கட்டத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, அவர் கண் முன்னே பல ஊழல்கள் நடந்தாலும் அவர் மட்டும் கரை படியாதவராக இருந்து உள்ளார். “மழைக்கோட்டு அணிந்து கொண்டு குளிப்பது எப்படி என்கிற கலை அவருக்கு மட்டுமே நன்கு தெரியும்”, என்று மோடி பதிலடி தந்தார். இப்படியொரு தாக்குதலை எதிர்பார்க்காத காங்கிரசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த தாக்குதலில் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் குறிப்பாக ஆனந்த சர்மா, திக்விஜய் சிங், கபில் சிபல் ஆகியோர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது மன்மோகன் சிங் அவையிலேயே உட்கார்ந்திருந்தார். பிறகு ஆனந்த் சர்மா திரும்ப மன்மோகன் இருக்கைக்கு வந்து அவரை அழைத்து சென்றார். இந்த வெளிநடப்பு குறித்து பேசிய மோடி,” அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுக்கும் திறன் எங்களுக்கும் உள்ளது. இது போன்று யாராவது பேசினால் அதற்க்கான எதிர்விளைவுகளை சந்திக்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.
பாராளுமன்றத்தில் பல அரசியல் கட்சிகள் இது போன்று மற்ற அரசியல் கட்சிகளை தாக்குவதும் அதற்கு வேடிக்கையாக நையாண்டி பேசுவது ஒன்றும் புதிதல்ல.. இது போன்ற நையாண்டிகளையும் வேடிக்கையான விமர்சனங்களையும் விளையாட்டாக எடுத்துக் கொண்டு அதோடு விட்டு விடுவது வழக்கம். ஆனால் சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியினர் ஒன்றுமில்லாத பிரச்சனைகளை பூதாகரமாக்குவதும் அதை வைத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் கோஷம் எழுப்புவதும், மையப் பகுதிக்கு சென்று கோஷம் போடுவதும், சபையை ஸ்தம்பிக்க வைப்பதும், சபையை நடத்த விடாமல் செய்வதையும் தனது வாடிக்கையாக கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தாங்கள் சபையில் உள்ள மற்றவர்களை விட உயர்ந்தவர்கள், ஒரு குடும்பத்தின் விசுவாசிகள், ஆகவே சட்டத்திற்கு மேம்பட்டவர்கள், அரசியல் சாசன விதிகளுக்கு கட்டுப்படாதாவர்கள் என்று தங்களை தாங்களே உயர்வாக கருதிக் கொள்வதன் விளைவே சபையை நடத்த விடாமல் செய்வதன் பின்னணியாகும்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேச்சை வைத்துக் கொண்டு பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் அவையின் கண்ணியத்தைக் குலைப்பதாக அவர் பேச்சு உள்ளது. ஆகவே பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டனக் குரல் எழுப்பினார்கள்..அப்படி இது போன்ற  பேச்சுக்களுக்கு மன்னிப்பு கேட்பதென்றால் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டியர்வர்கள் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் தான். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தியும் துணைத்தலைவரான ராகுல் காந்தியும் மோடி அவர்களை எப்படியெல்லாம் தனிப்பட்ட முறையில் விமர்சித்ததை அவர்கள் மறந்து விட்டார்கள் போலும்!
imageகாங்கிரஸ்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் மோடி அவர்களை மரண வியாபாரி என்று மிக மோசமாக வர்ணித்தார். அதுமட்டுமல்ல விஷ விதைகளை விதைப்பவர் என்றும் கூறியிருந்தார். இப்படிப்பட்ட கண்ணியமற்ற அநாகரிகமான வார்த்தைகளை முதன் முதலாக உபயோகித்து இந்த கலாச்சாரத்தை துவக்கியவர் சோனியா காந்தியாகும். தாயின் பாதையில் பயணித்த காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி இந்திய ராணுவ வீரர்களுக்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த உத்தரவு போட்டமைக்கு ரத்த வியாபாரி என்று மோடியை ஒரு கூட்டத்தில் விமர்சித்திருந்தார்.
தங்களுடைய தலைவர்களின் பாணியில் காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் மோடியை அநாகரிகமாக, அசிங்கமாக, கண்ணியக் குறைவாக பிரதமர் மோடியை விமர்சிக்க துவங்கினார்கள். காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் மோடியை வசை பாட பயன்படுத்திய அனாகரீகமான கண்ணியக்குறைவான வார்த்தைகளின் பட்டியல்:
பிரதமர் மோடி, முன்னாள் பிரதமரைப் பற்றி வேடிக்கையாக பயன் படுத்திய ரெயின் கோட் என்ற வார்த்தை கண்ணியக் குறைவான ஒன்றாம். அப்படியென்றால் கண்ணியம் மிக்க காங்கிரஸ் தலைவர்கள் இப்போதைய பிரதமரை தாக்க பயன் படுத்திய கண்ணியம் மிக்க வார்த்தைகளைப் பாருங்கள்:
திக் விஜய் சிங் : ராவணன்
மணிசங்கர் ஐயர்: எலும்பும் கூடுகளை தன் அலமாரியில் ( “Astya Ka Saudagar” -Merchant of skeletons) அடுக்கி வைத்திருக்கும் வியாபாரி
காங்கிரஸ் எம்பி ஹூசேன் தல்வால்: மோடி ஒரு எலி (“Modi is mouse”)
குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோதவாடியா: குரங்கு,வெறி நாய், மன நிலை சரியில்லாதவர் (“Monkey, Victim of rabies”, mentally retard,”)
காங்கிரஸ் தலைவர் ரிஸ்வான்: அப்பன் பெயர் தெரியாதவன், மோசமான நடத்தை கொண்டவன் என்ற பொருள் படும் ஆபாச வார்த்தை, உதவாக்கரை (Man with no father, Badtamiz, Nalayak”)
காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி: விஷக் கிருமி (Virus)
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்: ஆண்மை இல்லாதவன் (Impotent)
முன்னாள் அமைச்சர் பேனி பிரசாத் வர்மா: பைத்தியம் பிடித்த நாய், ரவுடி, மனிதனை சாப்பிடும் மிருகம் (Mad Dog”, goon, animal, man eater.)
காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்: (மோடி அவர்களின் ஜாதியை குறிப்பிடும்படியாக): ஆயில் மசாஜ் செய்பவர்(Gangu Teli” mocking Modi’s caste)
காங்கிரஸ் எம்பி சுரேந்திர சோம காந்த் பட்டேல்: காஞ்ச்சி என்று ஜாதியைக் கூறி இகழ்ந்தது (Ghanchi”casteist remark)
காங்கிரஸ் தலைவர் சசி தரூர்:  ரத்தம் கக்குபவர் (bleeder)
காங்கிரஸ் தலைவர் எம்பி ஷாந்தாராம் நாயக்: ஹிட்லர், (கம்போடியன் கம்யூனிஸ்ட் தலைவர் போல்போட் ) அடாவடித்தனமான ரவுடி) Hitler”, Pol pot
காங்கிரஸ் தலைவர் மனிஷ் திவாரி: தாவுது இப்ரஹீம்
காங்கிரஸ் தலைவர் பி கே ஹரிபிரசாத்: அழுக்கடைந்த மூட்டைப் பூச்சி (Gandi Nali Ka Kida” (dirty insect)
(நினைவிருக்கட்டும் இந்த வார்த்தைகள் காங்கிரஸ் தலைவர்களால் உதிரப்பட்டவை. இதைத் தவிர  சமஜ்வாடி, பி எஸ் பி ,கம்யூனிஸ்ட் போன்ற மிகப் பெரிய தலைவர்களும் இதே பாணியில் மோடியை “மரியாதையான” கண்ணியமான வார்த்தைகளால் புகழ்ந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
காங்கிரசின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் உபயோகித்துள்ள மரியாதையான கண்ணியமான நாகரிகமான வார்த்தைகளை படித்த பின்னர் மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள் யார் என்பதை முடிவு செய்யுங்கள். யார் கண்ணியக் குறைவானவர்கள், அநாகரீகமானவர்கள்,  தரம் தாழ்ந்தவர்கள், பாராளுமன்றத்திலிருந்து  தூக்கி எறியப்பட வேண்டியவர்கள்  யார் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
இது மட்டுமல்ல, மன்மோகன் சிங்கை அவருடைய கட்சியின் தலைவர் சோனியா காந்தி இழிவு படுத்தியது போன்று இன்னொருவர் இழிவு படுத்தி விட முடியாது. அடிமை போன்று நடத்தப்பட்டார். சோனியா காந்தி அவரை அடிமையாகவும், தரக்குறைவாக நடத்தியதற்கு பல விடீயோ ஆதரங்கள் உள்ளன.
imageராகுல் காந்தி தனது கட்சியின் ஆட்சியின் தலைவரான இந்த நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங் போட்ட ஒரு சட்ட முன்வரைவை, தான் யோக்கியன் என்று காண்பிப்பதற்காக பிரஸ் மீட்டில் நான்சென்ஸ் என்று கூறி கிழித்துப் போட்டு அவமானப்படுத்தியது கண்ணியக் குறைவான செயலல்ல போலும்.
பரவாயில்லை, இது இந்தியர்கள் அவமானப்படுத்தியது என்று வைத்துக் கொள்ளலாம். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப், மன்மோகன் சிங் அவர்களை கிராமத்துக்கார பொம்பளை (village woman) என்று வர்ணித்த போது இந்த காங்கிரஸ் பொறுக்கிகள் எங்கு போனார்கள்? அப்போதும் நாட்டின் பிரதமருக்கு ஆதரவாக கோஷம் போட்டது பாஜாகா தானே. ஆனால் இந்த வெட்கங்கெட்ட காங்கிரஸ் தலைவர்கள் அதன் பிறகு நவாஸ் செரிப்பிடம் கெஞ்சியதும்,அந்த நவாஸ் செரீப்புடன் சிக்கன் பிரியானி தின்னதும் மறக்க முடியுமா?
ஏன், ராகுல் காந்திக்கு இந்த சம்பவம் நாட்டிற்கு செய்யப்பட்ட அவமானம் என்று தோன்றவில்லை? இல்லை வெளிநாட்டு சுற்றுலாவில் மூழ்கியிருந்ததால் தெ(ளி)ரியவில்லையா?
இப்பொழுது காங்கிரஸ் தலைவர்கள் பாராளுமன்றத்தின் கண்ணியம் பற்றி பேசுகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் இவர்களுடைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பாஜாக தலைவர்களை நாய்கள் என்று பாராளுமன்றத்திற்குள் பேசினாரே, அப்போது அவையின் கண்ணியம் எங்கு போனது?
ராகுல் காந்தியும் அவருடைய அடிவருடிகளும் பிறரை தாக்கும் முன்னர், மன்னிப்பு கோரும் முன்னர் தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்வது நலம். காங்கிரசின் கலாச்சாரமும் கண்ணியமும் அனைவரும் அறிந்த ஒன்று!
ஆதாரம்:postcard,news

Advertisements

மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசா? பகுதி 3

April 29, 2015
ஆறு.தர்மபூபதி
Picture1டெஃஸ்ட்

கரியைக் கூட விட்டு வைக்காத காங்கிரஸ்?

மன்மோகன் பிரதமராக மட்டுமில்லை, நிலக்கரித்துறை அமைச்சராகவும் இருந்தார். அவருடைய பதவிக் காலத்தில் பெரும் கார்ப்பரேட் தொழிலதிபர்களுக்கு எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு விற்பனை செய்தார்.
download
அதனால் அரசுக்கு பல லட்சம்கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது ஏலம் முறையை பின்பற்றாமல்தகுதியற்ற நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி) கூறியது.இதையடுத்து இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தியது. முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டதால், சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 204 நிலக்கரி சுரங்கங்களின் உரிமத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து நிலக்கரி சுரங்கங்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்ய  நரேந்திர மோடி அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
ஒடிசாவில் உள்ள தலபிரா-2 சுரங்கம் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு முறைகேடாக ஒதுக்கப்பட்ட வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யும்படி அதன் தலைவர் குமாரமங்கலம் பிர்லா, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு கடிதம் எழுதியிருந்தார். அவரது பரிந்துரையின் பேரிலேயே இந்த சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக மன்மோகன் சிங்கிடம் சிபிஐ விசாரணை நடத்தும்படி டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ-1) ஆட்சிக்காலத்தில், கம்பெனி விவகாரங்கள் துறை இணை மந்திரியாக இருந்த பி.சி. குப்தா, தன் மகனின் நிறுவனத்துக்கு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு கிடைக்க தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியாக புகார் எழுந்தது. இதுபற்றி விசாரணை நடத்தி வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், தற்போது பி.சி.குப்தா மீதும் அவரது மகன் கவுரவ் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.காங்கிரசின் முக்கிய இளம் தலைவரும் பெரிய கார்ப்பரேட் தொழிலதிபருமான நவீன் ஜின்டால் மற்றும் நிலக்கரித்துறை ராஜாங்க மந்திரி தாசரி நாராயனராவும் ஊழலில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்[பட்டுள்ளது. நிலக்கரி ஊழலில் காங்கிரஸ் தனக்கு வேண்டியவர்களுக்கும் தங்களது மந்திரி சகாக்களுக்கும் கற்பனை பன்ன முடியாத மலிவான விலையில் ஒதுக்கீடு செய்துள்ளனர்.இந்த நிலக்கரி பேர ஊழல் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல்களில் சம்பந்தப்பட்ட சிலருடைய பெயர்களை நீக்குமாறு காங்கிரஸ் தலைமையிலான முன்னாள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தன்னை நிர்ப்பந்தம் செய்ததாக முன்னாள் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) வினோத் ராய் கூறியுள்ளார்
இப்படி கார்ப்பரேட்களே காங்கிரசின் மத்திய அரசில் மந்திரி பதவி பெற்று தனது குடும்பத்தினர்களுக்கும் வேண்டிய தொழிலதிபர்களுக்கும் மிகக் குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்து கொள்வார்கள். இந்த காங்கிரச் தான் ஏழைகளின் அரசு.அது மட்டுமல்ல சோனியாவிற்கும் இதில் பங்குள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் imagesநடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன்னாள் பிரதமரும் நிலக்கரித்துறை அமைச்சருமான மன்மோகன் சிங்கிற்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து நேற்று காலை கட்சியினருடன் புறப்பட்ட சோனியா காந்தி, முன் எப்போதும் இல்லாத வகையில் சில அடி தூரத்திலிருந்த மன்மோகன் சிங் வீட்டுக்கு பேரணியாக நடந்தே சென்றார். அங்கு மன்மோகன் சிங்கை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பல இக்கட்டான சூழ்நிலைகள் இருந்த போதும் கூட அவர் வீட்டிற்கு செல்லாத சோனியா மன்மோகன் சிங்க தன்னைக் காட்டிக் கொடுத்து விடுவாரோ என்ற பயத்தில் தான் அவருக்கு ஆதரவளிக்க சென்றதாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டதை மறுக்க முடியுமா? இந்த காங்கிரசின் கார்ப்பரேட் முதலைகள் தான் மோடியை கார்ப்பரேட் அரசு என்று சொல்கிறார்கள்.

மோடி அரசின் புதிய ஏல முறை

வெளிப்படையான் ஈ ஏல முறை காரணமாக கார்ப்பரேட்களிடையே ஏற்பட்ட போட்டிகாரணமாக அரசுக்கு ரூ ன்கு லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. மோடி அரசால் கார்ப்பரேட்களுக்கு போயிருக்கக் கூடிய
   
A-Tale-of-Two-Auctionscoal
வருவாய் அரசுக்கு அதுவும் அந்தந்த மாநில அரசுகளுக்கு கிடைத்துள்ளது. மோடி அரசு கார்ப்பரேட்களுக்கு ஆதரவான அரசு என்பது உண்மையாக இருந்தால் ஸ்பெக்ட்ரம் மற்றும் நிலக்கரி ஏலங்களை புதிய முறையில் வெளிப்படைத் தன்மையோடு ஏன் நடத்த வேண்டும்?

கார்ப்பரேட்களுக்கான அரசு என்றால் சிறு குறு தொழில்களை ஊக்குவிக்க ஏன் முத்ரா வங்கியை துவக்க வேண்டும்?

02mfi1முத்ரா வங்கி குறித்த அறிவிப்பை நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டார். தொடக்கத்தில் சிட்பி வங்கியின் துணை அமைப்பாக இந்த முத்ரா வங்கி தொடங்கப்படுகிறது. நாட்டில் மொத்தம் 5.77 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர ரகத் தொழில் நிறுவனங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்கி அவதிப்படாமல் நியாயமான வட்டி கிடைக்க வகை செய்வதற்காக முத்ரா வங்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறு, குறு தொழில்கள் அதிக வேலை வாய்ப்பை உருவாக்கும் துறையாகத் திகழ்வதால் எளிதில் கடன் பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்ரா வங்கிக்கு முதலீடாக ரூ.20 ஆயிரம் கோடி நிதியும், கடன் வழங்குவதற்காக ரூ.3 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் ஜேட்லி தெரிவித்திருந்தார்.
கடன் உதவித் திட்டங்களுக்கு சிஷு, கிஷோர், தருண் என பெயரிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் வரையிலான கடன் திட்டங்கள் சிஷு எனப்படும். ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்டு ரூ.5 லட்சம் வரையிலான கடன் திட்டங்கள் கிஷோர் எனப்படும். ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரையிலான கடன் திட்டங்கள் தருண் எனப்படும். பிரதம மந்திரி முத்ரா யோஜனா
CCEuD24WEAAqP32
திட்டத்தின் கீழ் இந்தக் கடன் உதவித் திட்டங்கள் அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் சிறு தொழில் உற்பத்தி நிறுவனங்கள், சிறிய வணிக கடைகள், பழம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள், சலூன், அழகு மையங்கள், வாகன ஓட்டிகள், நடைபாதை வியாபாரிகள், கைவினைக் கலைஞர்கள் ஆகியோர் பயன் பெறலாம். மகளிர் தொழில் முனைவோரும் இத்திட்டம் மூலம் கடன் பெறலாம் என்பது கவனிக்கத்தக்கது.

வெறும் அறிவிப்பல்ல……

mudra-bank-yojanaபட்ஜெட்டில் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டால் அதை நடை முறப்படுத்துவது என்பது காங்கிரஸ் ஆட்சியில் பகற்கனவாகவே இருக்கும். அனைத்தும் அறிவிப்போடுதான் நிற்கும். ஆனால் மோடி அரசு மார்ச் ஒன்றாம் தேதி பொது பட்ஜெட்டில் முத்ரா வங்கி குறித்து அறிவிக்கிறது.ஏப்ரல் முதல் வாரத்தில் முதல் வங்கி கிளை திறக்கப்படுகிறது. இதுவல்லவோ ஆளுமைத் திறன்.நல்லாட்சி. இப்படி பெரும் தொழில்களாக இருந்தாலும் சரி சிறு குறு தொழில்களாக இருந்தாலும் சரி தொழில் வளத்தை தாமதப்படுத்தாமல் பெருக்க வேண்டுமென்ற உத்வேகம் பிரதமர் மோடி அவர்களிடத்தில் காணப்படுகிறது. அதன் விளைவே இந்தத் திட்டங்களும் அவரது அணுகுமுறைகளும் நடைமுறைப்படுத்த காரணம்.

காங்கிரஸ் கட்சியின் உள் நோக்கம் தான் என்ன?

சோனியா காங்கிரஸ் மோடியின் ஆட்சியில் நல்ல திட்டங்களை தொடர அனுமதித்தால் காங்கிரசின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். ராகுல் images (1)பிரதமராகும் கனவு பகற்கனவாகி விடும். ஆகவே மோடியின் அனைத்து திட்டங்களையும் பொய் பிரச்சாரம் மூலமும் ராஜ்யசபாவில் பாஜாக அறுதிப் பெரும்பான்மை இல்லாதிருப்பதால் எதிர்கட்சிகளை ஒன்றினைத்து அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் முடக்குவதே அவர்களின் உள்நோக்கம். இதற்கு நாட்டில் உள்ள தன்னார்வ வெளிநாட்டு நிதி உதவி பெற்று இந்திய வளர்ச்சியை தடுக்க அந்நிய கைக்கூலிகளாக செயல்பட்டுவரும் என் ஜி ஒக்கள்,ஊடகங்கள்,கிருத்துவ மெசினிரிகள் என அனைத்து எதிர்ப்பாளர்களும் ஒன்றினைந்து இந்திய வளர்ச்சியை முடக்க முயலுகிறார்கள். காங்கிரஸ் தொடர்ந்து நல்ல திட்டங்களை எதிர்க்குமேயானால் இந்த நாட்டிற்கு செய்யும் மிகப் பெரிய துரோகமாகும். நடப்பது மோடி ஆட்சி. இவர்களை தக்க வழியில் பாஜாக அரசு எதிர்கொண்டு தடைகளை உடைத்து  வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை.
 
இப்போது சொல்லுங்கள்…….
காங்கிரஸ் அரசு கார்ப்பரேட் அரசா இல்லை
மோடி அரசு கார்ப்பரேட் அரசா?

மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசா? பகுதி 2

April 28, 2015
ஆறு.தர்மபூபதி

Picture1டெஃஸ்ட்

காங்கிரஸ் ஆட்சியில் கார்ப்பரேட்களுக்கு வாரி வழங்கியது 17 லட்சம் கோடி… அதில்  ரூ 2.04 லட்சம் கோடி தள்ளுபடி. 
தொழிலதிபர்களுக்காக இயங்கும் அரசு என்று காங்கிரசின் அரைவேக்காடு இத்தாலி மாஃபியா ராகுல் காந்தி திருவாய் மலர்ந்திருக்கிறார். அப்படியென்றால் காங்கிரஸ் கட்சி தொழிலதிபர்களை சந்தித்தது இல்லையா? வெளிநாடுகளுக்கு அவர்களை அழைத்து சென்றதில்லையா? உள் வெளி நாடுகளில்   தொழில் துவங்க தொழிலதிபர்களுக்கு ஊக்கம் காட்டவில்லையா ?   பல      காங்கிரஸ் அரசுகள் தொழிலதிபர்களை தங்கள் மாநிலத்தில் வந்து தொழில் தொடங்கும் படியும்     அனைத்து வசதிகளையும் செய்து  கொடுக்கிறோம் என்று  அறை கூவல்   விடுத்ததில்லையா? டாடா மேற்கு வங்கத்தில் தொழில் தொடங்க பகிரங்க ஆதரவை வழங்க வில்லையா?  தொழில் தொடங்குவதற்கு பல கார்ப்பரேட்  தொழில் அதிபர்களுக்கு விதி முறைகள் மீறி வங்கிகளை காங்கிரஸ் அரசு நிதி
unnamed (1)

FIRST  POST

கொடுக்கும்படி அரசு நிர்பந்திக்கவில்லையா? அதன் காரணமாக இந்தியன் வங்கி தலைவர் முறை கேடு காரணமாக சிறை தண்டனை பெற்றது நினைவில்லையா? காங்கிரஸ்  ஆட்சியில் கார்ப்பரேட் தொழிலதிபர்களுக்கு சுமார் ரூ 17 லட்சம் கோடி நிதி வழங்கி இன்றளவில் வாராக் கடனாக 1000 கோடிக்கு மேல் பெற்ற 433 பேரிடமிருந்து மட்டும் ரூ 78000 கோடி நிலுவையில் உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற தொழிலதிபர்கள். இவர்களிடமிருந்து ஆக்க பூர்வமாக நிலுவைகளை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத கார்ப்பரேட் ஆதரவு காங்கிரஸ் கட்சி 2001-க்கும் 2013-க்கும் இடையேயான 10 ஆண்டுகளில் ரூ 2.04 லட்சம் கோடி தள்ளுபடி செய்து கார்ப்பரேட்களுக்கு உதவியுள்ளது. ( தினமணி மே 7,2014) இவர்கள் தான் மோடி அரசைப் பார்த்து கார்ப்பரேட் அரசு என்கிறார்கள்..
குடும்ப ஆட்சியை மீண்டும் கொண்டுவர காங்கிரஸ் காணும் கனவு……
பாஜாக ஆட்சிக்கு வந்ததும் மோடி அரசு வந்த பிறகுதான் தொழிலதிபர்களுக்கு வாரி வாரி வழங்குவது போன்ற மாயையை உருவாக்க nehru-indira-rajiv-sonia-rahul-gandhi-garibi-hatao-poverty-dynasty-corruptionகாங்கிரஸ் முயலுகிறது. இந்த நிலுவைகளை வசூலிக்க வங்கிகள் பெருமளவில் முயற்சி எடுத்து வருகிறது. அதற்க்கான உத்தரவுகளை நிதியமைச்சகம் பிறப்பித்துள்ளது. தொழில்களை துவங்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் வங்கிகள் அந்த நிறுவனங்களின் நிதி ஆதாரங்களுக்கேற்ப கடன் வழங்குவது ஒன்றும் புதிதல்ல. வழக்கமான ஒன்று தான். அப்படி பிரதமர் மோடியின் தலையீட்டில் விதிமுறைகளுக்கு மீறி தொழிலதிபர்களுக்கு கடன் வழங்கப்பட்டிருப்பதற்கு ஆதாரமிருந்தால் தாராளமாக அதை வெளியிடலாமே தவிர, பொய்களை காங்கிரஸ் பரப்புவது அதன் நோக்கத்தை சந்தேகப்பட வைக்கிறது. காணாமல் போய்விட்ட காங்கிரஸ் இப்படியொரு பொய் பிரச்சாரத்தின் மூலம் மக்களின் செல்வாக்கைப் பெற்று விடலாம் என்று கனவு காண்கிறது.  ஆண்டு தோறும் நடக்கும் தொழிலதிபர்களின் கூட்டமைப்பில் அமைச்சர்கள் அரசியல் வாதிகள் கலந்து கொண்டு அவர்கள் சிரமத்தைப் போக்கவும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பேசி வருகின்றனர். மன்மோகன் ஆட்சியில் ராகுல் காந்தி கூட தொழிலதிபர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு கார்ப்பரேட் தொழில் அதிபர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளதை அவரால் மறுக்க முடியுமா?
வங்கிகடன் நிலுவை வைத்திருக்கும் கார்ப்பரேட்களுக்கு பத்மா விருது மற்றும் மத்திய அமைச்சர் பதவி வழங்கி ஊக்குவித்த காங்கிரஸ்
பெரும் கடன் தொகை நிலுவையில் வைத்துள்ள கார்ப்பரேட் தொழில் அதிபர்களுக்கு மன்மோகன் அரசு பத்மா விருது வழங்கும் அவலம்
unnamed

FIRST POST

3 Untitled

காங்கிரஸ் ஆட்சியைத் தவிர வேறு எங்காவது உண்டா? அது மட்டுமல்ல ஐந்து முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் மன்மோகன் ஆட்சியில் ஜவுளித்துறை அமைச்சராக பதவி வகித்த கே எஸ் ராவின் நிறுவனம் 351 கோடி நிலுவை வைத்துள்ளது. அந்த கார்ப்பரேட் தொழிலதிபர் மன்மோகன் சிங் காங்கிரஸ் அமைச்சரவையிலேயே பங்கு பெற்று ஆட்சி நடத்துகிறார். இப்போது சொல்லுங்கள் யாருடைய அரசு கார்ப்பரேட்களின் அரசு? இவர் மட்டுமல்ல பல தொழிலதிபர்கள் பங்கு பெற்ற ஆட்சி தான் காங்கிரஸ் அரசு என்பதை பின்னர் பார்ப்போம். மோடி அரசை கார்ப்பரேட்களின் அரசு என்று குற்றம் சாட்டுபவர்கள் கீழ் கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த பிரதமர் முயல்வது தவறா?
640x480xFrom-Zero-Loss-to-Infinite-Gain-2.jpg.pagespeed.ic.XiF183ebHC
நாட்டின் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த பிரதமர் முயல்வது தவறா?அந்நிய முதலீட்டைப் பெருக்க வெளிநாட்டு நிறுவனங்களை அழைப்பது குற்றமா? நாட்டில் வேலையில்லா  திண்டாட்டத்தைப் போக்க தொழிற் சாலைகள் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறுவது தேச விரோத செயலா? தொழில்வளம் மேம்பட அரசு உதவி செய்வது தவறான முன்னுதாரணமா? தொழிலதிபர்களை அரசு அழைத்து பேசுவது இது தான் முதல் முறையா? ஜனநாயக நாட்டில் தொழிலதிபர்கள் யாரும் இருக்கக் கூடாதா?
கடன் நிலுவை பட்டியலில் தொழிலதிபர் அதானி பெயர் இல்லையே!
தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க பிரதமர் மோடி அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை வைத்துக் கொண்டு கார்ப்பரேட்களுக்கு ஆதரவானவர் என்று எப்படி சொல்ல முடியும்? இவர்கள் அதானி என்ற தொழிலதிபரை மோடிக்கு நெருக்கமானவர் என்றும் அவருக்கு மோடி கடங்களை வாரி வழங்கியுள்ளார் என்றும் சிலர் எந்த ஆதாரமுமின்றி குற்றம் சாட்டுகின்றனர்? ஒரு தொழிலதிபர் அதானியாக அல்லது யாராக இருந்தால் என்ன? இந்த நாட்டில் தொழில் தொடங்கக் கூடாதா? அரசுகள் தொழிலதிபர்களை தங்கள் மாநிலத்தில் வந்து தொழில் தொடங்கும் படியும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம் என்று  அறை கூவல் விட்டு பிறகு நாட்டின் வளர்ச்சிக்கு மற்றவர்களை ஊக்குவிப்பது போல இவரை ஊக்குவித்திருந்தால் அதில் என்ன தவறு? அதானி வங்கிகளில் கடன் பெற்று நிலுவையில் உள்ள கார்ப்பரட் தொழிலதிபர்களின் பட்டியலில் அதானி பெயர் இல்லையே அது ஏன்? ஆனால் காங்கிரஸ் ஆதரித்த கார்ப்பரேட்கள் பெரும்பாலோனோர் ஏன் ஆயிரக் கோடிக்கணக்கில் நிலுவை வைத்துள்ளனர்? காங்கிரசார் பதில் சொல்லுவார்களா?
பூஜ்யத்தை கண்டுபிடித்தது அன்றைய இந்திய ரிஷிகள்…. பூஜ்ய இழப்பைக் கண்டுபிடித்தது இன்றைய காங்கிரஸ் கபில் சிபல்
2 ஜி ஊழல் பற்றி நாடே சிரித்தது நாம் மட்டுமல்ல உலகமே நம்மை எள்ளிநகையாடியது. மன்மோகன் சிங் தொலைத்தொடர்புத் துறையை தரகர் நீரா ராடியா மூலமாக தி மு காவிற்கு விற்றதும் அதில் ரூ 176000 கோடி ஊழல் செய்ததும் அதில் மன்மோகன் சிங்கிற்கும் பொறுப்பு உண்டு என்று 030212satishஇன்றளவும் ராஜா கூறி வருவது அனைவருக்கும் தெரிந்த விசயம். தற்போது ஏல முறையை மாற்றிய மோடி அரசுக்கு வருவாய் சுமார் ரூ லட்சத்து பத்தாயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைத்துல்லது. இதைத்தான் இன்னொரு கார்ப்பரேட் தொழிலதிபரும் அன்றைய அமைச்சருமான  கபில் சிபில் பூஜ்ய இழப்பு என்ற ஒரு புதிய சித்தாந்தத்தை பாரதத்திர்கு வழங்கினார்.மன்மோகன் தலைமையிலான அரசின் தொலைத்தொடர்பு அமைச்சர் ஏல விதிகளையெல்லாம் காற்றிலே விட்டு விட்டு கார்ப்பரேட்டுகளுக்கு மலிவு விலையில் கற்றைகளை வாரி வழங்கினார்.இப்படி கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்த காங்கிரஸ் இன்று மோடியைப் பார்த்து கார்ப்பரேட் அரசு என்று. காங்கிரசாருக்கு கொஞ்சமாவது வெட்கம் வேண்டாமா? இது மட்டுமா பெரிய கார்ப்பரேட்டான கலாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவி பெற்று தொலைதொடர்பு துறையையே தனது வீட்டின் தொடர்பு துறையாக மாற்றி இன்று நீதி மன்றத்திற்கு சென்று கொன்டிருப்பது யாருடைய ஆட்சியில்?

தொடரும்…..

மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசா? பகுதி 1

April 27, 2015
ஆறு.தர்மபூபதி
 Picture2
டெஃஸ்ட்பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாஜாக தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவு பெறப் போகிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே நரேந்திர மோடி தனது வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை என்று ஊடகங்களும் குறிப்பாக ஆங்கில ஊடகங்களும் அறுபது ஆண்டு காலம் இந்தியாவை ஆண்டு ஊழலில் திளைத்து குட்டிச் சுவராக்கி அதள பாதாளத்தில் வைத்து விட்டுப் போயுள்ள மூக்கறுபட்டுப் போயுள்ள சூர்ப்பனகையின் காங்கிரசிற்கு துதிபாடி பொய்களை பரப்பி வருகின்றனர். நரேந்திர மோடியின் தலைமையில் நாடுமுன்னேறி விடக் கூடாது என்பதில் முனைப்புடன் பாஜாக அரசுக்கு எதிர்ப்பான நிலைப்பாடு கொண்டு பண்ணாட்டு தன்னார்வ அமைப்புகளின் துணைகொண்டு ஊடகங்களும் எதிர்கட்சிகளும் பொய்களை பரப்பி வருகிறது. இவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அரசின் மீது கூறிவரும் சில பொய் குற்றச்சாட்டுக்கள்  என்ன என்று பார்ப்போம். முதலாவது……….
திறன்மிகு இந்தியாவை ஊழல் மிகு நாடாக்கிய காங்கிரசின் குடும்ப ஆட்சியை காணாமற் போக செய்த மக்கள் சக்தி…… 
மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசு.  சொல்வது யார்? அறுபது ஆண்டுகள் திறன்மிகு இந்தியாவை ஊழல் மிகு நாடு என்று முத்திரையை பதித்த காங்கிரஸ் கட்சி. உண்மையிலேயே மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசா? கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம். வெள்ளைய ஏகாதிபத்திய ஆட்சியில் 1935 ஆம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி 1937 இந்தியர்கள் பங்குகொள்ளும் வகையில் ஆறு மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்போதே ஊழல் காங்கிரஸ் ஆட்சியில் தலை விரித்தாடியது. அதைக் கண்டு மனம் நொந்த காந்திஜி அவர்கள்
“I would go to the length of giving the whole congress a decent burial, rather than put up with the corruption that is rampant.” — Mahatma Gandhi May 1939
என்று தனது மனக்குமறலை வெளிப்படுத்தினார். ஆக ஊழல் என்பது காங்கிரஸ் கட்சியின் ஏகாதிபத்திய அடிப்படை கொள்கை. ஆக இவர்கள் உள்னாட்டு கார்பரேட்டுகளை மட்டுமல்ல பன்னாட்டு கார்பரேட்டுகளின் அரசாகவும் காங்கிரஸ் கட்சி திகழ்ந்தது. காங்கிரஸ் ஏன் தூக்கி எறியப்பட்டது? என்ற கேள்விக்கு காங்கிரசார் முதலில் விடை கண்ட பிறகு மோடியை குறை கூற வேண்டும்.
 congress performance 2014
congress %காங்கிரசின் முதலாளித்துவ போக்கும் அறுபது ஆண்டுகளாக அனைத்து தேர்தல்களிலும் வறுமையை ஒழிப்போம் என்று கூறி தேர்தலை சந்தித்த ஒரே கட்சி காங்கிரஸ். இவர்களுடைய ஊழலும் மக்களை தொடர்ந்து ஏழைகளாகவே வைத்திருக்கும் போக்கும் ஒரே குடும்ப ஆட்சி காரணமாகவும் மக்கள் காங்கிரசை நிராகரித்தனர். அடுத்த தேர்தலின் போது அநேகமாக காங்கிரஸ் என்ற ஒரு கட்சி மாநிலக் கட்சியாக ஆகக்கூடும். அதைத் தடுக்கவும் சோனியாவின் குடும்ப ஆட்சி மலர வேண்டும் என்பதற்க்காகவும் மோடி ஆட்சியின் மீது பொய்களை பரப்பி வருகின்றனர். அதன் முதல் பொய் கார்ப்பரேட் அரசு.
ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறார்களா?
நரேந்திர மோடி அவர்கள் மீது கார்ப்பரேட் அரசு என்று கூறுவதற்கு இவர்கள் ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறார்களா? ஆதாரம் இருந்தால் அவர்கள் முதலில் வெளியிட்டிருக்க வேண்டும். கார்ப்பரேட்களுக்கு தவறான வழியில் மோடி உதவியிருந்தால் ஏன் வெளியிடவில்லை. இவர்கள் வைக்கும் முக்கிய குற்றசாட்டு மோடி அவர்கள் வெளிநாடு செல்லும்போதெல்லாம் தொழில் அதிபர்களை அழைத்து  செல்கிறார் என்றும் குறிப்பாக அதானி என்ற தொழில் அதிபரை அழைத்து செல்வதாகவும் அவரின் தொழில் வளம் பெற தனது செல்வாக்கைப் பயன்படுத்துகிறார் என்றும் பொய்கள் பரப்பப்பட்டு வருகிறது. அதானி ஒரு சாதாரண தொழிலதிபர் தான். வளர்ந்து வரும் தொழில் அதிபர். அவர் மோடியின் செல்வாக்கை தவறாக பயன் படுத்தி அரசிற்கு இழப்பை ஏற்படுத்தியிருந்தால் அது குற்றமே. அப்படியொரு குற்றச்சாட்டை ஆதாரத்துடன் காங்கிரஸ் ஏன் அம்பலப் படுத்தவில்லை? அவரை விட பலம் வாய்ந்த கார்ப்பரேட்கள் காங்கிரசின் ஆதரவாளர்கள்  என்பதை காங்கிரசால் மறுக்க முடியுமா?
இந்தியா வல்லரசாக வேண்டுமென்றால்…..
PM Modi launches
இந்தக் குற்றச்சாட்டுகளை ஆராயும் முன்னர், நமது நாடு வல்லரசாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் வல்லரசாகி விடுமா? ஒரு நாடு தொழில் வளம் கொண்ட நாடாக இருக்க வேண்டும். அந்நிய முதலீடுகள் குவிய வேண்டும். நிறைய தொழிற்சாலைகள் உருவாக வேண்டும். புதிய புதிய தொழில் நுட்பங்கள் அமல் படுத்தப் பட வேண்டும். நமது தயாரிப்புகள் உலக சந்தையில்   தரத்துடன் தயாரிக்கப்பட்டு இதர நாடுகளுடன் போட்டியிட்டு உலக சந்தையை கைப்பற்ற வேண்டும்.நாட்டின் உள்கட்டமைப்பு நவீனப்படுத்தப் பட வேண்டும் அப்பொழுது மட்டுமே மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வேலை வாய்ப்புகளை பெருக்க முடியும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். அப்படி என்றால் அந்த தொழில்கள் அனைத்துமே அரசால் முதலீடு செய்யப்பட்டு நடத்திட இயலுமா? என்றால் நிச்சயமாக இயலாது. ஒரு அரசாங்கம் அத்துனை தொழில்களிலும் முதலீடு செய்வதற்கு தேவையான நிதி ஆதாரம் இருக்காது. அது மட்டுமல்ல நாட்டின் அனைத்து வளர்ச்சிகளிலும் தனியார் பங்களிப்பின்றி அரசாங்கம் மட்டுமே பங்கு பெற வேண்டுமென்றால் நாட்டின் வளர்ச்சி பின்னோக்கித்தான் போகுமே தவிர முன்னேறி செல்ல முடியாது. தனியார் நிறுவனங்களின் ஆளுமைத்திறன் போன்று அரசுத் துறைகளில் எதிர்பார்க்க முடியாது. அரசாங்கம் ஒரு கட்டமைப்பின் வரையரைக்குள் தான் செயல்பட முடியும். அது மட்டுமல்ல அரசின் தலையாய கடமை அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவது தான்.
சோஷிலிசம் பேசிய சீனா இன்று……
சோஷிலிசம் பேசீய கம்யூனிஸ்ட் நாடான சீனா தனது கொள்கைகளை மாற்றிக் கொண்டதன் விளைவே சீனா வல்லரசு ஆனதிற்கு முக்கிய காரணம். அது மட்டுமல்ல சீன அரசு என்ன நினைக்கிறதோ அதை நடத்தும் சர்வாதிகார கம்யூனிஸ்ட் அரசு அங்கே நடைபெற்று வருகிறது எதிர்கட்சிகள் இல்லை. அப்படி யாராவது அரசை எதிர்த்துப் பேசினால் அடுத்த நாள் அவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்பது தான் அவர்களது அணுகுமுறை. கொள்கைகள் தவறாக இருந்தால் கூட ஆட்சியாளர்கள் அவர்களுக்கு இருக்கும் சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி சீனாவை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்தியாவின் வளர்ச்சியை எதிர்க்கும் காங்கிரசும் அதன் கூட்டாளிகளும்…..
Picture1ஆனால் இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. பல எதிர்கட்சிகள் கொண்ட நாடு. அதிலும் வெளிநாட்டு சக்திகள் பல அரசியல் கட்சிகளில் ஊடுருவி இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடுவதில் முனைப்பாக இருக்கிறது. காங்கிரசும் அதற்கு விதி விலக்கல்ல. இவர்களுக்கு பக்கபலமாக வெளிநாட்டு நிதி உதவிகளோடு செயல்படும் மனித உரிமைகள், சுற்றுப்புற ஆர்வலர்கள், மதச்சார்பற்ற அமைப்புகள், பெண்னுரிமை, பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் இயங்கும் தன்னார்வ அமைப்புகள் அதற்கு இணையாக ஊடகங்கள் என இந்தியாவின் வளர்ச்சியை எதிர்க்கும் பல்வேறு சக்திகள் கொண்ட நாடு இந்தியா. இத்தனை எதிர்ப்புகளையும் ஜனநாயக முறையில் சந்தித்து இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது இமாலயப் பணி என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆக மோடியை எதிர்த்துக் கூக்குரல் போடுபவர்கள் அனேகமாக இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம் அரசின் செயல் பாடுகள் தவறாக இருக்கும் பட்சத்தில் அதை ஆணித்தரமாக ஆதாரபூர்வமாக வெளியிட்டு எதிர்த்தால் அது உண்மையான ஜனநாயக கடமை ஆகும். ஆனால் மோடி எதிர்ப்பாளர்கள் அப்படி செய்யாமல் பொய்களை மட்டுமே பரப்பி வருவது உள்நோக்கம் கொண்டது  என்பதை யாராலும் மறுக்க இயலாது. இதுவரை எதிர்க்கட்சிகள் சில செய்திகளையும் ஊகங்களையும் வைத்துக் கொண்டே அரசை எதிர்த்து வருகின்றது என்பதே நிதர்சனமான உண்மை.
தொடரும்…..
 

காங்கிரஸ் இல்லாத பாரதம்……..

November 27, 2014
ஆறு.தர்மபூபதி
congress flag635113-03-2014-07-42-99N
பாராளுமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சி, தற்போது கட்சிக்குள்ளேயே பெரும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக காந்திகளின் தலைமை மாற்றப்பட்டால் தான் காங்கிரசிற்கு எதிர்காலம் இல்லையேல் காங்கிரஸ் கட்சி கனவாகி விடும் என்று பலர் கருதுகின்றனர். இதன் காரணமாக காங்கிரசிலிருந்து பலர் வெளியேறுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தி அலையாக மாறி வருவதாகவும் இதனால் காங்கிரஸ் கூடாரம் களையிழந்து வருவதாகவும், பலர் காங்கிரசிலிருந்து வெளியேறக்கூடும் என செய்திகள் பத்திரிகைகள் வாயிலாக வெளிவந்துள்ளது. வெள்ளையர்களால், வெள்ளையர்கள் ஆட்சியின் நலனுக்காக துவங்கப்பட்ட 128 ஆண்டுகால காங்கிரசிற்கு ஏன் இந்த நிலை?
150px-A_O_Humeசுதந்திரம் அடைந்தவுடன் மகாத்மா காந்தி அவர்கள் காங்கிரசைக் கலைக்க சொன்னார். காரணம் காங்கிரசின் நோக்கம் நடந்தேறி விட்டது. அதுமட்டுமல்ல இனியும் காங்கிரஸ் தொடர்ந்தால் பதவி, லஞ்சம், ஊழல் போன்றவைகள் அதன் தலைவர்களை ஆட்டிப் படைக்கும் என்று கருதினார். ஆனால் காங்கிரஸ் கலைக்கப்படவில்லை. மாறாக அதன் தலைவர்களுக்கு பதவி ஆசை பித்துப் பிடித்தது போன்று ஆகிவிட்டது. அதற்காக தேசிய கொள்கைகளை அடகுவைத்துவிட்டு, வாக்குவங்கி அரசியல் ஆரம்பித்தனர். தேசத்தை விட வாக்குவங்கி மட்டுமே நம்மை வளர்த்தும் என்ற புதிய சித்தாந்தம் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரமாகியது. விளைவு பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்ததன் விளைவு நாடெங்கும் லஞ்ச லாவண்யமும் போலி மதச்சார்பின்மையும் கடலென பெருக்கெடுத்து ஓடியது. பதவிக்காக தலைவர்கள்  கூட்டம் காங்கிரசை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. விளைவு போட்டிகள் கட்சிக்குள்ளேயே ஆரம்பமானது. பதவி கிடைக்காதவர்கள் காங்கிரசை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கினர்.
காங்கிரஸ் பலமுறை உடைந்து உடைந்து இன்று மண்டை ஓடாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி பாரதம் சுதந்திரம் பெற்ற பிறகு சுமார் 58 முறை உடைந்துள்ளது. காங்கிரசின் தனித்துவம் போனதால் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் திட்டமிட்டது. அப்போது கிடைக்கும் சில வெற்றிகளால் தனி  காட்சி ஆரம்பித்தவர்கள் பதவிக்காக தனது கட்சிகளை இணைப்பதும் பிறகு வெளியேறுவதும் அதன் அடிப்படை சித்தாந்தமாக உருவெடுத்தது. காரணம் இவர்களுக்குள் கொள்கைகளில் வேறுபாடு இல்லை. பதவி, அதிகாரம், லஞ்சம், ஊழல் போட்டியில் வெற்றி பெறுபவர் தொடர்வதும் வெளியேறுவதும் காங்கிரசில்  வாடிக்கை ஆனது. 
 காங்கிரஸ் எப்படி சிதறியது!
 1. 1951ஆம் வருடம் ஜிவிதரம் கிருபாளினி என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி அன்றைய மைசூர் சென்னை டெல்லி மற்றும் விந்திய பிரதேசத்தில் கிசான் மஸ்தூர் பிரஜா என்ற கட்சியை துவக்கினார்.
 2. 1951ஆம் வருடம் பிரகாசம் ரங்கா என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி அன்றைய ஹைதராபாத் மாநிலத்தில் ஹைதராபாத் மாநில பிரஜா என்ற கட்சியை துவக்கினார்.
 3. 1956ஆம் வருடம் ராஜாஜி என்று அழைக்கப்பட்ட ராஜகோபாலாச்சாரி அவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறி சென்னை மாகாணத்தில் இந்திய தேசீய ஜனநாயக காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.
 4. 1959ஆம் வருடம் என்.ஜி.ரங்கா என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ராஜாஜி அவர்களுடன் பீகார் ராஜஸ்தான், குஜராத், ஒரிஸ்ஸா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் ஸ்வதந்திரா பார்ட்டி என்ற கட்சியை துவக்கினார்.
 5. 1964ஆம் வருடம் கே.எம்.ஜார்ஜ் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி கேரளா பிரதேசத்தில் கேரளா காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.
 6. 1966 ஆம் வருடம் ஹரேகிருஷ்ண மஹாதாப் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஒரிஸ்ஸா ஜன காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.
 7. 1967ஆம் வருடம் இந்திரா காந்தி காங்கிரசிலிருந்து வெளியேறி தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ்(ஆர்) என்ற கட்சியை துவக்கினார்.
 8. 1967 ஆம் வருடம் சரன்சிங் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி உத்திரபிரதேச மாநிலத்தில் பாரதீய கிரந்தி தள் என்ற கட்சியை துவக்கினார்.
 9. 1967 ஆம் வருடம் அஜய்கோஷ் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி மேற்கு வங்க மாநிலத்தில் வங்க காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.
 10. 1968ஆம் வருடம் முகமத் அலாவுதீன் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி மணிப்பூர் மாநிலத்தில் மணிப்பூர் பீப்ல்ஸ் பார்ட்டி என்ற கட்சியை துவக்கினார்.
 11. 1969 ஆம் வருடம் பெரும்தலைவர் காமராஜர் மற்றும் மொரார்ஜி தேசாய் என்ற தலைவர் இந்தியா முழுதும் ஸ்தாபன காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.
 12. 1969 ஆம் வருடம் பிஜுபட்நாயக் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஒரிஸ்ஸா மாநிலத்தில் உத்கல் காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.
 13. 1969ஆம் வருடம் எம். சென்னா ரெட்டி என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் தெலிங்கானா பிரஜா சமிதி என்ற கட்சியை துவக்கினார்.
 14. 1977 ஆம் வருடம் ஜகஜீவன்ராம் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி தேசீய அளவில் ஜனநாயகத்திற்க்கான காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.
 15. 1978 ஆம் வருடம் தேவராஜ் அர்ஸ் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி கர்னாடகா, கேரள, மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் இந்திய தேசீய காங்கிரஸ்(அர்ஸ்) என்ற கட்சியை துவக்கினார்.
 16. 1981 ஆம் வருடம் சரத்பவார் என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி கர்னாடகா, கேரள, மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் இந்திய தேசீயவாத காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.
 17. (மறுபடியும் காங்கிரசில் இணைந்த) ஜகஜீவன்ராம் என்ற தலைவர் 1981 ஆம் வருடம் மீண்டும் காங்கிரசிலிருந்து வெளியேறி பீகார் மாநிலத்தில் இந்திய தேசீய காங்கிரஸ்(ஜகஜீவன்ராம் என்ற கட்சியை துவக்கினார்.
 18. 1984 ஆம் வருடம் சரத் சந்திர சின்ஹா என்ற தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி அஸ்ஸாம் மாநிலத்தில் இந்திய காங்கிரஸ் (சோசிலிஸ்ட்) சரத் சந்திர சின்ஹா என்ற கட்சியை துவக்கினார்.
 19. 1986ஆம் வருடம் பிரனாப் முகர்ஜி (இன்றைய ஜனாதிபதி) காங்கிரசிலிருந்து வெளியேறி மேற்கு வங்க மாநிலத்தில் ராஷ்ற்றீய சமஜ்வாடி காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினார்.
 20. 1988ஆம் வருடம் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழகத்தில் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை துவக்கினார்.
 21. 1994 ஆம் வருடம் என்.டி.திவாரி, அர்ஜுன்சிங், நட்வர்சிங் ஆகிய தலைவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறி உத்திரப்பிரதேசத்தில் அகில இந்தியா இந்திரா காங்கிரஸ்(திவாரி) என்ற பெயரில் கட்சியை துவக்கினார்.
 22. 1994ஆம் வருடம் பங்காரப்பா என்ற கர்னாடகா காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி கர்னாடகா காங்கிரஸ் என்ற கட்சியை கர்னாடகாவில் துவக்கினார்.
 23. (மறுபடியும் காங்கிரசில் இணைந்த) பங்காரப்பா மீண்டும் காங்கிரசிலிருந்து வெளியேறி 1996ஆம் வருடம் கர்னாடகா விகாஸ் கட்சி என்ற கட்சியை கர்னாடகாவில் துவக்கினார்.
 24. 1996ஆம் வருடம் ஜியாங்க் அபங்க் என்ற அருனணாச்சலப்பிரதேச காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி அருணாச்சல காங்கிரஸ் என்ற கட்சியை அருணாச்சலப் பிரதேசத்தில் துவக்கினார்.
 25. 1996ஆம் வருடம் ஜி.கே மூப்பனார் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழ்மாநில காங்கிரஸ் என்ற கட்சியை தமிழகத்தில் துவக்கினார்.
 26. 1996ஆம் வருடம் மாதவராவ் சிந்தியா என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி மத்தியப் பிரதேச விகாஷ் காங்கிரஸ் என்ற கட்சியை மத்தியப் பிரதேசத்தில் துவக்கினார்.
 27. 1997ஆம் வருடம் மம்தா பானர்ஜி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஆல் இந்தியா திரிணாமூல் காங்கிரஸ் என்ற கட்சியை மேற்கு வங்கத்தில் துவக்கினார்.
 28. 1997ஆம் வருடம் வாழப்பாடி ராமமூர்த்தி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ் காங்கிரஸ் என்ற கட்சியை தமிழகத்தில் துவக்கினார்.
 29. 1998ஆம் வருடம் ஃப்ரான்சிஸ் டி ஸ்யூஸ் என்ற கோவா காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி கோவா ராஜிவ் காங்கிரஸ் என்ற கட்சியை கோவாவில் துவக்கினார்.
 30. 1998ஆம் வருடம் முகுந்த் மிதி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி அருணாச்சல காங்கிரஸ்(மிதி) என்ற கட்சியை அருணாச்சலப் பிரதேசத்தில் துவக்கினார்.
 31. 1998ஆம் வருடம் ஸிஸ்ராம் ஓலா என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி அகில இந்திய இந்திரா காங்கிரஸ்(செகுலர்) என்ற கட்சியை ராஜஸ்தானில்  துவக்கினார்
 32. 1998ஆம் வருடம் சுரேஷ் கல்மாடி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி மஹாராஷ்டிரா விகாஸ் ஆகதி என்ற கட்சியை மஹாராஷ்டிராவில்   துவக்கினார்
 33. 1999ஆம் வருடம் ஜகன்னாத் மிஸ்ரா என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி பாரதிய ஜன் காங்கிரஸ் என்ற கட்சியை பீகாரில்   துவக்கினார்
 34. 1999ஆம் வருடம் சரத்பவார், சங்மா, தாரிக் அன்வர் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸ் என்ற கட்சியை மஹராஷ்டிரா, பீகார், மேகாலயா கேரளா ஆகிய மாநிலங்களில் துவக்கினார்
 35. 2000ஆம் வருடம் ஃப்ரான்சிஸ் சர்தின்ஹா என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி கோவா பீப்ல்ஸ் காங்கிரஸ் என்ற கட்சியை கோவாவில்   துவக்கினார்
 36. 2001ஆம் வருடம் பி.சிதம்பரம் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற கட்சியை தமிழகத்தில்  துவக்கினார்
 37. 2001ஆம் வருடம் குமரி அனந்தன் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி தொண்டர் காங்கிரஸ் என்ற கட்சியை தமிழகத்தில்  துவக்கினார்
 38. 2001ஆம் வருடம் கண்ணன் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ்  என்ற கட்சியை புதுச்சேரியில்   துவக்கினார்
 39. 2002ஆம் வருடம் ஜம்புவந்தரே தொட்டே என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி விதர்ப்பா ஜனதா காங்கிரஸ் என்ற கட்சியை மஹாராஷ்டிராவில்    துவக்கினார்
 40. 2002ஆம் வருடம் ஷேக் ஹாசன் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி இந்திய தேசிய காங்கிரஸ் (ஷேக் ஹாசன்) என்ற கட்சியை கோவாவில் துவக்கினார்
 41. 2003ஆம் வருடம் கமெங்க் டோலோ என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி காங்கிரஸ் (டோலோ) என்ற கட்சியை அருணாச்சலப்பிரதேசத்தில் துவக்கினார்
 42. (மறுபடியும் காங்கிரசில் இணைந்த) பி.கண்ணன் என்ற காங்கிரஸ் தலைவர் மீண்டும் 2005ஆம் வருடம் காங்கிரசிலிருந்து வெளியேறி புதுச்சேரி மாநில காங்கிரஸ் என்ற கட்சியை புதுச்சேரியில் துவக்கினார்
 43. 2005ஆம் வருடம் கே.கருணாகரன் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி டெமாக்கிரேட் இந்திரா காங்கிரஸ் என்ற கட்சியை கேரளாவில் துவக்கினார்
 44. 2007ஆம் வருடம் பஜன்லால் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஹரியானா ஜந் ஹித் காங்கிரஸ் (பஜன்லால்) என்ற கட்சியை ஹரியானாவில்  துவக்கினார்
 45. 2007ஆம் வருடம் பஜன்லால் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஹரியானா ஜந் ஹித் காங்கிரஸ் (பஜன்லால்) என்ற கட்சியை ஹரியானாவில்  துவக்கினார்
 46. 2007ஆம் வருடம் அந்தோனி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி காங்கிரஸ் (அந்தோனி) என்ற கட்சியை கேரளாவில்  துவக்கினார்
 47. 2007ஆம் வருடம் சுக்ராம் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஹிமாச்சல் விகாச் காங்கிரஸ் என்ற கட்சியை ஹிமாச்சல் பிரதேசத்தில்   துவக்கினார்
 48. 2008ஆம் வருடம் பன்சிலால் என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஹரியான விகாஸ் பார்ட்டி என்ற கட்சியை ஹரியானாவில்  துவக்கினார்
 49. 2008ஆம் வருடம் வாங்க்பாம், நிபம்சா சிங் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள்  காங்கிரசிலிருந்து வெளியேறி மணிப்பூர் ஸ்டேட் காங்கிரஸ் பார்ட்டி என்ற கட்சியை மணிப்பூரில்  துவக்கினார்
 50. (மறுபடியும் காங்கிரசில் இணைந்த) வாழப்பாடி ராமமூர்த்தி என்ற காங்கிரஸ் தலைவர் 2008ஆம் வருடம் மீண்டும் காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழக ராஜிவ் காங்கிரஸ் என்ற கட்சியை தமிழகத்தில் துவக்கினார்.
 51. ஆல் இந்திய ராஜிவ் கிரந்திகரி காங்கிரஸ் துவக்கப்பட்டது. சரியான விபரம் கிடைக்கப்பெறவில்லை.
 52. பாரதீய ராஜிவ் காங்கிரஸ் துவக்கப்பட்டது. சரியான விபரம் கிடைக்கப்பெறவில்லை.
 53. குஜராத் ஸ்டேட் ஜனதா காங்கிரஸ் துவக்கப்பட்டது. சரியான விபரம் கிடைக்கப்பெறவில்லை.
 54. 2009ல் சோமேந்திர நாத் மிஸ்ரா என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி பிரகதிசீல் இந்திரா காங்கிரஸ் (பி ஐ பி) என்ற கட்சியை மேற்குவங்கத்தில் துவக்கினார்
 55. 2011ல் ஒய் எஸ் ஆர் ஜெகன் மோகன் ரெட்டி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் என்ற கட்சியை ஆந்திரப் பிரதேசத்தில் துவக்கினார்
 56. 2011ல் என் ரெங்கஸ்வாமி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி என் ஆர் காங்கிரஸ் என்ற கட்சியை புதுச்சேரியில் துவக்கினார்
 57. 2014ல் என் கிரன்ரெட்டி என்ற காங்கிரஸ் தலைவர் காங்கிரசிலிருந்து வெளியேறி ஜெய் சம்க்கிய ஆந்திரா என்ற கட்சியை ஆந்திராவில் துவக்கினார்
 58. (மறுபடியும் காங்கிரசில் இணைந்த) ஜி கே வாசன் என்ற காங்கிரஸ் தலைவர் 2014ஆம் வருடம் மீண்டும் காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை தமிழகத்தில் துவக்கினார்.
குறிப்பு: நமக்குத் தெரிந்த வகையில் 58 கட்சிகள் காங்கிரசிலிருந்து பிரிந்து, சில கட்சிகள் மீண்டும் காங்கிரசில் இணைந்து மறுபடியும் காங்கிரசிலிருந்து பிரிந்து பல கட்சிகள் உருவாகியது.
காங்கிரசின் வீழ்ச்சி
1951-1957 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு 48 சதவீதம் ஆகும்.அது படிப்படியாக குறைந்து 2014 ல் 19% மாக குறைந்துவிட்டது.
congress %
அதேபோன்று இன்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள்:
வடகிழக்கு மாகாணங்களான அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலாயா, மிஷோராம், ஹிமாச்சல பிரதேசம், மற்றும் தென்னிந்தியாவில் கர்னாடகா ஆகிய மாநிலங்களில் தனிப் பெரும்பான்மையுடனும் வடகிழக்கு மாகாணங்களான  அஸ்ஸாம், உத்தரகாண்ட் மற்றும் தென்னிந்தியா மாநிலமான கேரளா மாநிலங்களில் கூட்டணியுடனும் ஆட்சி புரிந்து வருகிறது.
ஆக மொத்தத்தில் காங்கிரஸ் கட்சி வடகிழக்கு மாநிலங்களான சிறிய பரப்பளவுகளைக் கொண்ட மானிலங்களில் ஆட்சி புரியும் கட்சியாக உள்ளது. அதில் கூட கூட்டணியாக ஆட்சி புரிவது அந்தக் கட்சியின் பரிதாப நிலையை உணர்த்துவதாக உள்ளது. இதற்கான முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சி நேரு இந்திரா காந்தியின் குடும்ப கட்சியாக மாறியதன் விளைவே ஆகும்.
மாநிலங்கள்    மக்கள் தொகை    நாட்டில் உள்ள மக்கள் தொகையில் சதவீதம்
கர்னாடகா      61,130,704           (5.05%)
கேரளா         33,387,677           (2.76%)
ஜார்கண்ட்      32,966,238           (2.72%)
அஸ்ஸாம்     31,169,272           (2.58%)
உத்தரகாண்ட்   10,116,752           (0.84%)
ஹிமாச்சல்      6,856,509           (0.57%)
மேகாலாயா      2,964,007           (0.24%)
மணிப்பூர்        2,721,756           (0.22%)
அருணாச்சல்    1,382,611            (0.11%)
மிசோராம்       1,091,014            (0.09%)
இந்திய ஜனத்தொகையில் 120 கோடியில் சுமார் 15% பேர் கொண்ட மக்கள் தொகையை ஆளும் கட்சியாக காங்கிரஸ் சரிந்து விட்டது. வடகிழக்கு மாநிலங்களில் கிருத்துவ மெசினரிகளின் வகுப்புவாத அரசியலை காங்கிரஸ் மேற்கொண்டதால் அந்த மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மூன்று அல்லது நான்காம் இடங்களில் உள்ளது அதனுடைய அழிவின் விளிம்பில் உள்ளதை தெளிவாக்குகிறது.
Sonia Gandhi Kerala slams BJP_0
பிரிட்டிஷ்காரரால் துவக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி இத்தாலி தலைவர் சோனியா காங்கிரஸ் கட்சியின் இறுதி அத்தியாயத்தின் இறுதிப்பகுதியை எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதே நிதர்ச்னமான உண்மை.
வரப்போகிற தேர்தல்களின் மூலம் பாஜாகா காணும் காங்கிரஸ் இல்லாத பாரதம் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவும் சீனாவும்………

November 2, 2014
தர்மபூபதி ஆறுமுகம்
பாரத நாட்டை அறுபது ஆண்டுகளாக ஆண்ட காங்கிரஸ் அரசால் தேசபாதுகாப்பு குறித்து எந்த தொலை நோக்குப் பார்வையுமின்றி கையாளப்பட்டு வந்த வெளியுறவுக் கொள்கைகளாலும் அவர்களால் போடப்பட்ட ஒப்பந்தங்களாலும் இன்றைக்கு இந்தியாவின் எல்லை நாடுகளெல்லாம் நமக்கு தொல்லை நாடுகளாகி விட்டன. குறிப்பாக பாகிஸ்தான், சீனா, இலங்கை ஆகிய நாடுகள் நமக்கு வேண்டுமென்றே பெரும் தொல்லைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலை குறித்து சற்று பின்னோக்கி நமது வரலாற்றைப் பார்த்தால் உண்மைகள் விளங்கும்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு, மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் ஆகியோரின் அணுகுமுறை, ராணுவத்தை அலட்சியப்படுத்ததையும் பாதுகாப்பு படைகளிடம் ஒழுக்க சிதைவையும் ஏற்படுத்தியது, இவர்களின் அணுகுமுறையே 1962ல் தேசீய அவமான சம்பவமான சீனப்போருக்கு வழி வகுத்தது என்று சொன்னால் மிகையாகாது.
imagesவரலாறை நன்கு அறிந்தவர்களுக்கு புரிந்திருக்கும். 1962ல் நடந்த தேசீய அவமான சம்பவமான சீன போரின் போது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பதிலாக நேருவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோனிக்கு பதிலாக கிருஷ்ணமேனனும் தவியிலிருந்தது ஒன்று தான் வித்தியாசம் என்பது அனைவருக்கும் விளங்கும். 1959ல், காஷ்மீரை காத்தவர் என்று புகழப்பட்ட ராணுவத் தளபதி திம்மையா அவர்கள், அப்போதைய பிரதமர் ஜவர்கலால் நேருவிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ண மேனனின் போக்கைக் கண்டித்து தனது ராஜினாமாவை கொடுத்தார். காரணம் ராணுவத்தை பலப்படுத்தவும், எதிர்காலங்களில் வரும் போர் அபாயங்களை (1962 சீன போர்) தடுக்கவும் தான் வகுத்தளித்த திட்டங்களை ஏற்க மறுத்ததுமே காரணமாகும். பிறகு நேருவின் வற்புறுத்தலுக்கு பிறகு தனது ராஜினாமாவை ராணுவத் தளபதி திம்மையா அவர்கள் திரும்ப பெற்றுக் கொண்டார். ஆனால் நேரு, தளபதி திம்மையா அவர்களுக்கு உறுதியளித்தபடி ராணுவத்தை பலப்படுத்த எந்த நடவடிக்கையையும் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் எடுக்கவில்லை. சிறிய நடவடிக்கைகள் கண்துடைப்பாக எடுக்கப்பட்டது. ராணுவத்தளபதி திம்மையாவும் சிறிது காலத்தில் ஓய்வு பெற்றார். அதன் விளைவு தான் இந்திய சீன போர். அதன் முடிவு இந்தியாவிற்கு தோல்வி மட்டுமல்ல, பெருத்த அவமானத்தையும் தேடித்தந்தது.
ராணுவத் தளபதி திம்மையா அவர்களின் பதவிக்காலம் முடிந்ததும், ராணுவத் தளபதி திம்மையா அவர்களின் ராணுவத்தை பலப்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் பிரதமர் நேருவாலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் அவர்களாலும் புறக்கணிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. ராணுவத்தளபதி திம்மையா அவர்கள் தளபதி தொரட் என்பவரை புதிய ராணுவத்தளபதியாக நியமிக்கும்படி பரிந்துரை செய்தார். ஆனால் நேருவும் கிருஷ்ணமேனனும் அவருடைய பரிந்துரையை நிரகரித்தது மட்டுமல்ல, பிரான் நாத் தாப்பர் என்பவரை புதிய தளபதியாக நியமிக்க முடிவெடுத்தனர். தொரட் வீரம் மிக்க போராடும் குணம் கொண்ட போராளி ஆவார்.. ஆனால் தாப்பர் அரசியல் தொடர்பு கொண்டவர். நேருவிற்கு (திருமண சம்பந்த மூலம்) உறவினர் ஆவார். (சரித்திர ஆராய்ச்சியாளர் ரொமிலா தாப்பர் இவருக்கு மாமா ஆவார். தற்போதைய தொலைகாட்சி புகழ் கரன்தாப்பர் அவர்களின் தந்தையும் ஆவார்.) குடும்ப உறவுகளின் வலிமை எப்படிப்பட்டது என்பது இப்போது அனைவருக்கும் புரியும். இதேபோன்று அரசியல் தொடர்பு கொண்ட பிரிஜ் மோகன் கவுல் பிரச்சனைகள் நிறைந்த வடகிழக்கு எல்லை தளபதியாக நியமிக்கப்பட்டார். 1962 சீன போரின்போது, கவுல் போர்க்களத்திலிருந்து ஓடி, டெல்லி மருத்துவ மனையில் சிகிச்சை என்ற பெயரில் தானே சேர்ந்து ஒளிந்து கொண்டு, சரித்திரத்தில் அழியாத அபகீர்த்தியை சம்பாதித்துக் கொண்டவர். ஆக நேருவும், கிருஷ்ணமேனனும் நியமித்த அரசியல் தொடர்பு கொண்டவர்களின் தகுதியால் நாடு எப்படி பெரும் அவமானத்தைச் சந்தித்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
 நேருவிற்கும், கிருஷ்ணமேனனுக்கும் இந்திய தேசத்தின் பாதுகாப்பில் ஆர்வம் இருக்கவில்லை. இவர்கள் தங்களை இந்தியாவின் பாதுகாவலர்களாக நினைத்துக் கொள்ளவில்லை. ஆனால், மாறாக உலகிற்கு தாங்கள், யுடோபியன் கருத்துக்களை போதிக்கும் ஒரு களமாக இந்தியாவைக் காட்ட முனைந்தனர். (யுடோபியா  ஒரு சரியான  அரசியல் சட்ட அமைப்பு (socio-politico-legal system) கொண்ட ஒரு இலட்சிய மக்கள் சமூகம்.  1516ல் தாமஸ் மோர் என்பவர், தான் எழுதிய யுடோபியா என்ற புத்தகத்தில் இந்த கிரீக் வார்த்தையை பயன் படுத்தினார்.)  எல்லாவற்றிற்கும் மேலாக சர்வதேச அளவில்  தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதிலேயேயும், மேற்கத்தியர்களை ஈர்க்கும் முயற்சிகளிலேயேயும்  நேரு மிகுந்த ஆர்வம் காட்டினார். 1948ல் தளபதி திம்மையா அவர்களின் ஆலோசனைகளை புறந்தள்ளிவிட்டு, பிரதமர் நேரு காஷ்மீர் பிரச்சனையை ஐக்கியநாட்டு சபைக்கு கொண்டு சென்றார். அதன் விளைவை இன்றளவும் நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம் ராணுவத்தளபதி கரியப்பா அவர்களின் வடகிழக்கு எல்லையோரங்களில் ராணுவத்தை பலப்படுத்த உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்ற திட்டத்தையும் பிரதமர் நேரு நிராகரித்தார்.
ஐக்கியநாட்டு சபை தொடங்கப்பட்டபோது, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் வழங்க முன்வந்தது குறித்து நமது மக்களுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. (இப்போது இந்த நிரந்தர இடத்திற்கு பிச்சை கேட்டு வருகிறோம்). ஆனால் நேரு, இந்தியாவிற்கு நிரந்தர இடம் வழங்குவதற்கு முன், மாசேதுங் தலைமையிலான  சீனாவிற்கு நிரந்தர இடம் வழங்குவதே சரியாக இருக்குமென்று வாதிட்டு, சீனாவிற்கு நிரந்தர இடம் கிடைப்பதில் முன்னின்றார். 1950களில் சுதந்திர நாடாக, இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்த திபெத்தை சீனா கைப்பற்றியது. இதன் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவிக்கப்பட்டபோது, நேரு அதைப் பொருட்படுத்தவில்லை. அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ணமேனன் இன்னும் ஒருபடி மேலே பொய் திபெத்தை சீனா ஆக்கிரமித்தது சரி என்றும், சீனா இந்தியாவின் மீது எப்போதும் போர் தொடுக்காது என்றும் வாதிட்டார். சீனா போர் தொடுத்ததும், அதில் நாம் தோல்வியை சந்தித்ததும் உலகறிந்த விசயம். தற்போதும் சீனா நம்மை விழுங்க வலை விரிக்கிறது. பலவகைகளிலும் அது நம்மை நெருக்கி வருகிறது. நம்மை சுற்றியுள்ள நாடுகளை நட்பு நாடாக்கிக்கொண்டு, அந்த நாடுகளை நமக்கு எதிராக தூண்டி வருகிறது. ஆனால் இந்தியாவை தூங்கிக்கொண்டே அறுபது ஆண்ட காங்கிரஸ் விழித்துக் கொள்ளவில்லை. தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை.
சீனாவின் மக்கள் விடுதலை ராணுவமான (பி.எல்.ஆர்) 2010 ஜூலைமாதம் 13-ம் தேதியன்று இந்திய ராணுவம் ரோந்து சென்ற போது ,இந்தியாவின் அருணாச்சல் பிர‌தேச மானிலப்பகுதியில் தொடர்ந்து அத்து மீறல் செய்து வருகிறது.
China and India in Fighting Ring over Agni V-708455இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் மொத்தம் 73 சாலைகள் உள்ளன. இச்சாலைகள் மிகவும் பதட்டமான ,முக்கியத்துமானவை என கண்டறியப்பட்டு அங்கு ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. காஷ்மீரின் லடாக் பகுதியில் லே மாவட்டத்தில் இந்தியாவுக்குள் அத்துமீறி ஊடுருவிய சீன ராணுவத்தினர் இந்திய ராணுவத்தின் பதுங்கு குழிகள், கூடாரங்களை குண்டுகளை வீசி தாக்கி அழித்துள்ளனர். இந்தத் தாக்குதலிக்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியுள்ளது  சீன ராணுவம் கடந்த ஆகஸ்ட் 2011 மாதமே இந்தத் தாக்குதல் நடந்தாலும், அதை அன்றைய மத்திய அரசு மூடி மறைத்துவிட்டது. ஆனால், 2012ல்  இந்த விஷயம் வெளியி்ல் கசிந்துவிட்டது. 2009ம் ஆண்டு இதே பகுதியில் தான் சீன ராணுவத்தினர் நுழைந்து அங்குள்ள பாறைகளி்ல் சிவப்பு வண்ணத்தைப் பூசிவிட்டு, சில காலி உணவு டப்பாக்களையும் விட்டுவிட்டுச் சென்றனர். அதாவது, இந்தப் பகுதி எங்களுடையது என்ற ரீதியில் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துவிட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில். மேலும் லே மாவட்டத்தில் காஷ்மீர் மாநில அரசு மேற்கொண்ட சாலைகள் அமைக்கும் பணியை சீனா தடுத்து நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ஆயுத பலத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது நம்மை விட ராணுவ பலத்தில் சீனா பல மடங்கு முன்னணியில் உள்ளது. தற்போது அவர்களது கடற்படை மிகவும் அதி நவீனமாகியுள்ளது, விமானம் தாங்கி போர்க்கப்பல்களை நிறைய கொண்டுள்ளனர். நமது ராணுவ ரீதியிலான பலத்துடன் அவர்களை ஒப்பிட முடியாது. நாம் நிறைய பின்தங்கியுள்ளோம். இப்போதுதான் ஒவ்வொன்றாக ஆரம்பித்துக் கொண்டிருக்கிறோம். நமது படைகளை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளை யோசித்து வருகிறோம். கிட்டத்தட்ட பலப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக ராணுவத்தில் புதிதாக 2 டிவிஷன்களை இப்போதுதான் நாம் உருவாக்கியிருக்கிறோம். நமது வேகம் மெதுவாகவே உள்ளது என்பது உண்மைதான். சரியான வரைபடம் இல்லாத காரணத்தால் Line of Actual control எனப்படும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பல பகுதிகளை இந்தியா இழந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
2010 ஜனவரி நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு லே பிராந்திய ஆணையர் ஏ.கே.சாஹு தலைமை தாங்கினார். ராணுவத் தரப்பில் பிரிகேடியர் சரத் சந்த், கர்னல் இந்திரஜித் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.இக் கூட்டத்தில் லே பகுதி குறித்து இந்திய அரசுத் துறைகளிடையே வெவ்வேறு விதமான வரைபடங்கள் உள்ளது பெரும் பின்னடைவாக உள்ளது. மேலும், லே பகுதியின் சரியான புள்ளி விவரங்களும் நம்மிடம் இல்லையாம். அது குறித்த ஆவணங்களும் கூட படு மோசமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதாம். எந்தெந்த பகுதிகள் நம்முடையது என்ற முக்கியமான தகவல்கள் கூட அரசுத் துறைகளிடம் இல்லையாம். முறையான, சரியான வரைபடத்தை தயாரிப்பதில் இந்தியா படு நிதானமாக செயல்பட்டு வருவதன் காரணமாக கடந்த 20 முதல் 25 ஆண்டுகளில் கணிசமான பகுதிகளை இந்தியா, சீனாவிடம் இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த அழகில் தான் காங்கிரஸ் அரசாங்கள் தேச பாதுகாப்பில் நாட்டை வைத்திருந்தது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.
இவ்வாறு பலமுறை ராணுவத் தளபதிகள் பாரத ராணுவத்தை பலப்படுத்த வேண்டுமென்று பிரதமர் நேரு காலம் முதல் மன்மோகன் சிங் காலம் வரை அழுது புலம்பியிருந்தாலும் எதுவும் நடக்காததால் சீனாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதை புரிந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடியின் அரசு ராணுவத்தைப் பலப்படுத்துவதே முதல் வேலை என்று அதற்க்கான தீவிரப் பணியில் இறங்கியிருக்கிறது. நீர்மூழ்கி கப்பல்கள் போர் விமானங்கள், ராணுவ டாங்கிகள் என வாங்கிக் குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. சுமார் ரூபாய் 88000 கோடிக்கு ராணுவத்தளங்களுக்கு சமீபத்தில் நிதி ஒதுக்கியுள்ளது. பிரான்சை சேர்ந்த பிரபல நிறுவனத்திடமிருந்து அதி நவீன ரக போர் விமானங்களை இந்தியா வாங்கவுள்ளது சீனாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸைச் சேர்ந்த டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரூ. 50,000 கோடி மதிப்பிலான 126 அதி நவீன டஸ்ஸால்ட் ரபேல் ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்கவுள்ளது. இந்திய விமானப்படை மிகப் பெரிய தொகைக்கு வெளிநாட்டுப் போர் வி்மானங்களை வாங்கவிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் உலகின் மிகப் பெரிய பாதுகாப்பு கொள்முதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த விமானங்கள் இந்தியாவுக்கு கையளிக்கப்படும். டஸ்ஸால்ட் ரபேல் போர் விமானங்கள் மிகவும் நவீனமானவை. இந்திய விமானப்படைக்கு இந்த போர் விமானங்கள் மிகப் பெரிய பலத்தை அளிக்கும் என்பதால் இந்த ஒப்பந்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதவிர ராஜீய உறவுகளை மேம்படுத்த மோடி அரசு பெருமளவில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தென் சீனக்கடலில் துரப்பணப் பணி மேற்கொள்வது குறித்து இந்தியாவுக்கும், வியத்நாமுக்கும் இடையில் சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து சீனா தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. தென் சீனக் கடல் பகுதியில் அமைந்துள்ள அனைத்து தீவுகளுக்கும் சீனா உரிமை கோரி வருகிறது. இதன் காரணமாக, வியத்நாம், பிலிப்பின்ஸ், மலேசியா, புருணை, தைவான் ஆகிய நாடுகளுக்கும், சீனாவுக்கும் நீண்ட காலமாக பிரச்னை நிலவி வருகிறது. இந்நிலையில்,மறைமுகமாக சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவுக்கும், வியத்நாமுக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் விவகாரமாக இந்தியாவுக்கும், வியத்நாமுக்கும் இடையில் சமீபத்தில் இந்தியா ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் சீனாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அருணாசல பிரதேசத்தில் உள்ள மக்மோகன் கோடு பகுதியில், சாலை அமைக்க இந்தியா முடிவு செய்து இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனாவிற்கு எங்கள் பகுதியில் சாலை அமைக்க யாருடைய மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம் என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது கடந்த 60 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படாத குறிப்பிட்ட உள்கட்டமைப்பு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும். இதனால் சீனாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் எல்லையில் இந்தியா எதுவும் செய்யப் போவதில்லை. அருணாச்சல பிரதேசத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட நான், எனது தொகுதிக்கு உட்பட்ட மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வேன். எல்லை பகுதிகளை மேம்படுத்தும் உரிமை நமக்கு உள்ளது, இந்தியாவை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. இவ்வாறு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார். சீனாவின் சாலை உள்கட்டமைப்புக்கு இணையாக அருணாச்சலில் சங்லாங் மாவட்டத்தில் இருந்து சீனாவுடனான சர்வதேச எல்லையில் உள்ள மாகோ-திம்பு  வரை சாலை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே முதல் முறை.இதற்கு முன்னர் சீனா எதிர்ப்பு கண்டு அஞ்சி பணிகளை செய்ய விடாமல் இந்திய அரசு இருந்த காலம் மலையேறிவிட்டது.
காங்கிரஸ் அரசு தேசப் பாதுகாப்பை பலப்படுத்தாமல் இருந்த காரணத்தால் சீனா நம்மிடம் வாலாட்ட முயற்சிக்கிறது. அதனால் ராணுவ பலமே சீனாவிற்கு அச்சுறுத்தலைத் தரும் என்ற முடிவின்படி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திட்டமிட்டு பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறார். ஆனால் சில காங்கிரஸ்காரர்கள் ராணுவத்தைப் பலப்படுத்தாமல் தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு செய்த துரோகத்தைப் பற்றி கவலை கொள்ளாமல் ஆட்சிக்கு வந்த நூறு நாட்களிலேயே மோடியைப் பார்த்து ஏன் சீனா எல்லையில் வாலாட்டுகிறது என்று கேள்வி கேட்கிறார்கள்.
ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மோடி வந்த பிறகுதான் காங்கிரஸ் அரசால் மூடி மறைக்கப்பட்ட எல்லையில் நடக்கும் பல பிரச்சனைகள் வெளியே வருகின்றன. அமெரிக்கா சீனா பாகிஸ்தான் இலங்கை போன்ற நாடுகள் நம்மைமதிக்கிறது. எதற்க்காக நிதி அமைச்சரும் பாதுகாப்புத்துறை அமைச்சரும் ஒருவராகவே இருக்க வேண்டுமென்று நியமித்த பிரதமர் மோடி அவர்களின் எண்ணத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
 

கன்னி வெடிகளை விதைத்து விட்டுப் போயிருக்கும் காங்கிரஸ்…….

June 25, 2014
 தர்மபூபதி ஆறுமுகம்
பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள காங்கிரஸ் கட்சி, பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி வெற்றி பெற்று விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இதன் மூலம் பிரதமர் மோடி கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் மதச்சாயமோ அல்லது மக்கள் விரோத போக்கு என்றோ சொல்லி தினமும் ஏதாவது ஒரு வகையில் போராட்டங்கள் நடத்துவது என்ற முடிவில் காங்கிரசார் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களுடைய எண்ணம் எப்படியாவது பிரதமர் நரேந்திரமோடியின் பெயருக்கு கெட்ட பெயர் உருவாக்கி மக்களிடம் உள்ள செல்வாக்கை குறைக்க வேண்டும் என்பதே அவர்களது பிரதான நோக்கமாக இருக்கக்கூடும்.

Image

மோடி அவர்கள் பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் எவ்வளவு போராட்டங்களை நடத்தியுள்ளார்கள். அதற்கு  காங்கிரசால் நியமிக்கப்பட்டுள்ள பல அரசு அதிகாரிகள், கவர்னர்கள், அதிகாரம் கொண்ட அமைப்புகளின் தலைவர்கள் என இவர்கள் பாஜாகாவிற்கு எதிராக செயல்படுவார்கள். அரசு ரகசியங்களை கசிய விட்டு மோடி அவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்த முயலுவார்கள். இவர்களோடு சில ஆங்கில டிவி சானல்களும் மோடிக்கு எதிராக பிரச்சாரத்தை தொடங்குவார்கள். இவர்களுக்கு பின்புலமாக சில வெளிநாட்டு சக்திகள் என் ஜி ஓ க்கள் மூலம் இயங்கக்கூடும் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
பாஜாக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே தலை நகர் டெல்லியில் மின்பற்றாக்குறை ஏற்பட்டு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியினரால் போராட்டம் நடத்தப்பட்டது. ஆங்கில டிவி சானல்கள் தொடர்ந்து ஒரு வாரம் இந்த Imageபிரச்சனையை எழுப்பியது. இதற்கு முக்கிய காரணம் காங்கிரசால் நியமிக்கப்பட்ட டெல்லி கவர்னர் வேண்டுமென்றே அரசை கலந்தாலோசிக்காமல் திடீரென்று மின்வெட்டை அமல் படுத்தி மத்திய அரசிற்கு களங்கம் ஏற்படுத்த முயன்றனர். இதில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றல் ஆம் ஆத்மியினர் மின்வெட்டைக் கண்டித்து மின் துறை அமைச்சரை விட்டு விட்டு, சுகாதார அமைச்சர் வீட்டு முன் போராட்டம் நடத்தியது இவர்களின் உண்மையான முகத்தை காட்டியது.
இதே போன்று தற்போது டெல்லி பல்கழைக் கழகத்தினர், முன்னால் மத்திய அமைச்சர் கபில் சிபல் அமல்படுத்திய நான்கு வருட பட்டப் படிப்பை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் இதற்கும் பாஜாகாவை எதிர்த்து போராடுகிறது. இவர்கள் செய்த தவறுகளுக்கு பாஜாகாவை பொறுப்பாக்க காங்கிரஸ் முயலுகிறது.
இதுமட்டுமல்ல காங்கிரஸ் அரசால் அறிமுகப்படுத்தப் பட்டு தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் கட்டண உயர்வையும் எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது. நல்ல தரமான ரயில் சேவையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். சிறிது விலை உயர்வை யாருமே எதிர்ப்பதில்லை. ஆனால் காங்கிரஸ் மற்றும் டிவி சானல்கள் சிறிய விசயங்களையெல்லாம் பூதாகரமாக்க முயலுகின்றனர். இதன் மூலம் பிரதமர் மோடிக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
அதே போன்று ஹிந்தி சமூக வலைத்தளங்களில் பயன் படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கை கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் அரசால் அனுப்பப்பட்டது. அதை வேண்டுமென்றே அரசு அலுவலகங்களில் ஊடுருவியுள்ள காங்கிரஸ் அதிகாரிகள் சுற்றறிக்கையை மாநிலங்களுக்கு அனுப்பி மோடி அரசுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றனர்.
அதேபோன்று வரக்கூடிய வருடங்களுக்குக் கூட முன் தேதியிட்டு பல நிறுவனங்களிடமிருந்து, வரி வசூலித்து விட்டு போயிருக்கிறது காங்கிரஸ் அரசு. நாட்டின் நிதி நிலைமையை ஆராய்ந்த பல பொருளாதார நிபுணர்கள் கடுமையான கசப்பான முடிவுகளை பிரதமர் மோடி அவர்கள் எடுக்க வேண்டுமென்று விரும்புகின்றனர்.
60 ஆண்டுகாலம் தூங்கிக்கொண்டு ஊழலில் திளைத்து கொள்ளையடித்த காங்கிரஸ் புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் எதற்கெடுத்தாலும் மோடியை தாக்குகின்றனர். ஆக காங்கிரஸ் எப்படி எதிர்காலத்தில் நடக்கப்போகிறது என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்கள். பிரதமர் மோடி தலைமயிலான அரசு சிறப்பாக பணியாற்றி நல்ல பெயர் எடுத்து விடக் கூடாது என்பதிலேயே காங்கிரசார் அக்கறை காட்டுகின்றனர். அவர்களுக்கு நாட்டின் Imageவளர்ச்சி மீது அக்கறையில்லை மோடி பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதே அவர்களது பிரதான நோக்கம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு துணையாக காங்கிரசால் நியமிக்கப்பட்டுள்ள கவர்னர்கள் உயர் பதவியிலுள்ள அதிகாரிகள், அலுவலர்கள், பல குழுக்களின் தலைவர்கள் நிச்சயமாக பாகஜாக அரசிற்கு எதிராக உள்ளேயிருந்து போராடுவார்கள். அதற்கு துணையாக காங்கிரஸ் அதன் கூட்டணிக்கட்சிகள், இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிராக போராடி வரும் என் ஜி ஓக்கள் உள் நாட்டில் இயங்கிவரும் தேச விரோத கும்பல்கள் ஆகியவற்றோடு  ஆங்கில தொலைக் காட்சி நிறுவனங்களும் டெகல்கா கோப்ரா போஸ்ட் போன்ற காங்கிரசின் ஸ்டிங்க் ஆப்பரேசன் புகழ் ஊடகங்களும் முழு வீச்சில் செயல்படும் என்பதை மோடி அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
கிட்டத்தட்ட 2002ஆம் வருடம் முதற்கொண்டு குஜராத்தில் சந்தித்து வந்த பிரச்சணைகளை போன்றே மோடி அரசு இப்போதும் எதிர்கொள்ள வேண்டி வரும். ஆகவே மோடி அரசு இந்த பிரச்சணைகளை புரிந்து கொண்டு காங்கிரசால் நியமிக்கப்பட்டுள்ள கவர்னர்கள். சில குழுக்களின் தலைவர்கள் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் போன்றவர்Imageகளை தயவு தாட்சன்யமின்றி நீக்கி விடுவதே சிறந்ததாக இருக்கும். பத்து சதவீகித உறுப்பினர்கள் இல்லாத காங்கிரசாருக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி கொடுக்கக் கூடாது. அந்த வாய்ப்பு அனைத்து எதிர்கட்சிகளுக்கும் ஒவ்வொரு குழுவிலும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். போராட்டங்களை நசுக்க வேண்டும்.  காங்கிரசார் விமர்சனங்களையும் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. அவர்களுடன் கை கோர்க்க போகிறவர்களில் முக்கியமானவர்கள் கம்யூனிஸ்ட்கள். இந்திய அரசியலில் நீர்த்துப் போனவர்கள். மக்கள் படிப்படியாக நிராகரித்து இன்று அரசியல் அனாதையாக உள்ளனர். இவர்களைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்Imageலை. காங்கிரசின் தேச துரோகங்களையும், அவர்களின் ஊழல்களையும் அம்பலப்படுத்த வேண்டும். சமூக ஆர்வலர்கள் என்று திரிந்து கொண்டிருக்கும் தலைவர்களின் முக மூடி கிழித்தெறியப்பட வேண்டும். அதே போன்று உள்நாட்டில் வெளி நாட்டுத் தீவிரவாத செயல்கள் அரங்கேறுவதற்கு உள் நாட்டில் உள்ள சிலரது ஆதரவே காரணம். அந்த அரசியல் வாதிகளையும், அந்நிய நாட்டிலிருந்து நிதி பெற்று தேச துரோக காரியங்களில் ஈடுபடும் என் ஜி ஓக்கள் தடை செய்யப் பட வேண்டும். வெளிநாட்டு சக்திகளுக்கு யாரும் துணை போகாத அளவிற்கு பொடா போன்ற  கடுமையான உள் நாட்டுப் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்.
திட்டக் கமிசனை மாற்றி அமைக்கப் போவதை காங்கிரஸ் எதிர்க்கிறது. இது குறித்து பாஜாகாவைக் கேள்வி கேட்க காங்கிரசிற்கு உரிமையில்லை. ஆளும் பாஜாகா திறமையான ஆட்சியைக் கொடுக்க எந்த முடிவெடுக்க வேண்டும் என்ற உரிமை பாஜாகாவிற்குத்தான் இருக்கிறது. காங்கிரசை மட்டுமல்ல தோழமைக் கட்சிகளைக் கூட கலந்து ஆலோசிக்க வேண்டிய அளவிற்கு யாருடைய தயவிலும் பாஜாக ஆட்சி புரியவில்லை.
ஆகவே துணிந்து பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவெடுக்க வேண்டும். யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. நாட்டு நலனே முக்கியம்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக காங்கிரஸ் விதைத்து விட்டுப் போயிருக்கும் இந்த கன்னி வெடிகளை அகற்றினால் மட்டுமே நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.

 

அரசியல் செய்யத் தெரியாத பாஜாக!

June 13, 2014
Posted by தர்மபூபதி ஆறுமுகம்
பாராளுமன்ற தேர்தலில் கரைந்து போன காங்கிரஸ் கட்சி திருந்தியதாகத் தெரியவில்லை.பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விவாதத்தில் பங்கு கொண்டு பேசும்போது ஒரு கருத்தை உதிர்த்திருக்கிறார். அதாவது பாஜாக கூட்டணி 39% (பாஜாக மட்டும் 31%) வாக்குகளையே பெற்றிருக்கிறது. 69% பேர் பாஜாகாவை ஆதரிக்கவில்லை என்பதை அதன் தலைவர்கள் புரிந்து கொண்டு ஆணவத்தோடு நடக்க கூடாது என திருவாய் மலர்ந்தருளியுள்ளார். நான் இவர் மீது மதிப்பு கொண்டிருந்தேன். காரணம் கபில்சிபல் போன்றோ அல்லது திக்விஜய்சிங் போன்றோ பொறுப்பில்லாமல் பேச மாட்டார் என நினைத்திருந்தேன். ஆனால் இவரும் விதி விலக்கல்ல என்று நிரூபித்து விட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளாக இந்த நடை முறை பின்பற்றப்பட்டு வருகிறது. சுமார் 60 ஆண்டுகாலம் காங்கிரஸார் ஆட்சியில் இருந்துள்ளனர். நமது தேர்தல் முறை பல கட்சி பங்கெடுக்கும் முறைகளினால் பெரும்பான்மையை பிரதிபலிக்கவில்லை என்பது உண்மை என்ற போதிலும் இவ்வளவு காலம் வாய்மூடிக்கொண்டு ஆட்சி அதிகாரங்களை அனுபவித்தவர்கள் பேசும் போது தான் நமக்கு கோபம் வருகிறது. அப்போது இந்த விகிதாச்சார முறை குறித்து பேசியிருக்கலாம். தற்போது பாஜாக பெறும் வெற்றி பெற்றதை தாங்கிக்கொள்ள முடியாததால் இவர்கள் புலம்புகின்றனர்.

congress performance 2014

அதேசமயம் இவ்வளவு காலம் ஆட்சி புரிந்த காங்கிரஸ் கட்சி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியில் இருந்தது என்பதை விளக்குவாரா? பொதுவாகவே காங்கிரஸ் தலைவர்கள் பொய்களை அவிழ்த்து விடுவதில் வல்லவர்கள். சிறிய விசயங்களையும் தனது வாதத்திறமையால் திசை திருப்புவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. அதே போன்று படுதோல்வி அடைந்த திமுகாவும் அதன் உதிரிக் கட்சிகளும் டெபாசிட் இழந்தும் அவர்கள் திருந்தவில்லை. இவ்வளவு நாட்கள் பேசாமல் இருந்துவிட்டு தோல்வி அடைந்ததும் வாக்கு % பற்றி பேசுவது கருணாநிதிக்கு கை வந்த கலை. இவர் மத்தியில் காங்கிரஸோடு கைகோர்த்து ஆட்சியில் பங்கு பெற்ற போது காங்கிரஸின் வாக்கு% என்னவென்று கலைஞருக்கு தெரியுமா?

 

காங்கிரஸ் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தல்களில் எத்தனை சதவீத வாக்குகள் பெற்று ஆட்சி அமைத்திருந்தது என்பதை பாராளுமன்றத்தில் ஆளும் பாஜாக கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். தற்போது காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் எத்தனை சதவீத வாக்குகள் பெற்று ஆட்சி நடத்துகிறது என்பதை அவர்கள் விளக்கியிருந்தார்கள் என்றால் அவர்களது வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியும். தோற்ற பிறகு இது போன்ற வாதங்களை எழுப்புவது வேதனைக்குரிய விசயமாகும்.
இதோ சில புள்ளி விபரங்கள்:
கடந்த 2009பாராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று  மத்தியில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் பெற்ற வாக்குகள் வெறும் 28.55%. ஆனால் தற்போது 2014 பாராளுமன்றத்தேர்தலில் பாஜாக கூட்டணி அமைத்து 39% வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜாக மட்டுமே 31% வாக்குகளைப் பெற்றுள்ளது. இவர்கள் தங்கள் நிலைமை மறந்து பேசுவது வேடிக்கையாகவும் வினோதமாகவும் உள்ளது.
 congress %
சரி பாராளுமன்றத்தேர்தலை விடுங்கள். தற்போது சில மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி புரிந்த போது எத்தனை சதவீகித வாக்குகள் பெற்று ஆட்சியில் இருந்தார்கள் என்பதை அவர்கள் விளக்குவார்களா? அவர்கள் என்ன பெரும்பாண்மை பெற்றா ஆட்சி புரிந்தார்கள் அல்லது ஆட்சி புரிகிறார்கள்?

Untitled

பாஜாகாவினர் இந்த கேள்விகளை காங்கிரசாரிடம் கேட்டிருக்க வேண்டும்? பாஜாகா அரசியல் எப்படி செய்வது என்பதை காங்கிரசிடமிருந்து எப்போது கற்றுக் கொள்வார்கள்?

நிஜத்திற்கும் நிழலுக்கும் வித்தியாசமுண்டு…

June 11, 2014
POSTED BY தர்மபூபதி ஆறுமுகம்
நமது நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்க தொண்டு நிறுவனங்கள் முயலுகிறது என பாரத நாட்டின் உளவுத்துறை, பாரதப் பிரதமருக்கு அறிக்கை சமர்ப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.மேலும்  இதற்காக இந்த தொண்டு நிறுவனங்களுக்கு பெருமளவில் வெளி நாட்டு நிதி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் நான்கு பெரிய தொண்டு நிறுவனங்கள் இத்தகைய தேச விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி ஆச்சரியப்படத்தக்க ஒன்று அல்ல. ஏற்கனவே தேசபக்தி கொண்டோர் இந்த ஆபத்தை பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் வாக்கு வங்கி அரசியலால் சோனியா காந்தியின் காங்கிரஸ் அரசாங்கம் இதை கண்டு கொள்ளவில்லை. இது பெருமளவில் நாட்டை பலவீனப்படுத்தியுள்ளது மட்டுமல்ல,பாதிப்புக்கும் உள்ளாக்கியிருக்கிறது.
மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு காங்கிரஸ் 60 ஆண்டு காலமாக  நாட்டை சீரழித்ததை ஒரே நாளில் சரி செய்து விட முடியாது என்பதை நாம் நன்கு அறிந்து வைத்திருந்தாலும் கீழ்கண்ட மூன்று விசயங்களில் பிரதமர் தனி கவனம் எடுக்க வேண்டுமென்று தேசபக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள். காரணம் இந்த விசயங்களில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு அதிக அளவில் உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டுமென்பது தான்.
 1. வெளிநாட்டிலிருந்து பெருமளவில் நிதி பெறும் தொண்டு நிறுவனங்கள்.
 2. சமூக ஆர்வலர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக் கொள்ளும் சில அறிவிலிகள்
 3. ஊடகங்களிலே ஊடுறுவியிருக்கும் போலி பத்திரிக்கையாளர்கள்
இந்த மூன்று சக்திகளை உளவுத்துறை மூலமாக அடையாளம் கண்டு அவர்களை அம்பலப்படுத்தி சட்டத்தின் மூலம் நிறுத்தி தண்டிப்பது மிக முக்கியமானது மட்டுமல்ல அவசரமானதும் கூட.
வெளிநாட்டிலிருந்து பெருமளவில் நிதி பெறும் தொண்டு நிறுவனங்கள்:
தமிழகத்தில் பல கிருத்துவ நிறுவனங்களுக்கு பெருமளவில் வெளிநாட்டிலிருந்து நிதி வருகிறது. இதன் மூலம் பெருமளவில் மதமாற்றம் நிகழ்கிறது. தமிழகத்தில் மட்டும் 3500 க்கும் மேற்பட்ட  வெளிநாட்டு நிதி உதவி பெறும் நிறுவனங்கள் இருக்கின்றன. இந்தியாவிலேயே வெளிநாட்டு நிதி அதிகம் வரும் மாநிலம் தமிழகம் என்பதற்கு  மத்திய அரசாங்கத்தின்  நிதித்துறை வெளியிட்டிருக்கும் புள்ளி விபரங்களே ஆதாரமாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இது குறித்த எனது கட்டுரையை இந்த இணைய தளத்திலேயே காணலாம்.இதற்கு தமிழகத்தில் பெருமளவில் இயங்கும் மதம்மாற்றும் தொலைக்காட்சி சானல்களை கூறலாம். நமது கலாச்சாரத்தை பறை சாற்ற முயலும் ஒரு சில தொலைக்காட்சி சானல்கள் விளம்பரங்கள் பெற்ரும் இயங்குவதற்கு திண்டாடுவதை காணலாம். அப்படியிருக்கும் போது மதமாற்ற பிரச்சாரம் செய்வதற்கு இந்த தொலைக்காட்சி சானல்களுக்கு நிதி எப்படி எங்கிருந்து வருகிறது என்பதை ஆராய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
 times-now
 
timesnow5
                      
times-now-6
அது மட்டுமல்ல கூடங்குளம் அணு உலை வரக்கூடாது என்பதற்கு சில தொண்டு நிறுவனங்கள் உதயக்குமாருக்கு பின்னணியில் செயல்படுவதாகவும், அவருக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருவதாகவும் காங்கிரஸ் அரசாங்கமே குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் ஏன் அவர்கள் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது சோனியா காந்தி அம்மையாருக்கே வெளிச்சம். அணு மின்  நிலைய போராட்டத்தை முன்னின்று நடத்துபவர்கள் கிருத்துவ பாதிரிகள். அவர்கள் மீது பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. இருந்தும் அவர்கள் மீது இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. (ஏற்கனவே இது குறித்து நான் எழுதியுள்ள கட்டுரைகளை https://adboopathy.wordpress.com/மதமாற்றம் படிக்கலாம்).  ஆகவே பாரதத்தை பலவீனமாக்கும் இந்த தொண்டு நிறுவனங்களின் நடவடிக்கைகளை முடக்குவதோடு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதோடு வெளிநாட்டு நிதி பெறுவோரை சட்டங்களின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும். தவறான காரியங்களுக்கு நிதி பயன் படுத்துவதை நிறுத்த வேண்டும்.
சமூக ஆர்வலர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக் கொள்ளும் சில அறிவிலிகள்:
சமூக ஆர்வலர்கள் என்று சில பேர் தங்களை தாங்களே பறை சாற்றிக் கொண்டு நாட்டில் எந்த விசயங்கள் ஆனாலும் குறிப்பாக ஹிந்து சமுதாயத்தை நசுக்குவதும் சிறுபான்மை என்ற பெயரால் தீவிரவாதிகளுக்கு பகிரங்கமாக ஆதரித்து பேசுவதிலும், தனது மூக்கை நுழைத்துக் கொண்டு மனித உரிமைகள் பற்றி பேசுவதும், ஹிந்துக்கள் பாதிக்கப்படும்  விசயங்களில் மவுனம் சாதிப்பதும்  இவர்களின் அன்றாட வேலை. இவர்களை பேணி காத்து வளர்த்திய பெருமை சாட்சாத் சோனியா காந்தி அவர்களையே சாரும். தேசிய ஆலோசனைக் குழுவின் (NATIONAL ADVISORY COUNCIL)  தலைவராக இருந்தவர் சோனியா காந்தி. அதன் உறுப்பினர்களில் பெரும்பாலோர் ஹிந்து எதிர்ப்பு சிந்தனை கொண்டோர் மட்டுமல்ல தேச விரோத எண்ணங்கள் கொண்டோரும் கூட. அருந்ததி ராய் போன்றவர்கள் வெளிப்படையாகவே காஷ்மீரை பாரதத்திலிருந்து பிரிக்க ஆதரவு தெரிவிப்பவர். இவர்களில் மத அடிப்படைவாதிகள் பல பேர் இருந்தனர். இவர்களால் மதக்கலவர தடுப்பு சட்டம் வரையப்பட்டது. இந்த சட்ட வரைவு பெரும்பாலும் ஹிந்துக்களை குறிவைத்து தயாரிக்கப்பட்டது. நல்ல வேளை தேசபக்தர்களின் எதிர்ப்பாலும் இறைவன் அருளாலும் சட்டமாக்கப்படவில்லை. டாக்டர் சுப்ரமணியன் சுவாமியை தேசிய ஆலோசனைக் குழுவின் chair person national advisory council) தலைவராக நியமிக்கலாம்.
மறக்க முடியாத செய்தியை நினைவு படுத்துவது எனது கடமையாகும்.அமெரிக்க அரசாங்கத்துக்குள் பாகிஸ்தானுக்கு ஆதரவானதொரு பிரச்சாரத்தை சட்டவிரோதமாக செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பாகிஸ்தான பூர்வீகம் கொண்ட டாக்டர் குலாம் நபி ஃபாய் என்ற நபர் அமெரிக்க அதிகாரிகளால் 2011ல்கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம். வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றுக்காக தான் செயலாற்றுவதை அமெரிக்க அதிகாரிகளிடத்தில் பதிவு செய்யத் தவறியதாக காஷ்மீர் அமெரிக்க சபை ( KAC ) என்ற அமைப்பின் இயக்குநரான செய்யது குலாம் நபி ஃ பாய் மீது குற்றம் சாட்டப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் நிழல் அமைப்பாக செயல்பட்டு வந்திருக்கிறார். இவருக்கு பாகிஸ்தான் அரசின் ஐ.எஸ்.ஐ அமைப்பு இதுவரை நான்கு மில்லியன் டாலருக்கு மேலாக அனுப்பியிருக்கிறது. இந்த அமைப்பின் முக்கிய பணி காஷ்மீருக்கான சமூக அமைப்பு என்ற பெயரில் அமெரிக்க அரசாங்க தலைவர்கள், அதிகாரிகள், மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசை ஆதிக்கம் கொண்டுள்ள பிரமுகர்கள், அதிகாரிகள் இவர்களை, காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படவும், அமெரிக்க அரசை, பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவிற்கு எதிராகவும் செயல் பட வைப்பது ஒன்றே  காஷ்மீர் அமெரிக்க சபை நோக்கம். இதற்க்காக அமெரிக்க காங்கிரஸ் செனட் உறுப்பினர்களை வளைப்பது, கருத்தரங்குகளில் காஷ்மீர் பிரிவினை வாதத்திற்கு ஆதரவாகப் பேசவைத்தல் போன்றவற்றின் மூலம் திட்டமிட்டு, ஐ.எஸ்.ஐயின் ஒப்புதலோடு நடைபெற்றுவந்திருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து வரும் அனைத்து அதிகாரிகளையும், அமைச்சர்களையும்,  பிரிவினைவாதிகளையும் இவர் சந்தித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இத்தகைய ஐஎஸ்ஐ தொடர்பு கொண்ட இந்த நபர் நடத்திய மாநாட்டில் நமது காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டகாஷ்மீருக்கான பிரதமரின் பிரதிநிதி (PM’S J & K INTERLOCUTOR) திலிப் படுங்ககர் மற்றும் பிரதமரின் ஊடக ஆலோசகர் ஹரிஷ் கர்ரே ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டது  நமது அரசாங்கத்தின்  தீவிரவாத மென்மை போக்கை மட்டுமல்ல காஷ்மீர் குறித்த அக்கறையின்மையையும் வெளிப்படுத்துகிறது. ஐ எஸ் ஐ தொடர்பு கொண்டோரை நமது பிரதி நிதியாக நியமித்தால் நாடு உருப்படுமா? பாரதத்திற்கு எதிராக சோனியா காந்தியின் நடவடிக்கைகளையும் இந்த செயல் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.
இது போன்று சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் திரியும் தேச விரோதிகளை கண்டறிந்து அவர்களுக்கு எங்கிருந்து நிதி ஆதாரங்கள் வருகிறது அவர்களின் பின்பலம் என்ன என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் தலையாய கடமை ஆகும். குறிப்பாக தமிழகத்தில் பல பேர் இத்தகைய தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இவர்களில் அரசியல் கட்சி நடத்தி வரும் சில தலைவர்களும் நாத்திகம் என்ர பெயரிலும், தமிழ் பிரிவினை வாதம் தூண்டுவோரும் அடங்குவர். குறிப்பாக தமிழகத்தில் பிரிவினை வாதத்தை தூன்டி வரும் சில அமைப்புகளை தடை செய்யப்பட வேண்டும். கருத்து சுதந்திரத்திற்கும் கட்டுப்பாடு இருக்க வேண்டும். மத்திய அரசின் நிதியை பெற்றுக் கொண்டு இந்திய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் செய்யும் தி க வீரமணி போன்றோர் நடத்தும் கல்வி நிறுவனகள் கண்காணிக்கப்பட வேண்டும். பெரும்பாலான சமூக தொண்டு நிறுவனங்கள் போர்டு பவுன்டேசனிடமிருந்து நிதிகள் பெற்று தேச விரோத செயலகளில் ஈடுபடுகிறது. இதில் கெஜ்ரிவால் கட்சியும் அடங்கும். அதுமட்டுமல்ல காங்கிரஸின் மூத்த தலைவர் திக்விஜைய்சிங் சர்வதேச தீவிரவாதி பின்லேடனை பின்லேடன் ஜி என்று பாராட்டியதையும் நினைவில் கொள்ள வேண்டும். மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர் அதிகாரி ஹேமந்த் கர்கரே. ஆனால் தாக்குதலில் அதிகாரி ஹேமந்த் கர்கரே கொன்றவர்கள் ஹிந்து தீவிரவாத இயக்கத்தை சார்ந்தவர்கள் என்று அப்பட்டமாக பொய் சொன்னவர். ஆகவே இவருக்கு தீவிரவாத தலைவர்களுடன் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதை ஆராய வேண்டும்.
ஊடகங்களிலே ஊடுறுவியிருக்கும் போலி பத்திரிக்கையாளர்கள்:
சமீப காலமாக பெரும்பாலான ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில தொலைக் காட்சி சானல்கள் ஏதோ பாரதத்தைக் காக்க வந்த பண்பாளர்கள் போன்று நாடகமாடுகிறார்கள். மக்களிடையே பிரிவினை வாதத்தை தூண்டுவதே இவர்களது வேலை. ஒரு ஹிந்துத் தலைவர் தீவிரவாத கும்பலால் கொலை செய்யப்பட்டால் மவுனமாகிவிடும். ஆனால் சிறுபான்மையினர் தாக்கப்பட்டால் அதற்கு கண் மூக்கு வாய் என்று கதை வசனம் எழுதி விசயத்தை பரபரப்புடன் வெளியிட்டு செகுலர் வா(வியா)தியாக காட்டிக் கொள்வார்கள். ஒரு பெண் கற்பழிக்கப்பட்டார் என்றால் கற்பழிப்பு ஒரு குற்றமாக காண்பிப்பதை விட்டு விட்டு தலித் என்றோ முஸ்லீம் என்றோ அடையாளம் காட்டுவது தான் இந்த ஊடகங்களின் வேலை. இதன் மூலம் மக்களை தேசீய நீரோட்டத்திலிருந்து பிரித்து வைப்பதே இவர்களின் பிரதான நோக்கம். சமீபத்தில் பூனாவில் ஹிந்து மென்பொறியாளரும், ஒரு முஸ்லீம் பொறியாளரும் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் மீடியாக்கள் எப்படி செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.
 photo 2
 
 
தொலைக்காட்சி சானல்களில்  பணியாற்றும் பெரும்பாலோனோர் கம்யூனிஸ்ட்கள் ஆவார். இவர்கள் உண்மையான நடுநிலையோடு செய்திகளை வெளியிட வேண்டியவர்கள் விவாதம் என்ற பெயரில் பாரபட்சமாக ஒரு தேச பக்தரை எதிர்த்து பல தேச விரோத கும்பல்களை சார்ந்தவர்களை வாதாட விடுவதும் அப்போது ஹிந்துக்களுக்கு எதிராக வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டுக்களை பேச விடுவதும் ஹிந்து ஆதரவாளரை அல்லது பாஜாகா வினரை பேச விடாமல் தடுப்பதும் தொலைக்காட்சி சானலின் ஆங்க்கரின் பிரதான பணியாக இருப்பதைப் பார்க்கலாம். பெரும்பாலான் ஆங்கில சானல்கள் வெளி நாட்டினரால் நிர்வகிக்கப்படுவதை  காணலாம்.
இப்படி ஜர்னலிசம் என்ற பெயரில் மக்கள் செல்வாக்கற்றவர்களான கம்யூனிஸ்ட்களும் மனித உரிமை ஆர்வலர் என்ற பெயரில் திரியும் போலிகளும் ஊடகங்களை ஆக்கரமித்துக் கொண்டுள்ளார்கள். நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வாரம் ஆகாத நிலையில் அவரது ஆட்சி மீது வசை பாடுவது அவர்களது எண்ணங்களை பிரதி பலிக்கிறது. இந்த போலி செக்கூலர்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது டெல்லியில் உள்ள ஜவர்கலால் நெரு பல்கலைக்கழகம் ஆகும். இந்த பல்கலைக்கழகத்தை பெருமளவில் ஆக்கிரமித்துக் கொண்டிருப்போர் கம்யூனிஸ்ட்களும், நக்சல் தீவிரவாத ஆதரவாளர்களும் தான். எந்த பிரச்சனைகளானாலும் உடனே மனித உரிமை என்ற பெயரில் இந்த அறிவு(வில்லாத)ஜீவிகள் அரசாங்கத்திற்கு எதிராக அறிக்கை விடுவார்கள். இவர்கள் தலித் என்ற பெயரிலோ, சிறுபான்மை இன ஆதரவாளர்கள் என்ற பெயரிலோ, பெண் உரிமைக்காகப் பாடுபடும் அமைப்பின் பெயரிலோ தன்னை அடையாளப்படுத்திக் கொள்வார்கள். 

photo 1

இந்த போலி பத்திரிக்கையாளர்கள் தாங்கள் நினைக்காத அரசாங்கம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுவிட்டதை சகித்துக் கொள்ள முடியவில்லை.இந்தியா பலம் வாய்ந்த நாடாகி விடுமோ என்ற கவலை அவர்களை வாட்டுகிறது. இனி அவர்களது கவனம்  மோடி அரசாங்கத்தின் பெயரைக் கெடுக்க வேண்டுமென்றே இருக்கும்.  பொய் கதைகளையும் கற்பனைகளையும் அவிழ்த்து விடுவார்கள். ஸ்டிங்க் ஆப்பரேசன் என்ற பெயரில் வேண்டுமென்றே ஒரு சினிமாவை உருவாக்குவார்கள். இவர்கள் அரசாங்கத்தில் உள்ள அலுவலகங்களில் ஊடுருவி அரசு ரகசியங்களை அம்பலப்படுத்த முயலுவார்கள். கடந்த முரை இந்த பொறுப்பை டெகல்கா மற்றும் கோப்ரா போஸ்ட் ஏற்றுக் கொண்டதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு நீண்ட காலமாக அரசு அலுவலகங்களில் பனியாற்றும் அதிகாரிகளும் உடந்தையாகக் கூடும். ஆகவே அரசாங்கம் தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவர்கள் வெளிநாட்டு சக்திகளின் ஏஜென்ட்கள் என்பதை மறந்து விடக் கூடாது. பிரதமர் மோடி அவர்களின் பெயரை கெடுக்க வேண்டுமென்பதில் குறியாக இருப்பார்கள்.
இந்த வாரம் ஒரு செய்தி. ஊடகங்கள் செய்திகளை எப்படி திரித்து அரசாங்கத்திற்கு கெட்ட பெயரை சம்பாதிக்க முயலுகிறது என்பதற்கு ஒரு சான்று.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சானல் டெல்லியில் ஏற்பட்டுள்ள மின்வெட்டிற்கு  பாஜாகா காங்கிரஸ் ஆம் ஆத்மி ஒருவர் மேல் ஒருவர் பழி சுமத்திக் கொள்கிறார்கள் என்பது செய்தி. அதாவது மறை முகமாக பாஜாகாமீதும் மின்வெட்டிற்கு பொறுப்பு உள்ளது போல பிரச்சாரம் செய்யப்படுகிறது. மத்தியில் ஆட்சிக்கு வந்து இருவாரங்களே ஆகியுள்ள நிலையில் பாஜாகா எப்படி பொறுப்பாக முடியும்? அதுவும் பாஜாகா டெல்லியில் ஆட்சியில் இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்து வந்தது காங்கிரஸ்  அரசு. அதன் பிறகு ஆம் ஆத்மி. பாஜாகாவை குறை சொல்லுவது என்ன நியாயம்?
இந்த போலிகளின் உண்மையான முகம் தெரிகிறது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பொய்களை அரங்கேற்றம் செய்ய அரசு அனுமதிக்கக் கூடாது. நிஜத்திற்கும் நிழலுக்கும் வித்தியாசமுண்டு. அதை மறந்து விடக் கூடாது. அரசாங்கத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு இந்த மூன்று விசயங்களில் தீவிர களை எடுப்பு நடத்தப் பட வேண்டும்.
அரசாங்கம் செய்யுமா?

சோனியாவிற்கு ஏன் இவ்வளவு ஆவேசம்?

August 10, 2012
Posted by தர்மபூபதி ஆறுமுகம்
பாராளுமன்றத்தில் தலைவர்கள் காரசாரமாக விவாதிப்பதும்,சில சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்பதும் அதற்கு மாற்றுக்கருத்துக்கள் கொண்ட கட்சியினர் எதிர்ப்பதும்,அதை திரும்பக் கோருவதும் வழக்கமான ஒன்று. ஆனால் கடந்த இரு நாட்களாக சில ஊடகங்கள் குறிப்பாக காங்கிரஸ் சார்பு ஊடகங்களாக செயல்பட்டு வரும் தொலைக் காட்சிகள் சில பெருமளவில் சோனியா காந்தி ஆவேசப்பட்டதை பெரிதாக காட்டி ஒரு பெரும் தலைவர் போன்று காண்பிக்க முயன்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் திரு அத்வானி அவர்கள் விவாதத்தை துவக்கிவைத்து பேசும் போது சட்டவிரோதமான அரசு என்று வர்ணித்தார். பல ஆயிரம் கோடிகளை, கொட்டி இறைத்து, ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டவிரோதமானது’ என, அத்வானி பேச, வழக்கத்துக்கு மாறாக சோனியா வெகுண்டெழ, பார்லிமென்ட் கிடுகிடுத்துப் போனது. அதாவது கடந்த தேர்தலுக்கு முன்னர் நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது வாக்குகள் பெற விலை பேசப்பட்டதை குறிப்பிட்டு பேசினார். இதைக்கண்டு சோனியா ஆவேசமடைந்து தனது கட்சி உறுப்பினர்களை இந்த கருத்துக்களை எதிர்க்குமாறு ஆவேசமாக கூறியதையே ஊடகங்கள் பெரிதுபடுத்தியது.
விவாதத்தின் மீது பேச, முதலாவதாக அத்வானி அழைக்கப்பட்டார். அவர் பேசியதாவது:
ஊடுருவலைத் தடுக்காத அரசின் மெத்தனம்:
அசாம் இன கலவரங்களுக்கு மூல காரணமே, வங்கதேசத்தவர் ஊடுருவல் தான்.
அதை சரிவர கையாள, மத்திய அரசும், மாநில அரசும் மறுக்கின்றன. சரிவர கையாள, மத்திய அரசும், மாநில அரசும் மறுக்கின்றன.
ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு, இப்பிரச்னையை பல ஆண்டுகளாக, காங்கிரஸ் மெத்தனமாக கையாண்டு வருகிறது. உண்மையில் ஒரு எரிமலை போல உள்ளது அசாம் மாநிலம். எப்போது வேண்டுமானாலும், எதுவும் நிகழலாம்.
அசாமில், பல ஆண்டுகளாக நடைபெற்று வரும், வங்கதேசத்தவர் ஊடுருவல் காரணமாக, அங்குள்ள 11 மாவட்டங்களில், வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் பெரும்பான்மையானவர்களாகி விட்டனர். சொந்த மாநிலத்திலேயே அசாம் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
கலவரத்திற்கு முக்கிய காரணமே வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் இங்கு ஊடுருவி இருக்கின்றனர். சட்டவிரோதமாக ஊடுருவி உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அசாம் கலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது பிரதமரின் முக்கிய கடமை என்றார்.
அதேநேரத்தில், காலங்காலமாக வாழ்ந்து வந்த அசாம் மக்கள் சிறுபான்மையினராகி விட்டனர்.
இது முழுவதுமாக தெரிந்தும் கூட, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.
பல ஆயிரம் கோடி ரூபாய்களை கொட்டி இறைத்து, ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஒரு சட்டவிரோதமான அரசு.
ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களை கூட, இந்த அரசு சிறையில் தான் அடைத்தது.
இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டதாக, மத்திய அரசு இருப்பதால்தான், அசாம் பிரச்னை தீவிரமாகியுள்ளது.
இவ்வாறு அத்வானி பேசிய போது, ஆளும் கட்சி எம்.பி.,க்கள் எழுந்து, கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் ஏன் காங்கிரஸ்காரர்கள் கோபப்பட வேண்டும்? அப்படியென்றால், முஸ்லீம்கள் ஊடுருவதை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்று தெரிகிறது.
சோனியா கையாட்டிப் பேசியது – பாராளுமன்றம் அமளியானது: முதல் வரிசையில் அமர்ந்திருந்த சோனியா, மிகுந்த ஆவேசமாக, “சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்’ என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் கேட்க, நிலைமை சூடாகிப் போனது. தன் கருத்தை அத்வானி வாபஸ் வாங்க வேண்டும் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆவேசமாகப் பேசினர். சோனியா தன் இருக்கையில் அமர்ந்தபடியே, பின்புறம் திரும்பி, தன் கட்சி எம்.பி.,க்களை, எழுந்து குரல் கொடுக்கும்படி கூற, சபை அமளியானது. உறுப்பினர்கள் அமைதி காக்கும்படி சபாநாயகர் மீராகுமார் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் பலனில்லை. “அத்வானி பேசிய பேச்சை, நான் முழுவதுமாக ஆராய்ந்து விட்டு, ஆட்சேபகரமான தகவல் ஏதும் இருந்தால், அதை நீக்க நடவடிக்கை எடுக்கிறேன்’ என்றும் கூறிப் பார்த்தார். அதற்கும் அசைந்து கொடுக்க காங்கிரஸ் எம்.பி.,க்கள் தயாராக இல்லை. குறிப்பாக, சோனியாவின் கோபத்தில் தாங்களும் பங்கெடுக்க வேண்டுமென்ற முனைப்புடன், அனைத்து காங்கிரஸ் எம்.பி.,க்களும் ஆவேசமாக குரல் கொடுத்தபடி இருந்தனர்.
பொதுவாக கட்சியின் தலைவர்கள் தங்களது உறுப்பினர்கள் முறை தவறி பேசும்போது அமைதிகாக்கும்படி கூறுவார்கள் அல்லது தூண்டிவிடும்படி நடந்து கொள்ள மாட்டார்கள்.எப்போதுமே ஆளுங்கட்சி தலைவர்கள் சபைகளை ஸ்தம்பிக்கவைக்கும்படி நடந்து கொள்ள மாட்டார்கள்.ஆனால் நேற்று சோனியாவின் செயல்கள் கண்டிக்கத்தக்க ஒன்று. இரண்டுவகைகளில் சோனியாவின் செயல்கள் பாராளுமன்றத்தை அவமதிக்கும் செயல்களாகத் தெரிகிறது. ஒன்று ஒரு உறுப்பினரின் கருத்து அல்லது செயல்பாட்டை கண்டிக்க வேண்டுமென்றால் அவைத்தலைவரிடம் தான் முறையிட வேண்டுமே தவிர உறுப்பினரிடம் நேரிடையாக கைகாட்டி ஆட்சேபிப்பது தவறான ஒன்று. இரண்டாவது ஆளுங்கட்சியின் தலைவர் எழுந்து திரு அத்வானியின் கருத்துக்களை அவைத்தலைவரின் அனுமதி பெற்று மறுத்து பேசியிருக்க வேண்டும். அதற்கு திராணியில்லாத சோனியா தனது கட்சி உறுப்பினர்களை ஆவேசமாக தூண்டிவிடுவது பாராளுமன்ற முறைகளை அவமதிப்பதாகும். அத்வானியின் குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே ஏற்கனவே கூறப்பட்ட ஒன்றாகும். இதில் புதிய விசயம் எதுவும் ஒன்றில்லை.
பின் ஏன் சோனியாகாந்திக்கு இவ்வளவு கோபம், இவ்வளவு நாட்கள் பாராளுமன்ற விவகாரங்களில் பேசாத சோனியாவிற்கு ஏன் இவ்வளவு ஆவேசம்?
ஒன்று அஸ்ஸாம் கலவரத்திற்கு வங்க தேச முஸ்லீம் ஊடுருவல்காரர்கள் காரணம் என்று கூறியது, அவருக்கு கோபத்தைக் கிளப்பிவிட்டிருக்கலாம். காரணம். முஸ்லீம் வேறு நாட்டவர்கள் ஊடுருவி இந்த நாட்டைக் கைப்பற்றினாலும் அவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் அதைக் கண்டிப்பதை ஊக்குவித்தால் முஸ்லீம்கள் வாக்கு போய் விடும் என்பதால் இருக்கும் என்று நம்பலாம்
அல்லது நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது உறுப்பினர்களை விலைபேச சோனியாவின் ஆதரவோடு நடந்ததை பேசியதால் அவருக்கு ஆவேசமாகியிருக்கலாம்.
இவ்வளவு வீரம் உள்ள சோனியா, பாராளுமன்றத்தில் நடக்கும் ஆரோக்கியமான விவாதங்களில் பங்கு கொள்வாரா என்பதை எதிர்காலம் பதில் சொல்லும்!